புதன், 24 ஜனவரி, 2018

எப்பொழுதும் காவிச்சிந்தனை



பெல் நிர்வாகம் எப்பொழுதுமே ஏதோ ஒரு காவிச்சிந்தனையிலேயே இருந்து கொண்டிருப்பது தொடர்கதையாகி வருகிறது. கைலாசபுரம் என்று ஊரகத்திற்குப் பெயர் வைத்ததிலிருந்தே அது ஆரம்பமாகி விட்டது.
ஊரகத்திற்குள் எந்த இறைச்சிக் கடையும் இருக்கக் கூடாது. அசைவ உணவகம் இருக்கக் கூடாது என்றெல்லாம் கட்டுத்திட்டத்தை உருவாக்கி உணவகங்களைப் பார்ப்பனர்களிடம் ஒப்படைத்து மாமி ஓட்டல் என்று பெயர் வைக்க அனுமதிப்பது மத ஊர்வலங்களை அனுமதித்து ஊரகத்திற்குள் வாணவேடிக்கைகள் பட்டாசுகளோடு யானை ஊர்வலத்தை நடத்துவது உள்ளிட்ட மதவாத சிந்தனையோடு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது கண்கூடு.
1996ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அது கூடுதலானது. ரொம்ப நல்ல மனிதர் என்று புகழப்பட்ட ஒரு நிர்வாக இயக்குநர் கம்பருக்கு நிர்வாகச் செலவிலேயே விழா எடுத்தார். எவ்வளவு நல்லவர்களாகக் காட்டிக் கொண்டாலும் தங்கள் ஜாதிதான் எல்லவாற்றிலும் உயர்வானது என்பதை உயர்த்திப்பிடிப்பதில் என்றும் அவர்கள் சளைக்காதவர்கள்.
2002ல் நிர்வாகம் வழங்கிய காலண்டர் முழுவதும் பனிரெண்டு மாதத்திற்கும் பனிரெண்டு மதப்படங்கள். அதில் பத்து இந்துமதக்கடவுளர் கடவுளச்சிகள். நமது கடுமையான எதிர்ப்பின் காரணமாக அது தொடர்ந்து வருவது தடைப்பட்டது.  விவேகானந்தர் 150 வது ஆண்டுவிழா என்ற பெயரில் வழங்கப்பட்ட நூல் ஜாதியை ஒழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்றது. எல்லாம் பிராமணத்துவம் என்ற தத்துவத்தை அது போதித்தது. இந்தியாவையே தாங்கி நிற்பது தாமரைதான் என்ற தோற்றத்தை அது உருவாக்கியது. அதுவும் நமது முயற்சியால் தடைப்பட்டது.
எப்பொழுதும் காவிச்சிந்தனையிலேயே இருக்கும் பெல் நிர்வாகம் தற்பொழுது நுழைவாயில்களில் காவி வண்ணத்தை அடித்துக் கொண்டுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் சின்னமாக விளங்கும் காவி வண்ணம் இங்கிருப்பவர்களின் எண்ணமாக இருக்கலாம். ஆனால் இந்த நாடு மதச்சார்பற்ற நாடு. இன்னும் இந்த நாடு இந்துராஜ்யமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்னதாகவே முந்திக்கொண்டு ஆட்சியாளர்களின் தயவைப் பெறுவதற்காக இந்தக் காவி வண்ணம் பூசப்படுகிறதோ என்ற அய்யம் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்தியாநாத் அரசாங்கம் தனது அலுவலகம்  முழுக்க காவி வண்ணத்தைப் பூசி நடப்பது காவிகள் ஆட்சி என்று பறைசாற்றி வருகிறது. அங்கும் கூட ஹஜ் அலுவலகத்திற்கு காவி வண்ணம் அடிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பால் அந்தக் காவி வண்ணம் தற்பொழுது மாற்றப்பட்டு விட்டது.
அங்கேயே அப்படி என்கிறபோது இ;ங்கே காவி இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது பெரியார் பிறந்த பூமி. இங்கு காவிகளுக்கு ஒருபோதும் இடமில்லை.  அதிகாரிகள் தங்களது காவிச்சிந்தனையைக் காட்டுவதற்கு வேறு இடங்கள் இருக்கின்றன. ஆனால் திருச்சியிலே அந்த எண்ணம் தொடரக் கூடாது.
எனவேää உடனடியாக பெல் நிறுவன  நுழைவாயிலில் பூசப்பட்டு வரும் காவி வண்ணம் மாற்றப்பட வேண்டும். வேறு எங்காவது அந்த வண்ணத்தைப் பூசலாம் என்ற எண்ணமும் மாற்றப்பட வேண்டும். இல்லையேல் கடுமையான போராட்டத்தை பெல் நிர்வாகம் சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்க்pறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக