வியாழன், 15 செப்டம்பர், 2016

முட்டாள் எழுதிய கதை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் ஏதும் உண்டா?
மூன்றடி மண் கேட்டானாம். அதை அந்த மன்னன் கொடுத்த உடன்
உலகை ஒரு அடியாள் அளந்தானாம்.
இரண்டாம் அடியை வானத்தில் வைத்தானாம்.
மூன்றாம் அடியை வைக்க இடமில்லையே எங்கே வைப்பது என்று குள்ளப்பார்ப்பான் கேட்டானாம்.
என் தலையிலே வை என்று அந்த முட்டாள் மன்னன் சொன்னானாம்.
தலையிலே காலை வைத்து அந்த மன்னனை குள்ளப் பார்ப்பான் கொன்று அழித்தானாம்.
ஏன்யா அறிவுஜீவிகளே!
உலகத்தை ஒரே அடியில் அளப்பதற்கு அது என்ன தட்டையா? இன்று உலக உருண்டையில் குள்ளப் பார்ப்பான் நிற்பதுபோல ஒரு இடத்தில் நின்றுகொண்டு உலகத்தை அளப்பது என்றால் அவனது கால் முன்னூற்றி அறுபது டிகிரியிலும் சுற்றி வர வேண்டும்.
சுற்றி வருவதற்கு அது என்ன காலா? அல்லது பார்ப்பானது (பூ)நூலா?
காதில் வேண்டுமானால் பூ சுற்றலாம். காலைச் சுற்றி உலகை அளக்க முடியுமா?
அதற்குப் பிறகு அடுத்த அடியை வானத்தில் வைத்தானாம். வானத்தில் பட்டம் வேண்டுமானால் விடலாம். காலை வைக்க அது என்ன கூரையா? தகடா? தகரமா?
வானம் என்பது வெட்டவெளி. அதில் ராக்கெட் விடலாம். இப்படி கயிறு விடக்கூடாது. விண்வெளிப்பயணம் செய்பவர் ராக்கெட்டை விட்டு வெளியில் வந்தால் அந்தரத்தில்தான் மிதப்பார்களே தவிர எதிலேயும் நிலையாக நிற்க முடியாது.
அங்கே இரண்டாவது அடியை வைத்தான் என்று அள்ளிவிடுகிறான் பார்ப்பான்.
மூன்றாவது அடியை மாவலியின் தலையில் வைத்தான் என்றால் மாவலி எங்N நின்று கொண்டிருந்தான்?
பூமிää வானம் இரண்டையும் தாண்டி வேறு எங்காவது நின்றிருந்தால்தானே மூன்றாவது அடியை அவன் தலையிலே வைத்திருக்க முடியும்?
பூமியிலே நிற்பவன் தலையில் வாமணன் கால் வைப்பதென்றால் அப்படியே ரிவர்ஸ் அடித்துத்தானே வைக்க முடியும்?
வாமணன் என்ன கடவுளா? இல்லை சர்க்கஸ்காரனா?
இதை அறிவுள்ள எவனும் ஏற்றுக் கொள்வான?
நம்முடைய புராண இதிகாசங்களைக் கற்றுத்தான் வெளிநாட்டுக் காரனெல்லாம் அறிவியல் கண்டுபிடிப்புக்களைச் செய்கிறான் என்று கதை விடுகிறீர்களே! இதிலிருந்து எந்த அறிவியல் உண்மையை அவன் கண்டுபிடித்தான்? நீங்கள்தான் அவனுக்கு என்ன அறிவியல் விளக்கத்தைச் சொல்லுவீர்?
இந்தக் கதையை அவன் படித்தால் அவன் என்ன நினைப்பான்? இவர்களைவிட முட்டாள் உலகத்தில் வேறு யாருமில்லை என்றல்லவா? நினைப்பான்?
உலகம் தட்டை வானம் என்பது கூரையைப் போன்றது என்று கருதிய முட்டாள் எழுதிய கதையாகத்தானே இது இருக்க முடியும்?
அதை இன்றைக்கும் பரப்புகிறவர்கள் அயோக்கியர்களா? இல்லையா?
பகுத்தறிவுகொண்டு சிந்திப்பீர்!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக