புதன், 14 செப்டம்பர், 2016

விட்டுக் கொடுங்க

நம்ம பாஜக அக்கா தமிழிசை சவுந்திரராசன் ~இட ஒதுக்கீட்டில் பலனடைஞ்ச தலித்துக்களெல்லாம் இட ஒதுக்கீட்டை அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுங்க| அப்படின்னு சொன்னாங்க. இது மாதிரி பலபேர் பேசுறாங்க. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இட ஒதுக்கீடு கொடுக்கறது? இந்த இட ஒதுக்கீட்டால தகுதி திறமை எல்லாம் குறையாதா? அப்படின்னெல்லாம் இப்பவும் பேசுறாங்க. இந்த இட ஒதுக்கீடு இருக்கிறதால எனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவக்கல்லூரி இடம் கிடைக்காமப் போயிருச்சுன்னு வழக்குப் போட்டு அந்த வழக்கில ~இட ஒதுக்கீடு சட்டப்படி செல்லாது|ன்னு சொல்லி தீர்ப்பு வந்தது. அதை எதிர்த்து தந்தை பெரியார் போராடி அதன் காரணமாகவே அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் வந்தது எல்லாம் பழைய வரலாறு.
அப்படிப் பாத்தா இந்த இட ஒதுக்கீடு யாருக்கெல்லாம் இருக்குதோ அவங்கதானே எல்லா உயர் பதவியிலயும் இருக்கனும். இட ஒதுக்கீட்டாலே எங்களுக்கு பாதிப்பு இருக்குதுங்கறவங்க எந்த உயர் பதவியிலயும் இருக்கக் கூடாது அல்லவா? ஆனா முக்கியமான உயர் பதவிகளிலெல்லாம் இட ஒதுக்கீடே இல்லாத முகத்தில் பிறந்தவர்களே அனுபவிக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளா? உயர்நீதிமன்ற நீதிபதிகளா? மாநில ஆளுனர்களா? தலைமைச் செயலாளர்களா? பல்கலைக்கழகத் துணைவேந்தர்களா? இராணுவத் தளபதிகளா? எங்கு பார்த்தாலும் மிக மிக முக்கியமான அதிகாரமுள்ளää அதிக வருவாயுள்ள பதவிகள் எல்லாம் முதல் வருணத்தார்களே ஆக்கிரமித்துள்ளார்கள். இவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடே இல்லையே! இட ஒதுக்கீட்டினால் இவர்களுக்கு பாதிப்பு என்கிறார்களே! பிறகு எப்படி இவர்களே எல்லா இடத்திலும் என்றால் அவர்களுக்குத்தான் தகுதி – திறமை அதிகம் இருக்கிறது. மூளையும் இருக்கிறது என்கிறது அதிகார வர்க்கம் (வருணம்)
அவர்களிடம் போய் இவ்வளவு காலம் நீங்கள் ஆண்டது போதும். இப்பொழுது கொஞ்சம் மற்றவர்களுக்கும் விட்டுக் கொடுங்கள் என்று யாரும் கேட்பதில்லை. அப்படிக் கேட்டாலும் அவர்கள் விட்டுத் தருவதாக இல்லை. அப்படி அவர்கள் விட்டுத் தர மனமில்லாததால்தான் அரசாங்கம் ~சரிää 51 சதவிகிதம் வேண்டுமானால் மூளை உள்ளவர்கள் இருக்கட்டும். மீதி 49 சதவிகிதத்தில் 27 சதவிகிதம் காலில் பிறந்த நாலாம் வர்ணத்தாருக்கும் 22.5 சதவிகிதம் அய்ந்தாம் வருணத்தாருக்கும் விட்டுத்தாருங்கள் என்றாலும் அதையும் முழுதாகத் தர இன்னும் மனமில்லை.
அப்படி விட்டுத் தர மனமில்லாமல்தான் திருச்சி பெல் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் பதவியில் வந்து அமரும் முத்தான மனிதரெல்லாம் இட ஒதுக்கீடு இல்லாத முதல் வருணத்தாராகவே இருக்கிறார்கள். 18 பேர் இதுவரை இருந்து விட்டார்கள். அதில் இரண்டுபேர்தான் நான்காம் வருணத்தார். அய்ந்தாம் வருணத்தார் அருகிலேயே வர முடியாது. இப்பொழுது  நிர்வாக இயக்குனர் பதவியில் இருப்பவர் ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பதிலாக 19 ஆவதாகவும் முதல் வருணத்தாரே வரப் போகிறார் என்று கேள்விப்படுகிறோம்.
அய்யாää அதிகார வர்க்கமே! இந்த முறையாவது இட ஒதுக்கீட்டில் வந்தவர்களுக்கு அது 27ஆக இருந்தாலும் 22.5 ஆக இருந்தாலும் விட்டுத் தாருங்களேன். நீங்களே இவ்வளவு காலமும் இருந்தும் இப்பொழுது நட்டம்ää நட்டம் என்கிறீர்களே! நெருக்கடி என்கிறீர்களே! இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு விட்டுக் கொடுத்தால் நிச்சயம் நட்டத்தைச் சரி செய்வார்கள். நெருக்கடியை சமாளிப்பார்கள். உங்களுக்கும் தொல்லை இல்லை. விட்டுத் தருவீர்களா? தமிழிசை அக்காவும் யுடிhயடிநவ நண்பர்களும் இதற்குக் குரல் கொடுப்பார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக