சனி, 13 ஜனவரி, 2018

இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?

இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?
விவேகானந்தர் இந்தமதத்தின் பெருமைகளை அமெரிக்காவரை சென்று பரப்பி வந்தவர் என்று எல்லோரும் பெருமைபொங்கச் சொல்லுவர். அவருக்கு அந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? அமெரிக்கா உருவாகி 400வது ஆண்டுவிழா 1883ல் சிகாகோவில் நடத்தப்பட்டது. உலக மதங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டது. இந்து மதத்தில் பார்ப்பனர் ஒருவருக்குத்தான் அந்த அழைப்பு வந்தது. பார்ப்பனர் கடல் தாண்டிச் செல்வது ~தோஷம்| என்பதால் அவர் செல்ல மறுத்ததனால் பார்ப்பனரல்லாதாரான விவேகானந்தருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
அங்கு பேசிய அனைவரும் ~லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்| என்று பேசினார்களாம். விவேகானந்தர் ~பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்| என்று பேசினாராம். உடனே அவருக்குக் கூடுதல் நேரம் கொடுத்துப் பேசச் சொன்னார்கள் என்று வானத்தைக் கிழித்து எழுதி வருகிறார்கள்.
உண்மையில் இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா? கூட்டம் முடிந்தவுடன் பலர் அவரிடம் கேள்வி கேட்டார்கள். உங்கள் நாட்டில் மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் நிழல் பட்டால் தோஷம் என்ற நிலை இருக்கிறதே! அப்படியிருக்க, சகோதரத்துவம் நிலவுவதாகச் சொல்வது சரிதானா? என்ற கேள்விக்கு விவேகானந்தரால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.
பிறப்பதற்கு முன்பே ஒரு குழந்தையின்மீது திணிக்கப்பட்ட ஜாதி அந்தக் குழந்தை பெரியவனாகி இறந்த பிறகு சுடுகாட்டில்கூடத் தொடர்கிறதே! மனிதன் சாகிறான்
ஆனால் அவன்மீது திணிக்கப்பட்ட ஜாதி சாவதில்லையே! இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மதத்தில் சகோதரத்துவம் இருப்பதாக விவேகானந்தர் சொன்னார் என்றால் அது உண்மைக்கு மாறாக பொய்யாக இன்னொரு நாட்டில் எடுத்துச் சொல்லப்பட்ட பொய்யுரை அல்லவா?
அமெரிக்கா வரை சென்று இந்து மதத் தத்துவத்தை உலகறியச் செய்தார் என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்ற தந்திரப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக