சனி, 11 மார்ச், 2017

தோழியர் மீனாம்பாள் சிவ அரசு

" இந்தி எதிர்ப்பு "
13.11.1938 பிற்பகல் ஒரு மணிக்குச் சென்னை பெத்துநாயக்கன்
பேட்டையிலிருந்து இந்தி எதிர்ப்பு - பெண்டிர் ஊர்வலம் தமிழ் முழக்கங்களுடன் ஒற்றைவாடை நாடகக் கொட்டகையைச் சென்றடைந்தது.5000 பெண்களும் ஏராளமான
ஆடவர்களும் அரங்கின் உளுளும் புறமும் நிறைந்திருந்தனர்.
தமிழர் வரலாற்றிலேயே அன்றுவரை அத்தகைய மாநாடு இருந்ததில்லை.

தோழியர் மீனாம்பாள் சிவ அரசு தமிழ்க்கொடி உயர்த்தினார்.

திறப்பாளர் : பண்டிதை நாராயணி அம்மையார்

வரவேற்பு : 
வ பா தாமரைக்கண்ணி அம்மையார்

தலைமை :தோழியர் நீலாம்பிகை அம்மையார்

நாகம்மையார் | தோழியர் 
படத்திறப்பு | பார்வதி 
| அம்மையார்

தீர்மாணங்கள் :
1)தோழர் ஈ வே ரா அவர்களைப் பெரியார் என சிறப்பித்தல்

2)புரோகிதரில்லா எளிமையான திருமணம் இ

3) கலப்புத்திருமணம் இ 

4)மாதர்மறுமணம் . 

5)தமிழ்மொழியைப் பள்ளிகளில் கட்டாய பாடமாக்குதல் இ

6)இந்தி எதிர்ப்புப் போரில் சிறைசென்ற தோழர்களுக்குப் பாராட்டு இ 

7)இந்தி எதிர்ப்புப் போரில் வீரர்கள் சிறையடைப்பினைக் கண்டித்தல் இ

8)புகைவண்டி நிலைய பெயர்பலகைகளை தமிழில் எழுதுதல் இ தமிழில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டினை வழங்கல் இ

9)ஓரணா இ நாலணா நாணயங்களில் மதிப்பைத் 
தமிழில் குறித்தல் போன்ற 
ஒன்பது தீர்மாணங்கள்
நிறைவேற்றப்பட்டன.

பேச்சாளர்கள் : 
பண்டிதை கண்ணம்மாள் இ

கலைமகள் அம்மையார் இ

இராமிர்தத்தம்மையார் இ

கமலம்மாள்இ 

சிறுமி குஞ்சிதமணி நீலாயதாட்சி

ஆர் நாராயணி அம்மையார் இ

மலர்முகத்தம்மையார் இ

இராணி அம்மையார் (அண்ணா ) ♪

தீர்மாணம் 1.

இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலைவர்களால் செய்ய
இயலாமற்போன வேலைகளை நம்
மாபெருந் தலைவர் ஈ வே ரா அவர்கள் செய்து வருவதாலும்இ
தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவர் இல்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும்போது
" பெரியார் " என்ற
சிறப்புப் பெயரையே வழங்கவேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக