வியாழன், 18 ஜனவரி, 2018

யார்? யார்? யார்?

தொடர்ந்து இந்துமத்தை மட்டுமே விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது

காவிகள்

1) இந்து மதத்தில் உள்ளவனை சூத்திரன் என்று இழிவுபடுத்தியது யார்?
2) இந்து மதத்தில் உள்ளவனை தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கி வைத்தது யார்?
3) இந்து மதத்தில் உள்ளவனை தொட்டால் தீட்டு என்று சொன்னது யார்?
4) இந்து மதத்தில் உள்ளவனை பார்த்தால் பாவம் என்று சொன்னது யார்?
5) இந்து மதத்தில் உள்ளவனை இந்துக் கடவுளை வணங்க அனுமதி மறுத்தது யார்?
6) இந்து மதத்தில் உள்ளவனை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்தது யார்?
7) இந்து  மதத்தில் உள்ளவன் கோயிலுக்குள் நுழைந்தால் கோயில் தீட்டாகிவிடும் என்று சொன்னது யார்?
8)   இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதியினரையும் அர்ச்சகன் ஆகக்கூடாது என்று சொல்பவர் யார்?
9) இந்து மதத்தில் உள்ளவனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னது யார்?
10) இந்து மதத்தில் உள்ளவன் கற்றால் நாக்கை அறுக்க வேண்டும் என்று சொன்னது யார்?
11)   இந்து மதத்தில் உள்ளவனை கற்பதைக் காதில் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்னவர் யார்?
12)   இந்து மதத்தில் உள்ளவன் படித்ததை நெஞ்சில் நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப்பிள என்று சொன்னது யார்?
13) இந்து மதத்திள் உள்ளவனுக்கு கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்று சொன்னது யார்?
14) இந்து மதத்தில் உள்ளவன் சொத்து சேர்த்தால் அந்த சொத்தை பிடுங்கிக் கொள்ளலாம் என்று சொன்னது யார்?
15) இந்து மதத்தில் உள்ள பெண்களைப் பொட்டுக்கட்டி தேவதாசியாக்கியது யார்? 
16) இந்து மதத்தில் உள்ள பெண்களை குழந்தைத் திருமணம் செய்து கொடுத்தது யார்?
17) இந்து மதத்தில் உள்ள பெண்களை கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற்றியது யார்?
18) இந்து மதத்தில் உள்ள பெண்களை விதவையாக்கி வீட்டுக்குள் முக்காடு போட்டு முடக்கியது 
யார்?
19) இந்து மதத்தில் உள்ள பெண்களுக்கு அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று முடக்கியது யார்?
20) இந்து மதத்தில் உள்ள பெண் இந்து மதக்கடவுளை வணங்க அனுமதி மறுத்தது யார்?
இன்னும் பல கேள்விகள் இருக்கி இந்து மதத்தை அவமதிப்பதாக மற்றவர்களைச் சொல்வது யார்? யார்? யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக