செவ்வாய், 4 ஏப்ரல், 2017

பெரியார் இயக்கங்கள் தான் நாடார் சமூக மக்களுக்காக போராடியதுன்னு காலங்காலமா பேசிகிட்டே இருப்பாங்க. ஆனா உங்களுக்கு தெரியுமா அந்த நாடார் மக்களை பெரியார் தனது எல்லா மாநாட்டிலும் சமையல் காரர்களாக பயன்படுத்தி இழிவுபடுத்தினார்ன்னு ஒரு பதிவ ஒருத்தர் போட்டிருந்தார்.”
எப்படியாவது பெரியாரை அசிங்கப்படுத்திறனுமுன்னு ஒரு குரூப் பெரியார் அதை செய்தார் பெரியார் இதை செய்தார்ன்னு சமப்ந்தமில்லாம எவனுக்கும் வரலாறு தெரியாதுங்கிற ரீதியில் அடிச்சி விடுறாங்க. அதுல ஒன்னு தான் மேலே உள்ளது இன்னைக்கி காலையில நம்ம கண்ணுல பட்டுச்சி இத ஒருத்தர் பதிவா போட்டிருந்தார் அப்பவே பதில் தரனுமுன்னு நினைச்சேன். ஆனால் வேலையில மறந்துட்டேன். அதாவது
உண்மையிலேயே பெரியார் அவர்கள் 1929ல் நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டிலிருந்து தொடர்ந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களை தான் சமையலுக்கு பயன்படுத்தினார். ஆனால் அது அவர்களை மட்டுபடுத்தும் நோக்கில் இல்லை மாறாக அவர்களை இழிவு செய்யும் சாதியிலிருந்து அவர்களை காக்கவே அதனை செய்தார்,. இதனை முன்னாள் அமைச்சர் இராசாராம் அவர்களின் சுயசரிதையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதாவது
”சேலத்தில் மாநாடு நடத்த எனக்கு பெரியார் உத்தரவிட்டார். கூடவே மாநாட்டுக்கு வருபவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய விருதுநகரிலிருந்து நாடார்களை ஏற்பாடு செய்யலாமென்று சொன்னார். நான் இங்கேயே நல்ல சமையல் காரர்கள் இருக்கிறார்களென்று சொன்னேன். அதற்கு பெரியார் நான் ஏன் நாடார் சமையலை விரும்புகிறேன் என்றால் வைக்கம் போராட்டம் நடத்தியதே அங்குள்ள ஈழவ சமுதாயத்துக்காகத்தானே. இங்கு நாடார்கள் அங்கு ஈழவர்கள். அன்றிலிருந்து அந்த இனமக்கள் மீது எனக்கொரு பற்று, அவர்கள் சமூகத்தில் அவர்ணஸ்தர்களாக கருதப்பட்டவர்கள். அவர்ணஸ்தவ்ர்கள் என்பவர்கள் எந்த வர்ணத்திலும் ஜாதியிலும் சேராமல் ஓதுக்கப்பட்டவர்கள் என ஜாதி ஆணவம் அவர்களை கருதியது. அதை உடைப்பதற்காக அவர்களை கொண்டே சமைக்க வைத்து மற்ற அனைவரையும் சாப்பிட வைப்பதன் மூலம் ஜாதி உணர்வை ஒழிப்பதாகும் அல்லவா. எனவே தான் 1929ல் நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டிலிருந்து இன்றுவரை நாடார்கள் சமையலையே எற்பாடு செய்கிறேன் என்றார், பெரியார். தந்தை பெரியார் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எவ்வளவு ஆழ்ந்த கருத்து உள்ளது எனபதை எண்ணி எண்ணி வியந்தேன். ”
இது தான் பெரியார் அவர்கள் நாடார்களை சமையல் காரர்களாக பயன்படுத்தியதற்கான உண்மையான காரணம். எனவே வரலாற்றை உங்கள் சவுகரியத்திற்கு திசை திருப்பாதீர்கள் நல்லவர்களே.....
Kondal Samy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக