திங்கள், 26 ஜூன், 2017

ashok house



இன்று (22.04.2017)மதியம் நமது ஊரகத்திலுள்ள C2/381 வீட்டில் புகைப்போக்கியும் அதனுடன் சேர்ந்த மேற்கூரையும் இடிந்து விழுந்ததில் சமையலறையில் இருந்த பாத்திரங்கள் ஸ்டவ் அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கியுள்ளது. ஆட்கள் யாராவது அங்கு இருந்திருந்தால் அவர்கள் உயிர் நிச்சயம் பிழைத்திருப்பது மிகவும் கடினமே!
இது முழுக்க முழுக்க சிவில் நிர்வாகத்தின் அலட்சியப்போக்காலும் மெத்தனத்தாலுமே நடந்துள்ளது. இதுபோல பல நிகழ்வுகள் ஊரகத்தில் பல நடக்கக் கூடாத நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. யாராவது ஒரு உயிர் போனால்தான் இவர்களுக்கு சொரணையே வரும்போல் தெரிகிறது. வேகத்தடை அமைக்காததால் ஒரு குழந்தையின் உயிர் போன பிறகுதான் வேகத்தடை அமைக்கப்படுகிறது. இந்த இலட்சணத்தில் செயல்படும் அதிகாரிக்கு பெஸ்ட் எஞ்சினியர் விருதுகொடுத்துப் பாராட்டுகிறது வெட்கங்கெட்ட நிர்வாகம். பெஸ்ட் அதிகாரியே இப்படியென்றால்; ஒர்ஸ்ட் அதிகாரிகள் எப்படி இருப்பார்கள்?
ஓராண்டுக்கு முன்பே புகார் தெரிவித்திருந்தும் இடிந்து விழும்வரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இடிந்த பிறகு வந்து உங்களுக்கு வேறு வீடு தருகிறோம் என்று சமாளிக்கிறது ஊரகத்துறை. கட்டிடம் இடிந்து பாத்திரபண்டங்கள் நொறுங்கியதால் இத்துடன் தப்பி;த்தது. உயிர் போயிருந்தால் இந்த அதிகாரிகள் அந்த உயிரைத் திருப்பித் தருவார்களா?
இதுவரை யாராவது ஒரு அதிகாரியின் வீடு இப்படி இடிந்து விழுந்ததாக நிகழ்ச்சி உண்டா? அந்த வீடுகளில் ஏதாவது ரிப்பேர் என்றால் வரிந்துகட்டிக்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும் ஊரக நிர்வாகம் தொழிலாளி வீடு என்றால் அலட்சியப்படுத்துவது ஏன்?
தொழிலாளர்களின் உயிரும் உடைமையும் அவ்வளவு கிள்ளுக் கீரைகளா?
புகார் தெரிவித்திருந்தும் அலட்சியமாக இருந்து இவ்வளவு பாதிப்புக்கும் காரணமாக இருந்த அதிகாரிமீது நிர்வாகமே நடவடிக்கை எடு!
பழுதடைந்த பாத்திர பண்டங்கள் ஸ்டவ் போன்ற பொருட்களை அவரது ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து புதிதாக வாங்கிக் கொடு. அப்பொழுதுதான் இனி அடுத்தடுத்த வீடுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
வருமுன்னர் காப்பதுதான் புத்திசாலித்தனம். விபத்தில்லாத ஆலை என்பது  மாத்திரம் நமது இலட்சியமாக இருக்கக் கூடாது. விபத்தில்லாத ஊரகமாகவும் விபத்தில்லாத இல்லமாகவும் இருந்தால்தான் தொழிலாளி நிம்மதியாக உழைக்க முடியும். உறங்கவும் முடியும்.
எனவே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த வீடுகளில் பயத்துடன் வாழும் ஊழியர்கள் அனைவருக்கும் மாற்று வீடு கொடுத்து அனைத்து வீடுகளையும் புதுப்பித்துத் தர வேண்டும். புதுப்பிக்க முடியாத வீடுகளை இடித்துத் தள்ளிவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவண்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக