செவ்வாய், 3 அக்டோபர், 2017

பிச்சைக்காரர்களும் இல்லை. திருடர்களும் இல்லை





பொய். பொய்யைத்தவிர வேறு எதையுமே பேசப்போவதில்லை என்று முடிவோடு இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் காலத்துக் கல்விமுறைபற்றி பிஜேபி அம்பி சொன்ன வாதங்களை ஆதாரத்துடன் தவிடுபொடி ஆக்கிய பிறகு அதனை அறிவுப் பூர்வமாக மறுக்க முடியாத அம்பி மேலும் பிதற்றுகிறார். அம்பேத்கர் வரலாற்றை எழுதிய தனஞ்செய்கீர் ஆங்கிலேயர் அல்லர். அவரும் ஒரு பார்ப்பனரே. பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆர்எஸ்எஸ் காரர்களின் முன்னோடி. தினமணியோ பார்ப்பனப்பத்திரிகை. இதிலிருந்துதான் ஆதாரங்களை காட்டியுள்ளோம்.
உண்மையை யார் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. பொய்யை யார் சொன்னாலும் அதைக் கண்டிப்பாக எதிர்த்தே தீருவோம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இணையதளம் என்று எதையாவது புருடா விடுவார்களாம். மெக்காலே சொன்னான் என்று எக்காளமிடுவார்களாம். உண்மையைச் சொன்னால்மட்டும் உடம்பெல்லாம் எரியுமாம்.
நமது நாட்டில் பார்ப்பனரல்லாத பெரும்பான்மையினரைக் கல்வி அறிவில்லாதவர்களாக ஆக்கியவர்கள் பார்ப்பனர்கள்தான் என்ற உண்மையை மூடி மறைக்க அம்பி படாதபாடுபடுகிறார்.
எப்படிப்பட்ட கதையை அவிழ்த்துவிடுகிறார் அம்பி? பசியும்; திருட்டும் இல்லாமல் எல்லோரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்களாம்! 21ம் நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை என்று இதற்குப் பரிசு தரலாம்.
இவர் சொல்லக் கூடிய காலத்தில் பார்ப்பானே இல்லையா? பார்ப்பனருடைய குலத்தொழில் என்ன? பிச்சை எடுத்தல்தானே! வேதங்களும்ää ஸ்ருதிகளும்ää ஸ்மிருதிகளும் பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களுக்கும் விதிக்கப்பட்ட தருமங்களை ஆணியடித்துக் கூறியிருக்கின்றனவே! விஷ்ணுபுராணம் என்ன சொல்கிறது?
அந்தணர்கள் வேதாத்யனம் செய்து யாகங்கள் புரிந்து வேதம் ஓதிää நீதிதவறாத நல்வழியில் ஈட்டிய பொருளை உடையவர்களிடமிருந்து தானமாகப் பெறவேண்டும்.
சத்திரியனும் வைசியனும் பார்ப்பனருக்கு தானம் வழங்கவேண்டும்  என்பதுதானே?
தானம் பெறுவது என்றால் பிச்சை எடுத்தல்தானே! பிச்சைக்காரர்களே இல்லை என்றால் மன்னர்களால் சத்திரங்களும் சாவடிகளும் எதற்காகக் கட்டப்பட்டன? உங்கள் புராண இதிகாசத்திலேயே குசேலன் 27 பிள்ளைபெற்று பிச்சைக்காரனாய் இருந்தான் என்றுதானே கூறப்பட்டுள்ளது?
நீங்கள் பெரிதும் போற்றிப்பாராட்டும் இந்துராஜ்யம் கண்ட மராத்தியமாவீரன் சிவாஜியின் வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா? இந்தியரான வரலாற்று அறிஞர் சாதுநாத் சர்க்கார் என்பவர் இந்துசுயராஜ்யம் என்ற பெயரால் நடந்த அட்டூழியங்கள் குறித்துக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.ää
~மராட்டிய மாவீரன் சிவாஜி இந்துராஜ்யத்தை அமைத்தவுடன்  சூத்திரன் பட்டம் கட்டிக்கொள்ள இயலாது என்று பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தனர். அவனைச் சத்திரியன் ஆக்குகிறேன் என்று யாகங்கள் நடத்தினார்கள். அந்தக்காலத்திலேயே அய்ந்துகோடி பொன் செலவானது. அந்த யாகம் சரியில்லை என்றுகூறி மீண்டும் ஒரு யாகம் நடத்தப்பட்டது. இதனால் கஜானா காலியானது. கஜானாவை நிரப்ப தென்னகத்தின்மீது சிவாஜி படையெடுத்து வந்தான்.
சென்னைக்குத் தெற்கே உள்ள பணக்காரர்களிடம் தண்டப்பணம் வசூலித்தான். பணம் கொடுத்ததோடு அவர்களின் துயரம் நிற்கவில்லை. சிவாஜியின் படைவீரர்களோடு 2000 பார்ப்பனர்களும் வந்தார்கள். அவர்களிடம் காணப்பட்ட பேராசை சொல்லில் அடங்கா. சிவாஜியினுடைய படைவீரர்களும் அதிகாரிகளும் இரக்கம் சிறிதுமின்றி பயணிகளையம் நகரவாசிகளையம் கொள்ளை அடித்தார்கள். அவர்களிடம் அச்சமும் இல்லை. இரக்க உணர்வும் இல்லை.
இந்த அலங்கோலத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளுர்க்காரர்களும் கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள். சிவாஜி எடுத்துச்செல்லாமல் விட்டுச்சென்ற மிச்சசொச்சத்தில் மக்களுக்குக் கிடைப்பதை அவர்கள் அபகரித்துக்கொண்டார்கள்.|  இவ்வாறு அறிஞர் சாதுநாத் சர்க்கார் எழுதுகிறார்.
திருமலைநாயக்கன் காலத்தில் மதுரையில் அட்டூழியம் செய்த கள்ளர்களை மதுரைவீரன் அடக்கினான் என்பதையும் நாம் படித்திருக்கின்றோம். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில்
மாட்டுவண்டிபூட்டிக்கிட்டு மாப்பிள்ளயக்கூட்டிக்கிட்டு காட்டுவழிபோற பொண்ணே கன்னியம்மா
உன் காசுமால பத்திரமா பாத்துக்கம்மா      என்று கட்டப்பொம்மன் பாடுவதாகக் காட்சி வரும். இது திரைப்படம் என்று ஒதுக்கி விட முடியாது. அந்தக் காலச் சூழ்நிலையை அது எடுத்துக்காட்டுகிறது என்பதுதான் உண்மை.
உண்மை இப்படியிருக்க பிச்சைக்காரர்களும் இல்லை. திருடர்களும் இல்லை என்று கூசாமல் பொய் சொல்கிறார் அம்பி.  இதற்கு மெக்காலேவைத் துணைக்கு அழைக்கிறார். இவர்களின் உண்மை உருவத்தைப் புரிந்துகொள்வீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக