சனி, 16 டிசம்பர், 2017

ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டி வரி பற்றி அர்த்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்குதாம்
நமக்கு அர்த்த சாஸ்திரம் தெரியாது

ஆனால் மனுதர்ம சாஸ்திரத்தில் வரி பற்றி என்ன சொல்லி இருக்குதுன்னு தெரியும்

இந்த மனுதர்மம் அர்த்த சாஸ்திரத்தின் அடுத்த நிலை
இதோ அத்தியாயம் 7 சுலோகம் 137

“காய்கறி முதலானவைகளைத் தன் தேசத்தில் விற்றப் பிழைக்கிற ஏழைகளிடத்தில் வருஷத்திற்கொரு தரம் சொற்பப் பொருளை அரசன் தீர்வையாக வாங்கிக் கொள்ள வேண்டியது”

என்று ஏழைகளிடத்தில் கூட இரக்கமில்லாமல் வரி வசூலிக்கலாம் என்று சொல்லும் மனுதர்மம் அத்தியாயம் 133ல் என்ன சொல்கிறது தெரியுமா?

“ அரசன் எளியவனாக இருந்தாலும் (அதாவது வருமானம் இல்லாமல் கஜானா காலியாக இருந்தாலும்) வேதமோதின பிராமண சிரேஷ்டனிடத்தில் ஒருபோதும் தீர்வை வாங்கக் கூடாது. அந்தப் பிராமணனும் தன் தேசத்தில் பசியினால் துன்பப் படக்கூடாது”  என்று சொல்கிறது

அத்தியாயம் 134 இவ்வாறு சொல்கிறது

“ எந்த அரசன் ராச்சியத்தில் வேதமோதினவன் சாப்பாட்டுக்கில்லாமல் பசியினால் துன்பப் படுகிறானோ அந்த அரசன் தேசம் முழுவதும்  சீக்கிரத்திலேயே துன்பப்பட்டு அழிந்துபோகும்” என்கிறது

அதாவது நாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் பட்டினி  கிடக்கலாம். பார்ப்பான் மட்டும் பட்டினி கிடந்தால் அந்த தேசம் அழிந்துவிடும் என்கிறது.

இந்த மனுதர்மத்தை ஆர்எஸ்எஸ் சட்டமாக்க வேண்டும் என்று ஏன் துடிக்கிறது தெரியுமா?

இதற்குத்தான் அர்ஜூன் சொம்பத்துகளும் தமிழிசைகளும் கிச்சாசாமிகளும் லாலி பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக