சனி, 16 டிசம்பர், 2017

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத் தில் வரலாற்றுப் பிரிவு முதுகலை பயில்வோருக்கான தேர்வுகள் சமீபத் தில் நடந்துள்ளன. அதில் தற்போதைய நிகழ்வுகளை ஒட்டி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன  உலக மயமாக்கலின் முன்னோடி மனுதர்மத்தை எழுதிய மனு என ஒரு கட்டுரை எழுதவும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான பதில் இதுதான்

உலக மயம் என்றாலும் தேசிய மயம் என்றாலும் பார்ப்பன மயம்தான்

மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 100 இவ்வாறு கூறுகிறது

"உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் பிராமணர்களுக்கே சொந்தம். பிராமணனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக உண்மையில் அவனே எல்லாவற்றுக்கும் உரியவன் ஆகிறான்"

அதே அத்தியாயம் சுலோகம் 101 இவ்வாறு கூறுகிறது

“பிராமணன் தனது சொந்த உணவையே உண்கிறான். தனது சொந்த உடையையே அணிகிறான். தனக்குச் சொந்தமானவற்றையே கொடுக்கிறான். மற்ற மனிதர்கள் பிராமணனின் கருணையின் மூலமாகவே வாழ்கிறார்கள்”

அத்தியாயம் 8 சுலோகம் 417 இவ்வாறு கூறுகிறது

“ஒரு பிராமணன் உயிர் வாழ்வதற்கு வழியில்லாமல் கஷ்டநிலையில் இருந்தால் அவன் தயக்கமில்லாமல் சூத்திரன் பொருட்களைக் கைப்பற்றிக் கொள்ளலாம்” என்கிறது

இதுதான் உலகமயத்தைப் பற்றி மனுதர்மம் கூறும் விளக்கமாகும்

உலகமயம் என்றால் அனைத்தும் பார்ப்பன மயமே.

இதை ஒரு ஆர்எஸ்எஸ் காரன் திருத்தினால் முழு மதிப்பெண் கொடுப்பான்
நீங்க எவ்வளவு கொடுப்பீங்க?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக