புதன், 31 ஜனவரி, 2018

கிரகணம்

கிரகணம் தோஷமல்ல... குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் பெற்றோரே!
கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ?-

 : கிரகணம் என்பது தோஷமல்ல அதனை அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும்இ வெறும் கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கிரகணம் என்றால் என்ன என்பதை புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை. காலம் காலமாக புரையோடி இருக்கும்

மூடநம்பிக்கைகளில் இருந்து இளம் தலைமுறையினரை அறிவியல் ரீதியாக சிந்திக்க வைக்க வேண்டியதும் பெற்றோர் செய்ய வேண்டியதே. பூமியின் ஒரு பக்கம் சூரியனும் மறுபக்கம் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு சூப்பர் மூன் என்று சொல்லப்படுகிறது. இதே போன்று ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமி ப்ளூ மூன் என்று அறிவியல் ரீதியில் அழைக்கப்படுகிறது. ப்ளூ மூன் என்பதால் நிலவு நீல நிறத்தில் தெரியாது. விண்வெளியில் உள்ள மாசை பொறுத்து இன்று சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம்.


 வழக்கமாக நிலவு வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆனால் இன்றைய அதிசய நிகழ்வின் போது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் தெரியும். இதோடு பூமி நிலவு சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது நிகழும் கிரகணத்தின் போது நிலவொளி முற்றிலும் இருண்டுவிடும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பூமி விலகிச் செல்லச் செல்ல நிலவு மீண்டும் முழு வடிவிற்கு வரும்.

எப்போது கிரகணத்தை பார்க்கலாம்

மாலை 5.48 மணிக்கு கிரகணம் தோன்றினாலும் நிலவு உதயம் மாலை 6.04 மணிக்கே கிரகணத்தை பார்க்க முடியும். தொடர்ந்து 2 மணி நேரங்கள் படிப்படியாக நிலவு மீது இருக்கும் பூமியின் நிழல் விலகத் தொடங்கி 8.40 மணியளவில் முழுமையாக நிலவு தெரியும். அதன் பின்னர் நிலவு வழக்கம் போல வெண்மை நிற ஒளி வீசும். வெறும் கண்களாலேயே பார்க்கலாம் பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பதால் பொதுமக்கள் அச்சப்படாமல் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே கிரகணத்தை பார்க்கலாம். கடற்கரைகளில் கிரகணம் இன்னும் சற்று தெளிவாகத் தெரியும் என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கடற்கரைகளுக்கு அழைத்து சென்றும் கிரகணம் பற்றிய புரிதலை ஏற்படுத்தலாம்.

 குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்

அறிவியல் ரீதியிலான விளக்கங்களுடன் வானியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்காக அறிவியல் இயக்கம் சார்பில் விளக்கக் கூட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே வளர் தலைமுறையினருக்கு கிரகணம் தொடர்பான புரிதலை ஏற்படுத்த பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சரியான முறையில் அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

வானியல் நிகழ்வை பார்த்து மகிழுங்கள் கிரகணம் என்றாலே தோஷம் என்று பார்க்கப்படும் நிலை இனியேனும் மாற அவை தொடர்பான அறிவியல் காரணங்கள் மிக முக்கியம். எனவே மக்கள் எந்த வித அச்சமும் இல்லாமல் குடும்பதோடு குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த சூப்பர் மூனைக் காட்டி விளக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக