திங்கள், 4 டிசம்பர், 2017

தலைவராகவும் - தந்தையாகவும்... - ‘பெல்’ ஆறுமுகம்

விடுதலை ஆசிரியர் பிறந்தநாள் மலரில் இடம்பெற்ற எனது கட்டுரை


தலைவராகவும் - தந்தையாகவும்... - ‘பெல்’ ஆறுமுகம்



நான் பதின்மூன்று வயதிலிருந்து தந்தை பெரியார் கொள்கையால் கவரப்பட்டு இந்த இயக் கத்தைப் பின்பற்றி வருகிறேன். பெல் நிறுவனத்தில் பணியில் சேரந்து திராவிடர் தொழிலாளர் கழகத்தில் உறுப்பினராகி 1992இல்  அதன் செயலா ளராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில் கொள்கை சார்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். பெல் நிர்வாகத்தில் பல கோரிக்கைகளை வைத்து அதற்காகப் போராடி வந்தோம். 1992இல் நிர்வாகத்திடம் பெல் நிறுவனம் வருவதற்குக் காரணமான பெருந்தலைவர் காமராசர் அவர்களின் படத்தினை நிர்வாகக் கட்டடத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது அதற்கு நெறிமுறை (றிஸிளிஜிளிசிளிலி) கிடையாது என்று கூறி நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனைத் தமிழர் தலைவர் அவர்களிடம் தெரிவித்த போது நிர்வாகத்தினுடைய இந்தப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. அதனை எதிர்த்து கழகத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து பெருந் தலைவர் காமராசர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று ஆர்ப்பாட்டம் அறிவித்தாரகள். அந்த ஆரப்பாட்டத்தின் விளைவாக பெல் நிர்வாகம் நிறுவனத்தின் நிர்வாக வளாக கட்டடத்தில் பெருந் தலைவர் காமராசர் படம் இன்றுவரை கம்பீரமாக அலங்கரித்துக் கொண் டிருக்கிறது.

அடுத்து 2000 ஆவது ஆண்டில் ஒரு நிகழ்வு. பெல் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் தொழிற் சங்கங்கள் எல்லாம் தொழிலாளர் தினமான மே நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆர்எஸ்எஸ்சின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் மாத்திரம் மே நாளை என்பது வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்நியக் கலாச்சாரத்தை மய்யமாகக் கொண்டது என்று அதனைக் கொண்டாடாமல் இருப்பதோடு விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்று கொண்டாடியது. அந்த விஸ்வ கர்மா ஜெயந்தி எது என்றால் தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 தான் என்று கூறி அந்த நாளில் இது பெரியார் பிறந்ததால் பெருமைக் குரிய நாள் அல்ல; விஸ்வகர்மா ஜெயந்தி என்ப தால்தான் பெருமைக்குரியது எனக் கூறி பெரியார் பிறந்தநாளின் சிறப்பைக் குலைக்க ஆரம்பித்தது. அத்துடன் தங்கள் சங்கத்துக்கும்இ ஆர்எஸ் எஸ்சுக்கும் - தங்கள் சங்கத்துக்கும்இ பிஜேபிக்கும் தொடர்பு இல்லை என்று கூறி தொழிலாளர்களை ஏமாற்றி வந்தது. இதனைத் தமிழர் தலைவர அவர்களிடம் எடுத்துக் கூறி மே நாளைக் கொண் டாட்டத்துக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். அவர்களும் அதில் வந்து கலந்து கொண்டாரகள். 

அந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ்.இ சங்க் பரிவார் இயக்கத் துக்கு எதிரான அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து காவிக் கூட்டத்துக்கு எதிராக அனைவரையும் பேச வைத்தோம். இதனைத் தமிழர் தலைவர் அவர்கள் வெகுவாகப் பாராட்டி யதோடு நம் இயக்கத்தவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இது உதாரணமாகத் திகழ்கிறது என்று மே இரண்டாம் தேதி நடைபெற்ற சிதம்பரம் பொதுக்குழுவில் பாராட்டினார்கள். பொதுக் குழுவில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களும் கரவொலி எழுப்பி அதனைப் பாராட்டினார்கள். ஓட்டு மொத்த இயக்கத்தி னரையும் எங்களைப் பாராட்ட வைத்த தமிழர் தலைவர் என்றென்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.

அதேபோல் 2002இ 2003இ 2004ஆம் ஆண்டு களில் திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற பொறியாளர் நியமனங்களில் தமிழர்கள் யாருமே நியமிக்கப்படாமல் முழுக்க பிற மாநிலத்தவர் களையே நியமித்து வந்தனர். 

அந்தப் பணி நியமனத்தை எதிர்த்து திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக துண்டறிக்கை வெளியிட் டோம். அந்தத் துண்டறிக்கையினையும்இ மூன்று ஆண்டுகளில் பணிநியமனம் பெற்றோர் பட்டி யலையும் தமிழர் தலைவர் அவர்களிடத்திலே அளித்தோம். அதனைப் பார்த்த தலைவர் அவர்கள் நாங்கள் வெளியிட்ட அதே துண்டறிக் கையினை தனது பெயரில் அறிக்கையாக  வெளியிட்டதோடு திருச்சி சிந்தாமணியிலே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினையும்இ பெல் நிறுவனத்தில் கண்டனக் கூட்டத்தினையும் நடத்தி எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். 

அதன் பிறகுதான் தமிழர்கள் ஓரளவு இங்கு பணிநியமனம் பெற்று வருகிறாரகள். நான் வெளியிட்ட துண்டறிக்கையினை தனது பெயரிலேயே வெளியிட்டது எனக்கு மிகவும் பெருமைக்குரியதாக நான் கருதுகிறேன்.

அத்துடன் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப் போலோ மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல்வேறு பணி களுக்கிடையிலும் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்து ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்தியது ஒரு தந்தை தனயனுக்குக்கு ஆறுதல் சொல்லி யதாகவே நான் கருதுகிறேன்.

தலைவர் என்ற இடத்திலிருந்து ஒரு தந்தை யாகவும் தமிழர் தலைவர் என் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் என்பதைப் பெருமையாகக் கருது கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக