வெள்ளி, 16 செப்டம்பர், 2016

பிராமணர் சங்கத்தின் கி .வீரமணிக்கு 20 கேள்விகள் , பதில்கள்

கி .வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பகுத்தறிவுக்கும்தான்.

1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

பதில் : பிராமணர்கள் ஜாதி பேதம் பார்க்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா? அதற்கு எங்களுடைய நன்றி. பிறவியில் பேதம் ஏன் பார்க்க வேண்டும் என்பதை முதலில் நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்களா? முகத்தில் மனிதன் பிறக்க முடியுமா? தோளிலும் தொடையிலும் காலிலும் பிறப்புறுப்பு இருக்கிறதா? நீங்கள் பிராமணர்கள் என்றால் மற்றவர்களெல்லாம் சூத்திரர்கள் என்றுதானே பொருள்? சூத்திரன் என்றால் உழைக்கும் மக்களெல்லாம் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று மனுதர்மம் சொல்லுகிறதே! அந்த மனுதர்மத்தின்படிதானே நீங்கள் உங்களை பிராமணர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.
எல்லாம் கற்பனையாக இருக்கும்போது நீங்கள் உயர்ந்தவர்கள் என்பதே கற்பனைதான். உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். நாங்கள் யாருக்கும் உயர்ந்தவர்கள் அல்ல. யாரும் எங்களுக்குத் தாழ்ந்தவர்களும் அல்ல என்பதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்.
இந்தப் பிறவி பேதத்தினால்தான் புலியைப் பார்த்துச் சூடு போட்டுக்கொண்ட பூனைபோல மற்றவர்களும் நாங்கள் உயர்ந்த ஜாதி என்று கூறிக் கொள்கிறார்கள். என்னதான் மற்றவர்கள் உயர்ந்த ஜாதி என்றாலும் எல்லா ஜாதிக்காரர்களையும் விட  பிராமணர்கள் உயர்ந்த ஜாதி என்கிற தத்துவம் இருக்கிறதல்லவா? முதலில் நீங்கள் உயர்ஜாதி இல்லை என்பதை ஒத்துக்கொண்டால் மற்றவர்களும் தாமாக அதனை விட்டுவிடுவார்கள். அதற்கு நீங்கள் தயாரா?

2. கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லைஇ அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?

பெரியார் சிலையில் இருக்கும் கடவுள் மறுப்பு வாசகத்தில் இந்து கடவுள் மட்டும் இல்லை. கிறிஸ்து இருக்கிறார். அல்லா இருக்கிறார் என்றா இருக்கிறது. கடவுள் இல்லை என்று நாங்கள் சொல்வது எந்தக் கடவுளுமே இல்லை என்ற பொருளில்தான். அதனை நீங்களும் தெரிந்துகொண்டே உங்களுக்கே உரிய சிண்டு முடியும் புத்தியோடு இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள்.

3. தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?

தியாகராஜர் ஆராதனை முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தில் இசைக்கப்படுகிறது. தமிழ் நீசபாஷை என்ற தத்துவம் அங்கே நிலைநாட்டப்படுகிறது. அந்த மேடையில் தமிழில் பாடினார்கள் என்பதற்காக மேடை தீட்டாகிவட்டது என்று பார்ப்பன தீட்சதர் அந்த மேடையில் பாட மறுத்தார். காவிரி ஜலம் கொண்டு தீட்டுக்கழித்து அதன் பிறகு பாடினார் என்பது தமிழையும் தமிழரையும் இழிவுபடுத்தும் நிகழ்ச்சி.
தேவர் ஜெயந்தியை திராவிடர் கழகம் ஒருபோதும் ஆதரித்ததில்லை.

4. பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?

முதலில் நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்கள். நீங்கள் இந்துவா? பிராமணரா? இந்து என்றால் நீங்கள் அணியும் பூணூலை அனைத்து இந்துக்களும் அணிகிறார்களா? அப்படி அணிய நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? அதற்கு உங்கள் வேதங்களிலும் ஆகமங்களிலும் இடம் உண்டா? என்பதைக் கூறுங்கள்.  இந்து இல்லை என்றால் நீங்கள் யார்? இந்து என்று சொல்லக்கூடிய மற்ற அனைவரையும் நீங்கள் இழிவுபடுத்துகிறீர்கள் என்பதுதானே அதன் பொருள். அவ்வாறு அனைத்து இந்துக்களையும் இழிவுபடுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அடுத்து கிறிஸ்தவன் சிலுவை அணிகிறான் என்றால் அனைத்து கிறிஸ்தவனும் சிலுவை அணியலாம. முஸ்லிம் தொப்பி அணிய எந்த முஸ்லிமுக்கும் தடை இல்லை. அதுபோல சீக்கியன் என்பதற்கு அடையாளம் அவனது தலைப்பாகை. அதனை எல்லா சீக்கியனும் அணிகிறான். அப்படி இவர்கள் அணியும் சிலுவையாலோ தொப்பியாலோ தலைப்பாகையாலோ யாருக்கும் எந்த இழிவும் கிடையாது.
நீங்கள் பூணூல் அணிவது நாங்கள் பிராமணர்கள். எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் என்ற தத்துவத்தை நிலைநாட்டுகிறது. அது மற்றவர்களுக்கு அவமானம் இல்லையா?

5. தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும்இ அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும்இ பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?

தாலியை அகற்றுவதோ தாலியை மாட்டுவதோ எங்களுடைய கொள்கை கிடையாது. ஆண் - பெண் சமத்துவம்தான் எங்களுடைய கொள்கை. பெண்ணுக்கு மட்டும் தாலி. ஆணுக்கு அது தேவையில்லை என்கிறபோது அது சமத்துவத்துக்கு எதிரானது என்பதால் அதனை எதிர்க்கிறோம். பெற்றோர் விருப்பத்துக்காகத் தாலி அணிந்துகொண்டு அதன் பிறகு ஆண் பெண் சமத்துவத்தைப் புரிந்துகொண்ட தம்பதியர் தாமாக விரும்பியே இவ்வளவு நாட்களாகத் தங்களது தாலியை அகற்றி வருகிறார்கள். எங்கள் இயக்கத் தோழர்கள் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கும் அணுகுமுறையை திடீர் என்று எதிர்ப்பவர்கள்தான் இந்துத்துவவாதிகள். அவர்களுக்கு தமிழ்நாட்டில் காலூன்ற வேறு பிரச்சனை இல்லாததால் இதனைக் கையிலெடுத்திருக்கிறார்கள். ஆண் பெண் சமத்துவத்துக்கு எதிரானவர்களுக்கும் ஜாதி வெறியர்களுக்கும் எங்கள் இயக்கத்தில் கண்டிப்பாக இடம் கிடையாது. அதில் தாலி அணிவது அணியாதது என்ற பேச்சுக்கே இடமில்லை.

6. எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும்இ உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?

நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா? முதலில் அதனைத் தெளிவுபடுத்துங்கள். கடவுள் நம்பிக்கை உள்ள பக்தர்கள் கோயிலுக்கு வருகிறபோது கடவுள் நம்பிக்கை உள்ள நீங்கள் அவர்கள் கைகளைத் தொட்டுக்கூட பிரசாதம் தருவதில்லையே ஏன்? கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் வருகின்றபொழுது அதனை நீங்கள் எதிர்ப்பது ஏன்? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்பதே கிடையாது. உங்களுக்கு இருப்பதெல்லாம் ஜாதி நம்பிக்iதான். நாங்கள் உயர் ஜாதி. மற்றவர்கள் தாழ்ந்த ஜாதி என்பதுதான். எங்களை உயர்ந்த ஜாதி என்று ஏற்றுக் கொள்கிறவர்கள் மட்டும்தான் கோயிலுக்கு வரவேண்டும். மற்றவர்கள் வரக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு துணிச்சல் உண்டா?
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். பிராமணர்கள் இனி எந்தக் கோயிலிலும் அர்ச்சகர் ஆவதற்கு தகுதி இல்லை என்ற சட்டம் வந்துவிட்டால் நீங்களே வெளியில் வந்து கோயிலில் இருப்பது கடவுள் அல்ல. அது வெறும் கல்தான் என்று பிரச்சாரம் செய்வீர்கள்.
அப்படியிருக்க கடவுள் நம்பிக்கை உள்ளவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவர் ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு என்பதுதான் எங்கள் நிலையே தவிர இதில் கடவுள் நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் என்ற பேச்சுக்கே இடமில்லை.

7. கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை இ காமராஜர்இஎம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?

பெரியாருக்கு ஒரு வரலாற்றுச் சான்றுக்காக. எதிர்காலத் தலைமுறையினர் பெரியார் என்ற ஒருவர் இருந்தார். அவரால் பார்ப்பனரல்லாத சமுதாயம் கல்வி கற்றது வேலைக்குப் போனது. அவர் பகுத்தறிவுக் கருத்துக்களை மக்கள் மத்தியிலே பரப்பினார். மூடநம்பிக்கைகளை ஒழிக்கப் பாடுபட்டார் என்று எடுத்துக் காட்டுவதற்காகத்தான் அவருக்கு சிலை வைக்கப்படுகிறதே தவிர அவர் ஒரு கடவுள். அவரை வணங்கினால் இவை இவை நடக்கும் என்று கடவுள் சிலைகளைக்காட்டி நீங்கள் ஏமாற்றுவதுபோல் செய்வதற்கு அல்ல. அதனால்தான் அவரது சிலைக்கு அடியில் கடவுள் மறுப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
 வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள் சிறப்பாக ஆண்டிருந்தாலும் அவர்களைப்பற்றிய சான்றுகள் இல்லை. ஆனால் அந்த மன்னர்கள் கட்டி வைத்த கோயிலும் சிலைகளும் அப்படியே இருக்கின்றன. அந்த மன்னர்களுக்கு சிலைகள் இல்லை. அந்த மன்னர்களின் வாரிசுகளெல்லாம் காணாமல் போய் விட்டார்கள். ஆனால் அவர்கள் கட்டி வைத்த கோயிலில் இன்னமும் பார்ப்பனர்கள் மணியடித்து மக்களை மடையர்களாக்கி காசுபணம் சேர்த்து உண்டுகொழுத்து வருகிறார்கள் என்பது கண்கூடு.
அவர்கள் பெரியார் சிலைகளை எதிர்ப்பது என்பது தங்களுக்கு எதிராக பெரியார் என்ற ஒரு மனிதர் இருந்தார். என்ற வரலாற்றுச் சின்னமோ நினைவுச் சின்னமோ இருக்கக் கூடாது என்ற கெட்ட நோக்கத்தில்தான் பெரியாருக்கு சிலை வைப்பதை இப்படிக் கொச்சைப்படுத்துகிறார்கள். மற்ற தலைவர்களுக்கு சிலை வைப்பதும் அந்த அடிப்படையில்தான்.

8. பிராமணனை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் பிராமணனைத்தவிற மற்றவர்கள் முட்டாள்கள்இ அறிவில்லாதவர்கள்இ மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?

இந்தக் கேள்வியே மிகவும் அபத்தமானது. காலம் காலமாக நாங்கள் மட்டுமே அறிவாளிகள். மற்றவர்கள் அறிவில்லாதவர்கள். நாங்கள் மட்டுமே கல்வி கற்போம். மற்றவர்கள் கற்க உரிமையில்லை என்று சொல்லி மற்ற மக்களை கல்வியறிவற்றவர்களாக ஆக்கியதே உங்கள் கூட்டம்தானே!
மன்னர்களை மயக்கி நீங்கள் கல்வி கற்பதற்கு மட்டும் சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை உருவாக்கி பார்ப்பனரைத் தவிர யாருக்கும் அங்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கியவர்கள் நீங்கள்தானே!
வெள்ளைக்காரன் வந்த பிறகு மற்ற மக்களுக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்று முயன்றபொழுது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்கள் நீங்கள்தானே! மராட்டியத்தில் பெறற்கரிய செல்வமாக இருந்த கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஏகபோக உரிமையாக இருந்தது என்பதையும் மன்னர்கள்கூட இரவில்தான் கற்க முடியும் என்ற அளவிற்கு அச்சமூட்டுவதாக பார்ப்பனர்களின் செயல் இருந்தது என்று அம்பேத்கர் வரலாறு கூறுகிறது.
அதையும் மீறி எங்கள் மக்கள் படித்த பிறகு அரசு உயர் படிப்புக்களில் சேர எங்களுக்கு தகுதி இல்லை திறமை இல்லை என்றீர்கள். அதையும் மீறிப் படித்து வந்த பிறகு அரசு வேலைவாய்ப்புக்களில் சேர எங்கள் மக்களுக்கு தகுதி இல்லை திறமை இல்லை என்றீர்கள்.
இவ்வாறு மற்றவர்களுக்கெல்லாம் அறிவு இல்லை. எங்களுக்கு மட்டுமே அறிவு இருக்கிறது என்று கூறிவந்த கூட்;டத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள். இதை அப்படியே திசை மாற்றி நாங்கள்தான் உங்களுக்கு அறிவு இருப்பதாகவும் மற்றவர்களுக்கு அறிவு இல்லை என்று கூறுவதாகச் சொல்வதும் விசமத்தனமானது.

9. நாட்டில் நடந்துள்ள கொலைகள்இ கற்பழிப்புகள்இ திருட்டுகள்இ ஊழல்கள்இ கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம்இ பிற ஜாதியர்கள்இ பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா?

உங்களது கொள்கை என்ன? அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதுதானே? அவனன்றி ஓரணுவும் அசையாது என்கிறபோது இந்தத் திருட்டுää கொலைää கற்பழிப்புää ஊழல்கள்ää கொள்ளைகள் அனைத்தும் எவன் செயல்? கடவுள் சிலையைத் திருடி விற்ற பார்ப்பனர்கள் இல்லையா? கடவுள் உண்டியல் எண்ணும்போது அதனைத த்pருடியவர்கள் பார்ப்பனர்கள் இல்லையா? அதனால்தானே உண்டியல் எண்ணும்போது கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுகிறது? கடவுளைவிட அந்தக் கண்காணிப்புக் கேமராவுக்கு சக்தி அதிகம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? கடவுள் பெயரில் இருந்த நிலம் சொத்துக்களைத் தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்ட பார்ப்பனர்கள் யாரும் இல்லையா? கடவுளுடைய நகைகளை எடுத்து தன் பெண்டாட்டிக்கு நகை செய்து மாட்டிய பார்ப்பனர் இல்லையா? கோயில் வளாகத்திலேயே கோயில் மேலாளராக இருந்த சங்கரராமனைக் கொலை செய்த சங்கராச்சாரி பிராமணர் இல்லையா? பிராமணர்கள் ஊழலில் ஈடுபடுவது இல்லையா? கோயில் கருவறைக்குள்ளேயே கற்பழிப்பில் ஈடுபட்ட தேவநாதன் பார்ப்பான் இல்லையா? திருட்டுக் குற்றத்தில் ஒரு பார்ப்பனரும் கைதானது இல்லையா? பிராமணர் அனைவரும் ஒழுக்கமுள்ளவர்கள் போலவும் பிராமணரல்லாதார்தான் ஒழுக்கமற்றவர்கள் என்பதுபோலவும் எத்தனை நாளைக்குப் பேசுவீர்கள்?
நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் பக்கம் பேசுகிறீர்களா? பிராமணர்களுக்காக மட்டும் பேசுகிறிர்களா? மேற்சொன்ன குற்றங்களைச் செய்தவர்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவர் எத்தனை சதவிகிதம்? கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எத்தனை சதவிகிதம் என்று கணக்கெடுத்துப் பார்ப்போமா? 99.9 சதவிகிதம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே! அப்படியானால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களெல்லாம் ஒழுக்கங்கெட்டவர்கள் என்று அறிவிக்க பிராமணர் சங்கம் தயாரா?

10. கோவிலில் நுழைய அனுமதிஇ தெருவில் நடமாட தடைஇ தடுப்பு சுவர் கட்டுதல்இ இரட்டை டம்ப்ளர் முறைஇ கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சதவிகிதம் பிராமணர்கள்இ எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்ற விவரம் தங்களிடம் உள்ளதா? இவற்றை எல்லாம் உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? எதிர்த்து குரல் எழுப்பும் ஆண்மை உண்டா?

பதில் : கோவிலில் நுழைய அனுமதிஇ தெருவில் நடமாட தடைஇ தடுப்பு சுவர் கட்டுதல்இ இரட்டை டம்ப்ளர் முறைஇ கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது இதையெல்லாம் செய்பவர்கள் இந்துக்களா? இல்லையா? உங்களுக்கு ஒரு ஆபத்து என்று வருகிறபோது நாமெல்லாம் இந்துக்கள்! ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள் என்று கூவுவதும் இதுபோன்ற பிற்படுத்தப்பட்டவர் - தாழ்த்தப்பட்டவர் பிரச்சினை வருகிறபோது நாங்கள் வேறு அவர்கள் வேறு என்று சொல்வதும் பார்ப்பனத் தந்திரம் அல்லவா?
உன்னுடைய இந்து மதம்தானே ஜாதிக்கொரு கோயில் ஜாதிக்கொரு வழிபாட்டுமுறை ஜாதிக்கொரு திருவிழா என்று வைத்திருக்கிறது? நீங்கள் பார்ப்பனரல்லாதார் யாரையும் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. மற்ற மற்ற ஜாதியினர் தங்களுக்குக் கீழுள்ள ஜாதியினரை அனுமதிப்பதில்லை. நீங்கள் ஆணிவேர் என்றால் அவர்கள் சல்லிவேர். அவ்வளவுதான். இதில் நீங்கள் யோக்கியர்போல் நடிப்பது மகா மகா அயோக்கியத்தனம். எல்லாவற்றுக்கும் காரணம் இந்துமதம்தான் அந்த இந்துமதத்தை ஒழிக்க நீங்கள் முன் வருவீர்களா?

11. ஒரு பிராமண பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிட கட்சியாயிற்றே. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா?

12. அந்த ஒரு பிராமண பெண்ணின் காலில் விழும் ஒரு மந்திரியையாவதுஇ சட்டசபை உறுப்பினரையாவதுஇ ஒரு கவுன்சிலரையாவது கேலி பேசும் ஆண்மை உங்களிடம் உண்டா?

இரண்டு கேள்விக்குமான பதில் : முதலில் அ.தி.மு.க என்பது அண்ணா திமுக அல்ல. அது ஒரு அக்கிரகார திமுக என்பதுதான் எங்கள் கொள்கை. அதனை எதிர்த்து நாங்கள் எவ்வளவோ பேசியும் எழுதியும் வருகிறோம். காலில் விழும் கலாச்சாரம் என்பது பார்ப்பனியக் கலாச்சாரம். திராவிடக் கலாச்சாரம் இல்லை என்பதையும் நாங்கள் பேசி எழுதி வருகிறோம். சுயமரியாதை அற்றவர்களின் சொரணை கெட்ட செயல்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை.

13. பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ்இ இன்போசிஸ்இ காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன்இ வேண்டாம் வேண்டாம்இ திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

இந்தக் கேள்வியும் முட்டாள்தனமானது. பார்ப்பனர்கள் மட்டுமே அறிவாளிகள். தகுதி திறமை உள்ளவர்கள் என்று கூறி வந்த நீங்களும் உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் உருவாக்கி நடத்தி வரும் நிறுவனங்களில் அந்த அறிவாளிகளான பார்ப்பனர்களுக்கு மட்டுமே வேலை தரப்படும் என்று கூறி நிறுவனத்தை நடத்த முடியுமா? பார்ப்பனர்கள் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு சோம்பேறியாக இருக்கின்ற காரணத்தால் தகுதியும் திறமையும் உள்ள தமிழர்களையும் திராவிடர்களையும் பணியில் அமர்த்தி வருகிறது மேற்சொன்ன நிறுவனங்கள். அங்கே போய் நீங்கள் தகுதி திறமை பார்ப்பனர்களாகிய எங்களுக்கு மட்டுமே இருக்கிறது. எங்களை வேலைக்கு அமர்த்தாமல் ஏன் பார்ப்பனர்களைத் திட்டும் திராவிடர்களுக்கு வேலை தருகிறீர்கள் என்று மறியல் போராட்டம் செய்வதுதானே!

14. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?

இந்தப் பழமொழியே பெரியார் சொன்னது என்று கூறுவது தவறான வாதம். அது ஒரு வடநாட்டுப் பழமொழி.
பாம்பு கூட தனக்கு தொந்தரவு செய்கிறவரைத்தான் கடிக்கும். இல்லாவிட்டால் அது தன்போக்கில் சென்று விடும். ஆனால் இந்தப் பார்ப்பனர்களோ தங்களுக்கு தொண்டு செய்கின்ற விவசாயிகளைநெசவாளிகளை உழைப்பாளர்களை சூத்திரன் என்று சொல்லி இழிவுபடுத்தி அவர்களை முன்னேற விடாமல் செய்து வருகிறார்கள். எனவே பாம்பை விட ஆபத்தானவர்கள் பார்ப்பனர்கள். பாம்பை கழுத்தில் மாட்டிக்கொண்டு கூடத் திரியலாம். ஆனால் பார்ப்பனரோடு உறவு வைத்திருந்தால் அவன் எந்த நேரத்தில் கழுத்தறுப்பான் காலை வாறிவிடுவான் என்பது யாருக்கும் தெரியாது.

15. குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?

ஒரு சூத்திரன் வேதத்தைக் காதுகளில் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று. வேதத்தைப் படிக்கும் சூத்திரனின் நாக்கை அறு. நெஞ்சில் தேக்கி வைத்திருந்தால் அவன் நெஞ்சைப்பிள என்று அநியாயம் செய்த அக்கிரஹாரக் கூட்டத்தின் ஆணவத்தைத் தோலுறிக்கின்ற வகையிலேதான் விளம்பரமே வருகிறது. நான் வேதம் சொல்லக் கூடாதா? என்று ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன் கேட்கிறான். ராமானுஜர் அவனுக்கு வேதம் சொல்லித் தருகிறார். மதத்தில் புரட்சி செய்த மகான் என்றுதான் விளம்பரம் வருகிறது. இன்னும் உங்கள் வண்டவாளங்களையெல்லாம் தண்டவாளத்தில் ஏற்றுவதற்காகத்தான் இத்தொடரைக் கலைஞர் எழுதுவார் போல் தெரிகிறது. அதற்குள் நீங்கள் துள்ளிக்குதிக்காதீர்!

16. ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். ஹிந்துக்கள் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய நீங்கள்இ கிறிஸ்தவர்கள் மோதிரம் அகற்றும் போராட்டம் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?

ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் மோதிரம் அணிகிறார்கள் என்கிறீர்களே! இரண்டும் ஒன்றா? மோதிரம் அணியும் கிறிஸ்தவர்கள் பெண்ணுக்கு மட்டும் அணிவிப்பதில்லை. மணமகன் மணமகள் இருவருமே அணிகிறார்கள். ஆனால் இந்துக்கள் பெண்ணுக்கு மட்டும் தாலி அணிவித்து ஆணை பொலிகாளையாக அலைவதற்கு அனுமதிக்கிறது இந்து மதம். அது ஆணாதிக்க மனப்பான்மை. பெண்ணடிமைத்தனம் என்கிறோம் நாங்கள். அடுத்து நீங்கள் செய்யும் மோசடிப் பிரச்சாரம் என்னவென்றால் நாங்கள் ஏதோ தாலி அணிந்திருக்கிற எல்லாப் பெண்களையும் சாலைகளில் நின்றுகொண்டு வருகிற போகிற பெண்களது தாலியையெல்லாம் அறுப்பதுபோல பிரச்சாரம் செய்வது அயோக்கியத்தனமானது. எங்கள் வீட்டில் நடக்கும் திருமணங்கள் முதலில் பெற்றோரது விருப்பப்படி தாலி அணிந்து திருமணம் செய்தாலும் அந்தக் கணவன் மனைவி இருவரும் அதன் இழிவினை உணர்ந்து மனமுவந்து அகற்றிக் கொள்கிறார்கள். இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறது இந்துத்துவா பார்ப்பனக் கும்பல்.

ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?

பெரியார் கொள்கைகளை யாரும் வெளியிடக்கூடாது என்பதோ பெரியார் கொள்கைகள் பரவக் கூடாது என்பதோ எங்கள் நோக்கம் அல்ல. அப்படி வெளியாட்கள் பெரியாரைப்பற்றி எழுதும்போது ஆதாரமில்லாமல் எழுதி பெரியார் கொள்கையைத் திரித்து வெளியிட்டு விடக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்.
உதாரணத்திற்கு பாம்பையும் பார்ப்பனையும் கண்டால் பாம்பை விட்டுவிடு பார்ப்பானை அடி என்று பெரியார் சொன்னதாக தந்திடிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரெங்கராஜ் பாண்டே தெரிவித்தார். அது பெரியார் சொன்னது அல்ல. அது ஒரு வடநாட்டுப் பழமொழி என்று தமிழர் தலைவர் வீரமணி தெரிpத்தார். அதனை மறுத்து தந்தி டிவியில் காட்டப்பட்ட ஆதாரம் திராவிடர் கழகமோ அதன் பிரச்சார நிறுவனமோ வெளியிட்ட நூலில் இருந்து காட்டப்பட்டதில்லை. வேறு யாரோ எழுதி வெளியிட்ட புத்தகம். அது ஆதாரப்பூர்வமானதோ அதிகாரப்பூர்வமானதோ அல்ல. அதனால்தான் உண்மைக்கு மாறான தகவல் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பெரியாரைப் பற்றியும் அவரது கொள்கைகள் பற்றியும் திரிபுவாதங்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் அதனை எதிர்க்கிறோம்.

19. பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம் என்றால் அது என்ன அடையாளம்? நாங்கள் பிராமணர்கள் என்று காட்டுவதற்கான அடையாளம்தானே! நீங்கள் பிராமணர்கள் என்றால் மற்றவர்கள் எல்லாம் யார்? சூத்திரர்கள்தானே! இழிஜாதிதானே! மனுதர்மத்தின்படி சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்தானே! அப்படி மற்றவர்களை தேவடியாள் பிள்ளை என்று சொல்வதற்கு உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும்? பூணூல் அணிந்திருப்பவனுக்குத்தான் தகுதி திறமை இருக்கிறது. எங்களுக்கு இல்லை என்று சொல்வதற்கு உள்ள அடையாளம்தானே அந்தப் பூணூல்? அந்தப் பூணூல் அணிந்தவன்தான் ஆண்டவனுக்கு அர்ச்சகனாக இருக்கலாம் மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்பதன் அடையாளம்தானே அந்தப் பூணூல்?
இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படி எங்கள் மக்களை இழிவுபடுத்துவீர்கள்?
அந்த இழிவை உணர்த்தி மக்களுக்குத் தன்மான உணர்ச்சியூட்டுவதற்கான அடையாளம்தான் கறுப்புச் சட்டை. நான் ஏன் சூத்திரனாக இருக்க வேண்டும்? நீ ஏன் பிராமணனாக இருக்க வேண்டும்? என்று கேள்வி கேட்க வைப்பது கறுப்புச்சட்டை. நான் ஏன் தற்குறியாக இருக்க வேண்டும்? பிராமணன் ஏன் கல்வியை ஏகபோக உரிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்க வைத்தது கறுப்புச்சட்டை. நீ மட்டும்தான் அர்ச்சகனாக இருக்க வேண்டுமா? நான் அர்ச்சகனாகக் கூடாதா? என்று கேட்க வைத்தது கறுப்புச்சட்டை.
எனவே, அந்தக் கறுப்புச்சட்டையோடு பூணூலை ஒப்பிடுவதே அபத்தமானது.

20. ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் நம்பி பொழப்பு நடத்துகிறீர்களே ..இது தேவையா ?

ஒருவருடைய நம்பிக்கை இன்னொருவரை இழிவுபடுத்தக்கூடாது. நான் பிறப்பால் உயர்ந்தவன் என்று நீங்கள் சொல்லுவது அடுத்தவரை இழிந்தவன் என்று உணர்த்துவது உங்களுக்குப் புரியவில்லையா? அடுத்தவரை இழிவுபடுத்துவதில் உங்களுக்கு என்ன அவ்வளவு மகிழ்ச்சி? கடவுளை நம்பிப் பிழைப்பு நடத்துபவர்கள் நீங்கள்தான். நாங்கள் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக