திங்கள், 20 பிப்ரவரி, 2017

மானமிகு தோழர் கி.வீரமணி

மானமிகு தோழர் கி.வீரமணி <3
¨ பத்து வயதிலே பொது வாழ்வுக்கு வந்து மூடநம்பிக்கைக்கும், பார்ப்பன ஆதிக்கத்திற்கும் எதிராய் முழங்கியவர்.
¨ “தட்டுத்தடங்கலின்றி சரளமாக, பார்ப்பன ஆதிக்கத்தையும், ஏமாற்றுப் புராணப் புளுகையும், ஆபாசங்களையும், கடவுளையும் கிழி கிழி என்று கிழிப்பதை வாய்பிளந்து கொண்டு நானும் பார்த்தேன் - கேட்டேன்!” என்று எழுத்தாளர் ஜெயகாந்தனால் வியந்து பாராட்டப்பட்டவர்.
¨ “திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்” என்று அண்ணாவால் புகழப்பட்டவர்.
¨ பதினொரு வயதிலே பெரியாரைச் சந்தித்து இயக்கப் பணி ஆற்றியவர்.
¨ மாணவர் பருவத்திலே ‘முழக்கம்’, ‘புதுமை’ என்ற கையெழுத்து ஏடுகளை நடத்தியவர்.
¨ பதினொரு வயதில் திருமணத்தில் வாழ்த்துரை வழங்கியவர்.
¨ பன்னிரண்டு வயதில் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்.
¨ பதிமூன்று வயதில் மாநாட்டுக் கொடி ஏற்றியவர்!
¨ பதினான்கு வயதில் படத் திறப்பாளர்!
¨ 21 வயதில் கலைஞர் வரவேற்புரையாற்ற, 11 வயதுச் சிறுவனாய் திருவாரூரில் சிறப்புரை ஆற்றிய பெருமைக்குரியவர்.
¨ பதினொரு வயதிலே பல இடங்களுக்கும் சிறப்புப் பேச்சாளராய்ச் சென்றவர்.
¨ அய்யா - அண்ணா கருத்து வேறுபாடு களைய 11 வயதில் அண்ணாவிடம் தூது சென்ற சிறுவன் என்ற வரலாற்றுச் சாதனைக்குரியவர்.
¨ பதினாறு வயதிலே மாநாட்டுப் பொறுப்பாளராய் மாநாடு நடத்தியவர் (1950)
¨ 11 வயதில் பத்திரிகை தலையங்கத்தில்
பாராட்டப்பட்டவர்.
¨ ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்துக்கொண்டே உயர் மதிப்பெண்கள் பெற்றவர்.
¨ வறுமையை வென்று வாகை சூடியவர்.
¨ துணை வேந்தரை உரையால் உருகச் செய்தவர்.
¨ பல்கலைக்கழகப் பரிசுகளை யாரும் பெறாத வகையில் பெற்று சாதனை புரிந்தவர்.
¨ கார் வேண்டாம் என்று பேருந்தில் சென்றவர்.
¨ அண்ணா பெறாத முழு உரிமையை அய்யாவிடம் பெற்றவர்.
¨ மிசா கொடுமையில் மீண்டு வந்தவர்.
¨ அய்யாவின் சரியான வாரிசாய் சரித்திரம் படைப்பவர்.
¨ இயக்க வாழ்வே தன் வாழ்வு எனக் கொண்டவர்.
¨ 9,000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை விலக்கவும், பிற்பட்டோர் இடஒதுக்கீடு
50 சதவீதம் ஆக உயரவும், நுழைவுத் தேர்வு நீக்கப்படவும் காரணமானவர்.
¨ 69 சதவீதம் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில் சேர்க்கச் செய்தவர்.
¨ மண்டல் குழு பரிந்துரையை அமுல்படுத்தச் செய்து மத்திய அரசில் பிற்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கச் செய்தவர்.
¨ ஜாதி ஒழிப்புக்கு பெரும்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தவர்.
¨ ஜாதி, மதம், இனம், மொழியற்ற மணவுறவுகளை தன் குடும்பத்தில் நிகழ்த்தி,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்ற பழந்தமிழர் உயர் வாழ்வை வாழ்ந்து காட்டுபவர்.
¨ பொய் வழக்காட மறுத்த வழக்கறிஞர்.
¨ மாற்றுக் கொள்கையாளரை மதிக்கும் மாண்பாளர்.
¨ காட்சிக்கு எளியவர்! எல்லோரிடமும் எளிதில் பழகுபவர்.
¨ எடைக்கு எடை தங்கம் பெற்று அதைப் பொதுப்பணிக்கு அளித்த உலகின் ஒரே தலைவர்.
¨ “இந்தியா எங்கும் வழிகாட்ட வாருங்கள்” என்று தலைவர்களால் அழைக்கப்படுபவர்.
¨ கீதையின் கீழ்த்தரத்தை கிழித்து தோரணமாய்த் தொங்கவிட்டவர்.
¨ வாழ்வியல் சிந்தனைகளை வையகம் வியக்க, இரண்டாவது வள்ளுவமாய் வழங்கி வருபவர்.
¨ 75 ஆண்டுக் கால பொதுவாழ்விற்கு உரியவர்.
உலகிலேயே அதிக நேரம் பேசியவர், எழுதியவர், பிரச்சார பயணம் மேற்கொண்டவர்.
¨ மூன்று முறை இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நிலையில் 84 வயதிலும் ஓயாது உழைப்பவர்.
¨ யார் இவர்?
¨ அவர்தான் அய்யாவின் அசல் வாரிசான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்! இத்தகு ஒருவரை, உலகில் நீங்கள் அறிந்ததுண்டா? உலகில்தான் வேறொருவர் உண்டா? ஆதிக்கம் அழிக்கவும், சமத்துவம் கிடைக்கவும், ஒடுக்கப்பட்டோர் உயர்வு பெற, உரிமை பெறவும் அதுதானே வழி! சிந்திப்பீர்; செயல்படுவீர்!
- மஞ்சை வசந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக