வெள்ளி, 26 ஜனவரி, 2018

கலைஞர் பக்கம் நிற்பது கடமை


"தமிழை தாக்குபவன் முதலில் குறி வைப்பது கலைஞர் கருணாநிதியை தான்".. ஏன்??
ஏனென்றால், அவர்களால் "நீச பாஷை" என கேவலப்படுதபட்ட, இழிவுப்படுதபட்ட தமிழ் மொழியை, தான் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது,
ஆலய வழிப்பாட்டில் தமிழ் - சட்டத்தின் மூலம் செயல்படுத்தினார்...
தமிழ்த் தாய் வாழ்த்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார்...
இசை மேடைகளில் ஒதுக்கப்பட்டிருந்த தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு சார்பில் உதவிகள் பல செய்தார்..
தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் அமைத்தார்..
பல தமிழ் புலவர்கள், அறிஞர்களுக்கு நினைவு சின்னங்கள் அமைத்தார்...
பல தமிழறிஞர்களின் நூல்களை அரசுடமையாக்கி உதவினார்..
தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களை துவக்கினார்...
தமிழ் இணைய பல்கலைகழகம் துவக்கினார்...
1970ஆம் ஆண்டிலேயே தமிழ் நாடு பாடநூல் கழகம் மூலம் கம்ப்யூட்டர் & எலக்ட்ரானிக்ஸ் குறித்த விஞ்ஞான நூல்களை தமிழில் அறிமுகப்படுத்தினார்..
"தமிழ் யூனிகோட்" எழுத்துருவை, கம்ப்யூடருக்கு பொதுவான எழுத்துருவாக அதிகாரப்பூர்வ அறிவித்தார், இதினால்தான் இணையத்தில் தமிழின் பயன்பாடு சுலபமாகியது.. பரவலாகியது..
கம்ப்யூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடங்களை அனைவரும் கற்க, தமிழ் வழியில் கம்ப்யூட்டர் பாடங்களை அறிமுகம் செய்தார்..
தமிழ் வழி படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் சிறப்பு ஒதுக்கீடு அளித்தார்..
தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்கவேண்டும் என்று சட்டம் இயற்றினார்...
வணிகநிறுவனகளின் பெயர்பலகையில் தமிழ் இடம்பெறவேண்டும் என்று சட்டம் இயற்றினார்...
தமிழ் மொழிக்காய் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தார்...
மொழிப்போர் தியாகிகளுக்கு அரசு வேலை, பென்ஷன் போன்றவற்றை அளித்தார்..
நீதிமன்றங்களில் தமிழையும் ஒரு வழக்காட்டு மொழிக்க வழிவகுத்தார்..
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்தார்....
திருக்குறள் வளர்சிக்கு பல உதவிகள் செய்தார், திருவள்ளுவர் புகழ் பாடும், வள்ளுவர் கோட்டம், குமரி வள்ளுவர் சிலை போன்றவற்றை அமைத்தார்...
திருவள்ளுவர் தினத்தை அறிவித்தார்..
உலக தமிழாராய்ச்சி நூல்நிலையம் அமைத்தார்..
தமிழிசை பண்ணாராய்ச்சி மையம் அமைத்தார்..
தமிழ்வளர்ச்சித்துறை என்று தனி அமைச்சகம் கண்டார்...
இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்...எந்த ஒரு முதல்வரையும் விட, தமிழுக்கு, அதின் வளர்ச்சிக்கு அதிகம் பாடுபட்டவர் கலைஞரே....
எனவே, தமிழ், தமிழர் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும், சோ.சாமி, சு.சாமி, குருமூர்த்திகள், எச்.ராஜாக்கள், தினமலர் கும்பல், குமுதம் வரதராஜன், தினமணி வைத்தியநாதன், பாண்டேக்கள் போன்ற ஆரிய பார்ப்பனீய சக்திகளால் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கப்படும், "புகையையும் பகையையும் மிச்சம் வைக்ககூடாது, அழித்துவிடவேண்டும்" என்ற தீரா வன்மத்துடன் அவர்களால் எதிர்க்கப்படும், ஒரே அரசியல் தலைவர், கலைஞர் மட்டுமே...எதிர்க்கப்படும் ஒரே அரசியல் இயக்கம், திமுக மட்டுமே.....
ஆகையால், உண்மையான தமிழர்கள், திராவிடர்கள் அனைவரும் திமுக & கலைஞர் பக்கம் நிற்பது கடமையல்லவா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக