வெள்ளி, 16 செப்டம்பர், 2016

வந்தே மாதரம் தேசபக்தியை ஊட்ட எழுதப்பட்ட பாடலா?



சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசபக்தர்களுக்கும், தூக்குக்கயிற்றில் தொங்கியவர்களுக்கும் உயிர்கொடுத்த மந்திரச்சொல் வந்தே மாதரம். தன்னிகரில்லா பாரதத் தாயின்மீது பக்தியையும் அன்பையும் தூண்டி எழுச்சியைத் தோற்றுவிக்கும் வந்தேமாதர தேசிய கீதத்தை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?| | என்பது இந்து முன்னணிää ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்களின் நீண்டநாள் குற்றச்சாட்டுக்களுள் ஒன்றாக இருந்துவருகிறது.

வந்தே மாதரம் என்ற பாடல் வங்க மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட: ‘ஆநந்தமடம்’ என்ற நாவலில் வரக்கூடிய பாடலாகும். 1882ம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாவலை 1908ம் ஆண்டு மஹேசகுமாரசர்மா என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதற்கு முன்னுரை எழுதியவர் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யர். வந்தே மாதரப் பாடலை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் பாரதியார். மறுபதிப்பாக 2000த்தில் வெளியிட்டவர் நல்லி குப்புசாமி செட்டியார்.

அந்த நாவல் 1770 கால கட்டங்களில் வங்கத்தில் ஏற்பட்ட நிகழ்வைக்கொண்டு எழுதப்பட்டதாக பங்கிம் சந்திர சட்டர்ஜி குறிப்பிடுகிறார். 1771ல் வங்கத்தில் கடுமையான பஞ்சம் ஏற்படுகிறது. பஞ்சத்தினால் பலர் மாண்டு போகிறார்கள். 1772ää 1773லும் பஞ்சம் தீரவில்லை. 1774ல் நல்ல மழை பெய்கிறது. ஈசன் கிருபையால் பெய்ததாக பங்கிம் சந்திரர் குறிப்பிடுகிறார். அது ஈசன் கிருபை என்றால் பஞ்சமும் ஈசன் கிருபைதானே? ஆனால் அன்றைக்கு வங்கத்தை ஆண்ட முஸ்லிம் அரசர்கள்தான் அந்தப் பஞ்சத்திற்குக் காரணம் என்று கூறி அந்த முஸ்லிம் அட்சியை ஒழிக்க வேண்டும் எனபதற்காக வை~;ணவ சந்தானம்’ என்ற படை அமைக்கப்படுகிறது. அந்தப் படைக்குக் குருவாக சத்யானந்தர் என்பவர் இருக்கிறார். அந்தப் படையில் பெரும்பாலும் பார்ப்பனர்களே இருக்கிறார்கள்.
மக்கள் அப்பொழுது நல்ல முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. பஞ்சம் வந்தபோது பட்டினியால் மாண்ட மக்கள் நல்ல விளைச்சல் இருந்தபோது தின்னத் தெரியாமல் அதிகமாகத் தின்று அஜீரணத்தால் செத்துப் போகிறார்கள். அந்த முட்டாள் மக்களிடம் சென்று வி~;ணுபூஜை செய்கிறீர்களா என்று வை~;ணவ சந்தானப் படையினர் கேட்பார்களாம். அப்படிக் கேட்டுக் கொண்டே 20ää30 பேர் கூட்டமாகச் சேர்ந்து சென்று முஸ்லிம்கள் வீட்டைக் கொள்ளையடிப்பார்களாம். அவர்கள் வீடுகக்குத் தீ வைப்பார்களாம். கொள்ளையடித்த பொருட்களை புதிதாய் வந்த வி~;ணு பக்தர்களுக்குக் கொடுப்பார்களாம். அப்படித்தான் அவர்கள் படையில் ஆட்களைச் சேர்த்திருக்கிறார்கள்.

மகேந்திரன் என்பவன் நல்ல பணக்காரன். காயஸ்தா ஜாதியைச் சேர்ந்தவன். அவனிடம் ஏராளம் செல்வம் இருக்கிறது. அவனுடைய கிராமத்திலுள்ளோர் பலர் பஞ்சத்தால் மாண்டு போனார்கள். இவர்களுக்கு வேலை செய்ய ஆட்களில்லை. அதனால் அவன் பட்டணம் வருகிறான். வரும் வழியில் தனது மனைவி மற்றும் மகளைப் பிரிகிறான். அவனிடம் இருக்கும் பணத்தையும் செல்வத்தையும் வை~;ணவப் படைக்கு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்த எண்ணி அவனைப் படையில் சேர்க்கிறார்கள். அவன் அவர்களிடம் பல கேள்விகள் கேட்கிறான். அதன்மூலம் நமக்குப் பல உண்மைகள் புலப்படுகின்றன. அவனைப் பல இடங்களில் மூளைச் சலவை செய்கிறார்கள். ‘முஸ்லிம் ராஜா நிர்வாகத் திறமை இல்லாமல் இருப்பதாகவும் அதனால்தான் நாட்டில் மக்கள் பஞ்சத்தாலும் பட்;டினியாலும் துன்பப்படுகிறார்கள் என்றும் கூறி நமது மதம் போயிற்றுää ஜாதி போயிற்றுää மானம் போயிற்றுää குலம் போயிற்று என்று வெறுப்பேற்றி அந்தக் குடிகேடர்களை ஒழிக்க வேண்டும்’ என்று வெறி உண்டாக்குகிறார்கள்.

வந்தேமாதரம் என்ற பாடல் பாரதமாதாவைக் குறித்துப் பாடப்படுவதாகவும் தேசபக்தி உள்ளவர்கள் அனைவரும் அதனைப்பாட வேண்டும் என்றும் அவ்வாறு பாட மறுப்பவர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்றும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல் இன்னமும் சொல்லி வருகிறது. பாரதமாதா யார்ää அவள் வடிவம் என்ன என்பதைப்பற்றி ஆனந்தமடத்தில் மிகவும் தெளிவாகவே எந்தவித அய்யத்திற்கும் இடமின்றிக் கூறப்படுகிறது.


ஒரு மண்டபத்தில் திருமாலின் இடது தோளில் திருமகள் கூந்தல் அவிழ்ந்து தொங்க நூறிதழ்த் தாமரைப்பூ மாலையணிந்து அச்சத்தால் நடுங்கினவள்போல் நின்றாள். வலது தோளில் கலைமகள் வீணாபுஸ்தக வடிவெடுத்து ராகதாளங்கள் சூழ நின்றாள். திருமாலின் மடியிலே சர்வாங்க சுந்தரமான ஒரு மோகன வடிவம் திருமகளையும் கலைமகளையும் பழிக்கும் எழிலும் செல்வமும் வாய்ந்து வீற்றிருந்தது.

அது யார்? என்று மகேந்திரன் கேட்கிறான். அதுதான் மாதா என்கிறார்கள். அத்துடன் இன்னொரு மண்டபத்திற்கு மகேந்திரனை அழைத்துச் சென்று நல்ல அழகான ஆடைஆபரணங்கள் அணிந்த ஒரு வடிவத்தைக் காட்டுகிறார்கள். இது முன்பிருந்த மாதா என்கிறார்கள். இதுதான் நமது தாய்நாட்டின் வடிவம் என்கின்றனர். பின்னர் இருண்ட சுரங்கத்திற்கு அழைத்துச் சென்று மங்கலான வெளிச்சத்தில் கருமை வடிவமாய் செல்வத்தையெல்லாம் பறிகொடுத்துவிட்டு கட்டத் துணியுமின்றி நிர்வாணமாய் மண்டையோட்டை மாலையாய் அணிந்திருக்கும் ஒரு உருவத்தைக் காட்டுகிறார்கள். அதைப்பார்த்து பயந்துபோய் மகேந்திரன் ஷஷஅய்யோää காளீ|| என்று அலறுகிறான். ஆம்ää காளிதான் இப்படி ஆய்விட்டாள்;; அவள்தான் மாதா. அவளைக் காப்பாற்றத்தான் போராடுகிறோம். அவளை வணங்கி வந்தே மாதரம் சொல் என்கிறார்கள். அவனும் வந்தே மாதரம் என்கிறான். இதுதான் வந்தே மாதரம் பாடலின் வரலாறு.

திருமாலின் மடியில் அமர்ந்திருக்கும் காளி பராசக்திதான் பாரதமாதா வடிவம் என்பது மிகத் தெளிவாகவே அதில் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாதாவை வணங்கினால்தான் முஸ்லிம்களுக்குத் தேசப்பற்று இருப்பதாகவும் இல்லையேல் அவர்கள் தேசத்துரோகிகள் என்பதாகவும் இன்றும் ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கூறுவது எவ்வளவு கடைந்தெடுத்த மோசடி என்பது தெளிவாக விளங்குகிறது. உருவ வழிபாட்டையே ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்கள் காளிதேவியின் உருவத்தை பாரதமாதாவாக ஏற்றுக்கொண்டு வந்தே மாதரம் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அதனை எப்படி ஏற்றுக்கொள்வர்?

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும் உணர்ச்சியை இந்த நாவல் ஊட்டுவதாகவும் வெள்ளையரின் ஆட்சியை எதிர்க்க இளைஞர்களுக்கு ஒரு வழி காண்பிக்கப்பட்டது என்று முன்னுரையிலும் பதிப்புரையிலும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டாலும் கதையில் எந்த இடத்திலும் வெள்ளையரை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி வெளிப்படவில்லை. நாவல் எழுதிய பங்கிம் சந்திரரேகூட அவ்வாறு எந்த இடத்திலும் கூறவில்லை. மாறாகää வெள்ளையர்கள் அரசின்மையினின்றும் காப்பாற்றினார்கள் என்றும்ää கதை நடந்த காலமான 1771 -1774 காலக்கட்டத்தை அரசின்மை மேலிட்டிருந்த காலமென்றும்ää அப்பொழுது இங்கிலீஸ்காரரின் அதிகாரம் ஏற்படவில்லை என்றும் இங்கிலீஸ்காரர் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் சட்டம் ஒழுங்கு சரியாய் நடப்பதாகவும் முஸ்லிம் - வெள்ளையர் ஆட்சியை ஒப்பிடும்போது நீதிநியாயமற்ற காலத்தையும் - நியாயம் நிறைந்த காலத்தையும் எப்படி ஒப்பிட்டுப் பேச முடியும்? என்றும் பங்கிம் சந்திரர் கேட்கிறார்.

அத்துடன் அந்தக் கதாசிரியர் கதையெழுதிய 1882 காலக்கட்டத்தில் வெள்ளையரை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி நாடு முழவதும் உருவாகி இருக்கிறது. முதல் சுதந்திரப்போர் என்று சொல்லப்படும் சிப்பாய்க் கலகம் நடந்தபோது பங்கிம் சந்திரர் 20 வயது இளைஞராக இருக்கிறார். அந்த வயதில் வரவேண்டிய அந்த தேசிய உணர்வு அவருக்கு வந்ததாகத் தெரியவில்லை. வெள்ளையரை எதிர்த்து நாடு முழவதும் நடந்த கிளர்ச்சிகள் தவறு என்பதைச் சுட்டிக்காட்ட எழுதப்பட்டதாகவே தெரிகிறது. அதனை பங்கிம் சந்திரர் முன்னுரையிலும் தெரிவிக்கிறார். கதையிலும் பல இடங்களில் அதனை வெளிப்படுத்துகிறார்.

வெள்ளைக்கார கேப்டன் ஒருவன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வந்தபொழுது அவனைப் பிடித்து வைத்துக்கொண்டு பவாநந்தன் என்பவன் சொல்கிறான் ஷஷ காப்டன் துரை! உம்மை நாம் கொல்லோம்! ஆங்கிலேயர் எங்களுக்கு எதிரிகளல்லர்! நீங்கள் ஏன் துருக்கருக்கு ஆதரவாக வந்தீர்? நாங்கள் உங்களுடைய நண்பர்கள். ஆங்கிலேயருக்கு வெற்றி உண்டாவதாகுக! என்று சொல்கிறான். இன்னொரு இடத்தில் ஈஸ்வர கிருபையால் வாரன்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாய் வந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை இரட்சிக்கும்பொருட்டே வந்திருக்கிறார்களென்றும் ஒரு இடத்தில் பங்கிம்சந்திரர் வெளிப்படுத்துகிறார்.



அதேநேரத்தில் முஸ்லிம்களை வெறுக்கக்கூடிய செய்திகள் ஏராளம் இருக்கிறது. அந்தப் படைவீரர்களின் குருவான ஸத்யானந்தரும் மகேந்திரனும் கைதுசெய்யப்படுகிறார்கள். அவர்களை மீட்க படைத்தளபதிகளுள் ஒருவன் பேசுகிறான் ஷஷ நாம் இந்த முஸ்லிம் அரசாட்சியாகிய பறவைக் குரம்பையைக் கலைத்து இந்தப் பதிதர்களாகிய யவனர்களின் நகரத்தைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்திவிட வேண்டும் என்றும் இந்தப் பன்றிக்கூட்டத்தைத் தீவைத்தெரித்து மாதாவாகிய ப10மியை புனிதமாக்கவேண்டும் என்று சங்கல்பித்திருக்கிறோமல்லவா? அந்தநாளும் வந்துவிட்டது. அந்த யவனபுரத்தைத் தூளாக்குவோம்! அந்தப் பன்றிக்கிடையை எரித்து நீறாக்கி ஆற்றுநீரில் கரைத்துவிடுவோம்! அந்தக் குருவிக்குரம்பையைக் கலைத்துக் காற்றில் சிதறடிப்போம்ää என்று வெறி உண்டாக்குகிறான். அவர்களது குருவையும் மகேந்திரனையும் விடுதலை செய்த பிறகு படைவீரர்கள் துருக்கரது வீடுகளுக்குத் தீ வைத்தனர் என்ற செய்தியும் இடம்பெற்றிருக்கிறது.
இடையில் கொஞ்சநாள் அவர்களது குரு காணாமல் போய்விடுகிறார். அவர் திரும்பிவந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் பல வதந்திகள் பரவுகின்றன. அவர் இமயமலைச்சாரலுக்குச் சென்று தவமிருந்து திரும்பி வந்ததாகவும் ராஜ்யம் கிடைக்கப் போகிறதென்றும் பேசிக்கொண்டார்கள். அப்பொழுது பெருத்த ஆரவாரம் உண்டாயிற்று. ஷசிலர் கொல்லுங்கள்ää மொட்டைத்தலையரைக் கொல்லுங்கள் என்று கூச்சலிட்டனர். ஓருவன்ää அண்ணே! மசூதிகளை இடித்துத்தள்ளி ராதா மாதவ மந்திரத்தைக் கட்டும்படியான காலமும் வருமோ? என்பான். சிலர் வருணாசிரம தருமங்கள் நிலைதடுமாறி நிற்பது ஒழிந்து மீண்டும் வருணாச்சிரமம் நிலைக்கும் காலமும் வருமோ என்றும் பேசிக்கொண்டனர்.
இறுதியில் போரில் வெற்றி பெறுகிறார்கள். அப்பொழுது படைவீரர்கள் எங்கே என ஒருவன் வினவ மற்றொருவர் எல்லோரும் கொள்ளையடிக்கப் போயிருக்கிறார்கள். முசல்மான்களின் கிராமங்களையும் பட்டுத் தொழிற்சாலைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்வார்கள் என்கிறான். அப்படிப் போகும்வழியில் வழிப்போக்கர்களையும் வீட்டிலுள்ளவர்களையும் பிடித்துக்கொண்டு வந்தேமாதரம் சொல்லுங்கள்ää இல்லையேல் உங்களை அடித்துக் கொல்லுவோம் என்று மிரட்டுகிறார்கள். எதிரிலகப்பட்ட முகமதியர்களைத் துரத்தி அடித்தனர். சிலர் கூட்டங்;கூட்டமாகச் சேர்ந்து துருக்கத் தெருக்களுக்குத் தீ வைத்தனர். சொத்துக்களைக் கொள்ளையடித்தனர்.

இவையெல்லாம் அந்த நாவலில் வரும் முஸ்லிம் வெறுப்புக்கு உதாரணங்கள்.

வங்காளத்தில் முஸ்லிம் ராஜ்யம் ஒழிந்தபிறகு அந்தப்படையின் குருவான சத்யானந்தர் இந்துராஜ்யத்தை அமைக்கவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார். அப்பொழுது திருமாலே வைத்தியர் உருவில் வந்து உன்னுடைய வேலை முடிந்து விட்டது. இனி புறப்படு என்று சொல்கிறார். மகாபிரபு! இன்னும் நான் இந்துராஜ்யத்தை அமைக்கவில்லையே! இப்பொழுது எப்படி வருவது? என்று கேட்கிறார். இப்பொழுது இந்துராஜ்யம் அமையாது. இந்துராஜ்யம் அமையும்வரை ஆங்கிலேயரே நமக்கு அரசராயிருப்பர். ஆங்கிலேயர் அரசராகாவிடில் ஆரிய சனாதன தருமத்தின் புனருத்தாரணம் நிறைவேறாது. என்று அந்த மகாபுரு~ர் சொல்கிறார். அத்துடன் நமது மக்களுக்கு வி~யஞானம் குறைவாக இருக்கிறது. ஆங்கிலேயர் ஞானத்தில் சிறந்தவராக விளங்குகிறார்கள். கற்பிப்பதிலும் வல்லவராக இருக்கிறார்கள். நமது தேசத்தார் ஆங்கிலேயரிடம் தத்துவங்களை அய்யந்திரிபறக் கற்பாராயின் சனாதனதர்மம் பரவுவதற்கு யாதோர் தடையும் இருக்காது. இந்துக்கள் அறிவிலும் திறனிலும் பெருமையடைகிறவரையில் ஆங்கிலேய அரசாட்சியே இங்கு நடக்கும். அந்த ஆங்கிலேயர்களை அரசாட்சியில் அமர்த்துவதற்காகவே இந்தக்கிளர்ச்சி நடந்தது என்று அந்தமகாபுரு~ர் சொல்கிறார்.

ஆங்கிலேயரை அரசாட்சியில் அமர்த்துவதற்காகவே இந்தக்கிளர்ச்சி நடந்ததாக அந்தக் கதையில் மிகத் தெளிவாகவே கூறப்பட்டிருந்தாலும் பார்ப்பனர்கள் திட்டமிட்டு வெள்ளையரை எதிர்க்கவேண்டும் என்ற உணர்ச்சியை இந்த நாவல் உருவாக்குவதாகக் கூறுவது கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.
முஸ்லிம்கள் வந்ததால் நிலைதடுமாறிப்போன வருணாசிரமத்தையும் சாதியையும் மீண்டும் நிலைபெறச் செய்ய வேண்டுமென்பதற்காகவே பார்ப்பனர்கள் பல காலம் முயன்றிருக்கிறார்கள். வருணாசிரமம் எப்பொழுதெல்லாம் தகர்க்கப்பட்டதோ அப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் ஏதாவதொரு வகையில் சூழ்ச்சிகள் செய்து வருணதர்மத்தை மீண்டும் புதுப்பித்திருக்கிறார்கள்.

பௌத்தமும் சமணமும் வருணதர்மத்தை ஒழித்தபோது அப்படித்தான் அவர்கள் அதனை மீட்டிருக்கிறார்கள். காரணம் பௌத்தர்களும் சமணர்களும் அஹிம்சாவாதிகளாக ஆயுதம் எதுவும் இல்லாதவர்களாக இருந்ததனால் அவர்களை மிகச் சுலபமாக வென்று அவர்களது சனாதன தருமத்தை ஆரியர்கள் நிலைநாட்டியிருக்கிறார்கள்.

ஆனால்ää முஸ்லிம்களிடம் அவர்களது வித்தை எதுவும் பயன்படவில்லை. காரணம் முஸலிம்கள் படைபலமும் ஆயுதபலமும் நிறைந்தவர்களாக இருந்திருக்கின்றனர். அதனால் அவர்களை சுலபத்தில் வெற்றி காண இயலவில்லை. ஆங்கிலேயர் வருகை அவர்களுக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது. அவர்களை வைத்து பார்ப்பனர்கள் பல காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் நாம் பார்க்கிறோம்.

வருணாசிரமதர்மத்திலும் சாதியிலும் கைவைக்காமல் இருந்தால் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று ஆங்கிலேயரிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு ஆங்கிலேய அரசாங்கம் இங்கு வலுப்பெறுவதற்கு பார்ப்பனர்களே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் வெள்ளை அரசாங்கம் 1833ல் உருவாக்கப்பட்ட பாராளுமன்றச்சட்டம் விதி 464ல்:

ஷஷ உயர்சாதியான் ஒருவன் கொடூரமான குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்தாலும்ää தன் மலம் மூத்திரம் ஆகியவற்றைத் தானே எடுக்க வேண்டியதில்லை. பட்டினியால் ஒரு பிடி அரிசியைத் திருடியிருந்தாலும் ஒரு பறையன் அந்த மேல்சாதியானின் மலம்ää மூத்திரம் ஆகியவற்றை எடு;க்கவேண்டும்|| என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.    (ஆதாரம்: : தமிழன் அயோத்திதாசப்பண்டிதர் வரலாறுää பக்கம்-68)

மனுதர்ம காலத்தில்கூட எழுதப்படாத சட்டத்தை வெள்ளையரை வைத்து எழுதிக்கொண்டார்களென்றால் அந்த வாய்ப்பை பார்ப்பனர்கள் நழுவ விடுவார்களா? அதனால்தான் வெள்ளையர் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளையருக்கெதிராகக் கிளர்;சிகள் நடந்தபோது அது தவறு என்று சுட்டிக்காட்டி வெள்ளையர் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கதையை எப்படியெல்லாம் தமக்கு சாதகமாக வளைத்திருக்கிறார்கள்?

அந்தக் கதையிலுள்ள வந்தேமாதரப்பாடல் தேசபக்தியை ஊட்டுகிறது என்று இன்னமும் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கையில் ஆட்சி வந்துவிட்டால் இந்தக் கதையில் வருவதைப்போல் வந்தேமாதரம் பாட மறுத்தால் குத்துவோம் கொல்லுவோம் முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடுவோம். வீடுகளைக் கொளுத்துவோம்ää பெண்களை மானபங்கப்படு;துவோம் என்று சொன்னாலும் சொல்வார்கள். வருணாசிரமத்தைப் பாதுகாப்போம்ää ஜாதியைப் பாதுகாப்போம் என்றும் சொல்லுவார்கள். அது தந்தை பெரியார் பிறந்தமண்ணில் எடுபடாது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக