சனி, 12 ஆகஸ்ட், 2017

Radha's Charanamritam [Archive] - Brahminsnet.com - Forum

www.brahminsnet.com › ... › Anmikam, Bhakthi, Pooja
Translate this page
Dec 11, 2014 - 1 post - ‎1 author

பிருந்தாவனத்தில்  ஒருநாள் கிருஷ்ணனுக்கு  உடம்பு  சரியாக  இல்லை வைத்தியர்களால்  குணப்படுத்த முடியவில்லை. நாரதர்முதலானோர் கவலை கொண்டனர் இது மருந்தினால்குணமாகும் வ்யாதியல்லகிருஷ்ணனின் மேல் உண்மையான,  அளவற்றஅளவுகடந்த,  எல்லையில்லாத,   அதிஉன்னத,அன்பு கொண்டவர் யாரேனும்  இருந்தால் அவர்கள்பாதத்தை கழுவிய நீரை கண்ணன் அருந்தினால்தான்  குணமாகும்இதற்கு சரணாம்ருதம் என்று  பெயர்

ஆனால் ஒரு கண்டிஷன்.   கண்ணன்  மேல் உண்மையான  மேன்மையான அன்புகுறைந்தவர்கள்  எவரேனும் இப்படி சரணாம்ருதம் தந்துஅதை கிருஷ்ணன் பருகினால் கிஷ்ணனுக்கு வியாதியும்குணமாகாதுஎவர்  சரணாம்ருதம்கொடுத்தாரோ அவர்கள்  நரகத்துக்கு சென்று உழலநேரிடும். எல்லா  கோபியருக்கும்  கிருஷ்ணன்  மீது  கொள்ளை  கொள்ளையாக  அன்புஇருந்தாலும் ஒருவேளை  என்னுடையஅன்புபாசம்நேசம்காதல்  மற்றவளுடையதைவிட  குறைந்துகம்மியாக இருந்துவிட்ட தென்றால்??? --- கிருஷ்ணனுக்கு  குணமாகாமல்  போய்விடுமே  என்றகவலை  இருந்ததால் பயந்தனர்சரணாம்ருதம்கொடுக்க  யோசித்தனர்சந்தேகம்  இருந்தது. 

கிருஷ்ணன்  அங்கு  வியாதியால்  துன்பப்பட்டுகொண்டிருக்கிறானே என்ற கவலை வேறு அவர்களுக்கு. 
இந்த  விஷயம் ராதையின் காதில் விழுந்த அடுத்தகணம்.  “இங்கு வாருங்கள் உடனே  நான் கொடுக்கிறேன்என்று  தனது பாதம் கழுவியநீரை கொடுத்தாள். அனேக கோபியர்கள் அவளை  வாட்டிவதைத்தனர்.

என்ன  காரியம் செய்தாய் , முட்டாள்  ராதாஅவசரப்பட்டுவிட்டாயே. ஒருவேளை  கிருஷ்ணனுக்கு  குணமாகாவிட்டால்?  நரகம் செல்ல நீயே வழி தேடிக் கொண்டாயா?.”   

எனக்கு நரகம் செல்ல தயக்கம் இல்லை. ஒருவேளை  கிருஷ்ணன் வியாதி  என்  முயற்சியால் நீங்கினால்அதற்கு  நான் ஏன் உதவக்கூடாது? கிருஷ்ணன் உடல்  நிலை  சரியாகவேண்டி நான்  எந்த நரகத்துக்கு வேண்டுமானாலும்  போகதயார்”  என்றாள்  ராதா 

கதையில்  இனி  நான்  சொல்ல என்ன இருக்கிறது உங்களுக்கே தெரியுமே!! கிருஷ்ணன்  அடுத்த  நிமிஷமேகுணமானான்ஒருவேளை ராதையின் தூயஅன்பையும் உண்மைக் காதலையும்  டுத்துக்காட்ட அந்தமாயாவி போட்ட திட்டமா இந்த "வியாதிநாடகம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக