புதன், 24 ஜனவரி, 2018

விஜயேந்திரனின் கொழுப்பு



தமிழ் நாட்டில் வாழும் பார்ப்பனர்கள் தமிழில் பேசினாலும் தமிழையே வைத்துப் பிழைப்பு நடத்தினாலும் தமிழைத் தமது தாய்மொழியாகக் கருதுவதில்லை. செத்துப்போன சமஸ்கிருதத்திற்குக் கொடுக்கும் மரியாதையை சீரிளமைத் திறத்தோடு விளங்கும் தமிழுக்குத் தருவதில்லை.

காஞ்சி சங்கராச்சாரி தமிழில் பேசினால் தீட்டு என்று கருதுபவர். தப்பித் தவறித் தமிழில் பேசிவிட்டால் தீட்டாகிவிட்டது என்று கூறி உடனே குளிக்கக் கூடியவர். தமிழில் பத்திரிகை நடத்தி தமிழால் பிழைப்பு நடத்தும் தினமலர்ப் பார்ப்பான் சமஸ்கிருதம் செம்மொழி ஆக அறிவிக்கப்பட்டதை வரவேற்றான். ஆனால் தமிழ் செம்மொழி ஆனால் வீட்டு;க்கு வீடு பிரியாணி வருமா என்று கேட்டான்.

தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திய துக்ளக் பார்ப்பான் தமிழ் படித்தால் சட்டி சுரண்டும் வேலைக்குக்கூடப் பயன்படாது என்று சொன்னான்.

 படிப்பறிவில்லாத பார்ப்பான் கூட தமிழில் கோயில்களில் அர்ச்சனை செய்ய வேண்டுமென்றால் கூடவே கூடாது என்பான். சிதம்பரம் கோயிலில் தமிழில் தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமி என்ற முதியவரை அங்குள்ள தீட்சதப் பார்ப்பான்கள் அடித்து கையை முறித்துப் போட்டார்கள்.

அப்படிப்பட்ட பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு எச்.ராஜா என்ற எச்சக்கலைப் பார்ப்பான் இன்று தமிழ்நாட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறான். அவன் தமிழில் பேசினாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தினாலும் தமிழுக்காக என்றும் குரல் கொடுக்க மாட்டான். ஏனெனில் அவனது பூர்வோத்திரம் பீஹார் ஆகும். அவனது தந்தை ஹரிஹர சர்மா என்பவர் தமிழ் - சமஸ்கிருத அகராதியை எழுதி இருக்கிறார். அந்த நூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து நடந்திருக்கிறது. அப்போது அனைவரும் எழுந்து நிற்க அதில் கலந்துகொண்ட இளைய சங்கராச்சாரி விஜயேந்திரன் மட்டும் எழுந்திருக்காமல் அப்படியே இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

அதே நேரத்தில் விழா முடிந்து தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நின்றிருக்கிறார். இது எவ்வளவு பெரிய கொழுப்பு? தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நின்ற நபரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்க முடியாதா?
காரணம் என்ன? தமிழுக்கு நாம் ஏன் மரியாதை அளிக்க வேண்டும் என்ற திமிர்தானே இதற்குக் காரணம்? திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்காவிட்டால் தேசிய அவமதிப்பு என்று நீதிமன்றமே கூறும்போது அதே சட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்காவிட்டால் குற்றம் என்று சொல்லாதா? அப்படி எழுந்து நிற்காத, சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கிய சொர்ணமால்யா புகழ் விஜயேந்திரனுக்கு அது பொருந்தாதா?

வைரமுத்து ஏதோ ஆண்டாளைப் பற்றிச் சொல்லி விட்டார் என்பதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று துள்ளிக் குதிக்கும் பார்ப்பனர்கள் இந்த சங்கராச்சாரியை மன்னிப்புக் கேட்கச் சொல்வார்களா?

வைரமுத்து தலை இந்நேரம் உருண்டிருக்க வேண்டாமா? என்று காட்டுக்கத்தல் கத்திய எச்சராசாவிடம் இது பற்றிக் கேட்டதற்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா? என்று அலட்சியமாகச் சென்றிருக்கிறார்.

எனவே, தமிழர்களே! பார்ப்பான் என்றைக்கும் தமிழுக்கோ தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்கோ எதிரிகள்தான். அவர்களது வலையில் சிக்கி சீரழியாதீர்!

வைரமுத்து அவர்களை மன்னிப்புக் கேட்கச் சொல்லும் பார்ப்பனர்களே! தமிழையும் தமிழ் இனத்தையும் இழிவுபடுத்தும் சங்கராச்சாரியும் பார்ப்பனர்களும் மன்னிப்புக் கேட்பது எப்போது?

சமாளிக்கவே தியானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக