புதன், 16 ஆகஸ்ட், 2017

இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை

இந்து தமிழின் இழிசெயல்
கர்ப்பிணியாக இருந்த வாஞ்சிநாதனின் மனைவியை முத்துராமலிங்கம் அவர்கள் தனது மாட்;டு வண்டியில் வைத்து காப்பாற்றினார் அவரது மகளைக் காப்பாற்ற 25000 பணமும் கொடுத்தார் என்று எழுதியது இந்து தமிழ் நாளிதழ் (15.08.2017)
வாஞ்சிநாதன் இறந்தபோது முத்துராமலிங்கத்தின் வயது மூன்றுதான். அந்த மூன்று வயதில் எப்படி மாட்டு வண்டியை ஓட்டியிருப்பார். அந்த அமi;iயாரைக் காப்பாற்றியிருப்பார் 25000 பணமும் கொடுத்திருப்பார் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவுடன் இந்துவுக்கு திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் ஆகிவிட்டது.
ஆதாரம் இல்லாமல் செய்தியை வெளியிட்டுவிட்டோமே அது தெரியாமல் நடந்துவிட்டது. இனிமேல் அதுபோல நடக்காமல் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்று சொல்ல மனமின்றி ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்யைச் சொல்வதுபோல மேலும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டுள்ளது இந்து.
வாஞ்சிநாதனின் மனைவியை வண்டியில் வைத்து ஓட்டிச் சென்றதும் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததும் குழந்தையைக் காப்பாற்ற டீக்கடைக்காரரிடம் 25000 ரூபாய் கொடுத்ததும் முத்துராமலிங்கத் தேவர் அல்ல அவரது தந்தை உக்கிரபாண்டித் தேவர்தான் என்று கதையை அவிழ்த்து விடுகிறது.
அதற்கு ஏதாவது ஆதாரம் ஏதாவது காட்டியிருக்கிறதா? என்றால் எதுவும் இல்லை. முத்துராமலிங்கம்தான் நாட்டுப்பற்று தேசவிடுதலை என்று அலைந்ததாகவும் நேதாஜியின் படையில் சேர்ந்ததாகவும் அவரது வரலாறு சொல்கிறதே தவிர அவரது தந்தை உக்கிரவாண்டித் தேவருக்கு அப்படிப்பட்ட நாட்டுப்பற்றோ சமுதாயப்பற்றோ இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை
மாறாக உக்கிரவாண்டித் தேவர் ஊதாரி என்றும் ஆடம்பர வாழ்வில் நாட்டம் கொண்டு சொத்துக்களை எல்லாம் அழித்து கடன்காரர் ஆனார் என்றும்தான் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள பட்டத்தி மைந்தன் கூறுகிறார்.
கடன்காரராகி சொத்துக்களையும் இழக்கும் தருவாயில் கோர்ட் மூலமாகத்தான் அவரது ஊதாரித்தனம் தடுத்து நிறுத்தப்பட்டது சொத்துக்களும் காப்பாற்றப்பட்டது என்று அந்நூலில் அவர் எழுதுகிறார். அத்துடன் அரசாங்கமே வாஞ்சிநாதனின் மனைவிக்கு அடைக்கலம் தருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக அதே இந்து நாளிதழ் கூறுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் அரசாங்கத்தை எதிர்த்துக்கொண்டு வாஞ்சிநாதனின் மனைவிக்கு அடைக்கலம் கொடுத்தார் உக்கிரவாண்டித் தேவர் என்று சொல்லும் இந்து கடனில் மூழ்கித்தவித்த அவர் இருபத்தைந்தாயிரம் பணமும் கொடுத்தார் என்று எழுதுகிறது என்றால் அப்படி எழுதுவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும் அல்லவா? அது இந்துவிற்குத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு சமுதாயப் பற்று உள்ளவராக உக்கிரவாண்டித்தேவர் இருந்தாரா என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை
ஆக தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்றால் புல் பறிக்கத்தான் என்று சொன்னானாமே ஒரு பக்காத்திருடன் அதுபோல முத்துராமலிங்கத்தைப்பற்றி எழுதிவிட்டு அது தவறு என்பதை நிரூபித்தவுடன் இல்லையில்லை அவரல்ல அது அவருடைய அப்பா என்று கதை விடுகிறது
தேவரைப்பற்றிய செய்தியை இப்படித் திரிக்கும் இந்து வாஞ்சிநாதனுக்குப் பேரனே இல்லை அவருடைய மகள் அவர் உயிருடன் இருக்கும்போதே பிறந்து இறந்துவிட்டார் என்று வாஞ்சிநாதனின் தம்பி பேரன் சொல்லி இருப்பதைக் கண்டுகொள்ளவில்லை
இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை என்பார்கள்
அந்தக் கந்த புராணத்தையே உண்மை என்று சொல்லும் இந்து ஆரியக்கூட்டமல்லவா? இதையும் சொல்லும் இதற்கு மேலும் சொல்லும்
நாம்தான் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக