திங்கள், 26 ஜூன், 2017

BMS n கிடுகிடு போராட்டம்



BMS n  கிடுகிடு போராட்டம்

நாங்க நடந்தா நிர்வாகமே நடுநடுங்கும்! கார்ப்பரேட்டே கதிகலங்கும்! மத்திய அரசே மதிமயங்கும் என்றெல்லாம் சவடால் விட்டாங்க! எங்க கிடுகிடு போராட்டத்தால மத்திய அரசு போட்ட உத்தரவையே வாபஸ் வாங்கும். மோடியே பயந்து நடுங்குவாரு.
மத்த யாருமே கையலாகாவங்க! எங்களாலதான் எல்லாம் முடியும்! ஏற்கனவே நாங்க வந்து அதப்புடுங்கினோம் இதைக் கத்தை கட்டினோம் என்று மற்றவர்கள் சாதிச்சத எல்லாம் தன்னோட சாதனைன்னு சொல்லி ஏமாத்தி ஓட்டுக் கேட்டாங்க. அதையும் நம்பித் தொழிலாளிங்களும் ஓட்டுப் போட்டாங்க.  இப்ப என்னய்யா ஆச்சு?

உற்பத்தி முடிஞ்சு போச்சு. முடிஞ்ச உடனே நிர்வாகம் உற்பத்தி முடிஞ்ச மகிழ்ச்சியைக் குடும்பத்தோடு கொண்டாடுங்கன்னு சொல்லி கிலோ கணக்கில இனிப்பு காரமெல்லாம் கொடுப்பாங்க. இலாபம் நெறையக் கெடச்சப்ப நெறைய இனிப்பு கெடச்சது. போன வருடம் லாபம் இல்லேங்கிறது எல்லோருக்கும் தெரியும்.
நிர்வாகம் இந்த ஆண்டு இனிப்புக் கொடுத்து கொண்டாடுற மனநிலை இல்லே. அதனால இனிப்பு இல்லே அப்படின்னாங்க. அப்போ இருந்த கையாலாகாத நாலு பங்குகளும் இந்த வருடம் இலாபமில்லாட்டி என்னங்க. இனி வரப்போற வருடத்திலே இலாபத்த சம்பாதிச்சுத் தர்றோம். இத்தனை வருடமா கொடுத்துப்புட்டு இப்ப கொடுக்கறத நிறுத்தினா நல்லா இருக்காது என்று வலியுறுத்தி அரை கிலோ இனிப்பாவது வாங்கிக் கொடுத்தாங்க.

இலாபம் இல்லாதப்பவே அரை கிலோ வாங்கிக் கொடுத்தாங்க என்கிறபோது இலாபம் வந்துள்ள இந்த வருடம் எப்படி இருக்கனும்? அதை விட கூட இல்லாட்டியும் குறையாமலாவது இருக்கனுமா இல்லையா?

இப்ப எவ்வளவு? கிலோ கணக்கெல்லாம் கிடையாது. போனாப் போவுது 400 கிராம் வாங்கிக்கன்னு நிர்வாகம் சொல்ல அதுகூட எதுக்குங்க நீங்க குடுக்கறதக் குடுங்கன்னு கால்கிலோ மிக்சர் கூட இல்லாம 200 கிராம் வாங்கித் தர்றாங்க வீராதி வீர சூராதி சூரர்கள் இடம் பெற்றுள்ள இந்த ஆண்டில்.

இதுதான் பெர்ர்ரிய சாதனை இந்த ஆண்டில். அது மட்டுமா?
கையாலாகாத பங்குகள் இருந்தப்ப நாட்டின் மிகப் பெரிய தலைவர்கள் மறைவுற்றாங்க.

இந்திராகாந்தி அம்மையார் இறந்தப்ப நாலுநாள் லீவு கெடச்சது. எம்ஜியாருக்கும் நாலுநாள். அதே மாதிரி ராஜீவ் மறைந்தபோதும் லீவு கெடைச்சது.

அதெல்லாம் கையாலாகாதவர்கள் வாங்கித் தந்தது.
இப்ப இந்த வீராதி வீர சூராதி சூரப்புலிகள் வந்த பிறகு தமிழக முதலமைச்சராக இருந்த மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் மறைவுற்றாங்க  ஏற்கனவே முன்னுதாரணம் இருக்கறதால வெளியூரில இருந்து வருகிற தொழிலாளியெல்லாம் சிறப்பு விடுப்பு கிடைச்சிரும் கிற நம்பிக்கையில மெத்தனமா இருந்துட்டாங்க. அதோட இந்த வீராதி வீர சூராதி சூரப்புலிகள் கிடு போராட்டம் நடத்தியாவது சிறப்பு விடுப்பு வாங்கித் தந்துருவாங்கன்னு நம்பி … லீவு போட்டுட்டாங்க. இப்படிப் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா பஸ் இல்லாட்டியும் நடந்தாவது வேலைக்கு வந்திருப்பாங்க. யாரு அடிச்சாலும் பரவாயில்லேன்னு மறைஞ்சு மறைஞ்சாவது வேலைக்கு ஓடோடி வந்திருப்பாங்க.

நம்பிக்கையெல்லாம் வீணாப்போச்சே! இனி எதிர் காலத்தில யார் செத்தாலும் லீவு கெடைக்காதுங்கிற பெரிய சாதனை நடந்துருக்கு.
அதுக்குப் பிறகும்கூட நம்ம மருத்துவ பிடித்தம் சம்மந்தமா கிடுகிடு போராட்டம் நடத்தி கார்ப்பரேட்டையே கதிகலங்க வச்சாங்க. அப்படிக் கதிகலங்க வச்சவங்க ஜெ.அம்மையார் மறைவுக்கு லீவு வாங்கித் தருவாங்கன்னு எதிர்பார்த்தாங்க. அதுவும் நடக்கல. இப்ப ஸ்வீட்டும் கசப்பாப் போச்சு. இனனும் என்ன என்னவெல்லாம் பறிபோகுமோ? வேஜ் ரிவிசன் வேற வருதுன்னு தொழிலாளி பயத்தோட இருக்கிறான். பார்ப்போம். என்ன நடக்குதுன்னு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக