ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அப்பாடக்கர்

அப்பா டக்கர் என்ற சொல் வழக்கு உருவான கதை!
பெரிய அப்பா டக்கரான்னு சொல்வோம்ல
அதைத்தான் பெரிய மயிரான்னு சொல்லிட்டேன்னு பிக்பாஸில் காயத்ரி ஒரு வெளக்கம் குடுத்தாள்
அவளுக்கு அதன் அர்த்தம் தெரியும்.
அதுவும் சேரி பிகேவியர் என்ற வார்த்தைக்கு இணையான தொணியில் சொன்னது தான்
அப்புடின்னா பெரிய அப்பா டக்கர்னா என்ன?
பார்ப்பனர்கள் தங்களைப் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வார்கள்.
அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டவர்களில் முக்கியமானவர் குஜராத் மாநிலம் பாவ்நகரில் லோஹனா என்ற சத்ரிய வம்சத்தில் பிறந்த தக்கர் பாபா.
காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு கொள்கையால் கவரப்பட்டு அந்த மக்களுக்கு சேவை செய்வதையே தனது வாழ்நாள் கடமையாக ஏற்று செயலாற்றியவர்.1890 களிலேயே பொறியாளர் பட்டம் பெற்றவர்.ரயில்வேயில் பொறியாளராக பணியாற்றியவர்.
ரயில்வே கழிவுகளை அகற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்,அவர்கள் கந்துவட்டி காரர்களிடம் சிக்கியதை மீட்கவும் போராடியவர்.குஜராத்தின் பில் ஆதிவாசிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஆதிம் சேவா சங் என்ற அமைப்பை ஏற்படுத்தி உதவியவர்
காந்தியின் ஹரிசன சேவா சங்கத்தின் செயலாளராக 1932ல் பொறுப்பேற்று இந்தியா முழுமையும் பயணித்தவர்.இவரது சேவை காந்தியை பெரிதும் ஈர்த்தது
ஹரிசன மாணவர்களுக்காக சென்னை தி.நகரில் 1946ல் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டு காந்தி அதற்கு அடிக்கல் நாட்டி தக்கர் பாபா வித்யாலயா எனப் பெயரிட்டார். திநகர் பார்ப்பனர்கள் இதை கேலி பேசினர். பாபா அதற்கு எதிராக பேசினார். அவரை ஒடுக்கப்பட்ட மக்கள் அப்பா தக்கர் என்று அழைப்பார்கள்.
அந்த தக்கர் பாபா தான் அப்பா டக்கர் ஆனார்.
அவரை மையமாக வைத்து பார்ப்பனர்கள் தலித் மக்களை கேலியாகக் கூப்பிடும் சொல் தான் அப்பாடக்கர்.
கமலஹாசனிடம் இதைச் சொல்லி
இந்த காயத்ரி நாயை முதலில் வெளியேற்றுங்கள்
வன்மம் கொண்ட சிறுக்கி
படத்தில் உள்ள தக்கர் பாபா தான் ஒடுக்கப்பட்ட மக்களால் அப்பா டக்கர் என அன்போடு அழைக்கப்பட்டவர்
சென்னையில் ஆட்டோகாரரிடம் தக்கர் பாபா ஸ்கூலுக்கு போகச் சொன்னா தெரியாது.அப்பாடக்கர் ஸ்கூலான்னு கேப்பாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக