சனி, 4 பிப்ரவரி, 2017

எங்க மதத்தில தீண்டாமை இல்லை என்று பொய்



ஆர்எஸ்எஸ் சோட தொழிற்சங்கம் நடத்துற பத்திரிகை பிஎம்எஸ் நியூஸ் ஏப்ரல் 2014ல அம்பேத்கர் சொன்னதா ஒரு நியூசைப் போட்டிருக்காங்க. ஆதாரம் எதையும் காட்டலே. என்னன்னா
“தீண்டாமையை அகற்றிட வேண்டி ஆர்எஸ்எஸ் மேற்கொண்டு வருகிற முயற்சிகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆனால் அது மிக மெதுவாக நடக்கும். அதுவரை என்னால் காத்திருக்க முடியாது எனதது வாழ்நாள் முடிவதற்கு முன்பாகவே தீண்டாமைப் பிரச்சினைக்கு தீர்வு காணவே விரும்புகிறேன்” என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னாராம்

“டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவை 1965ம் வருடம் நிறைவேறியதாம். விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற துறவியர் மாநாட்டிற்கு நாடெங்கிலும் இருந்து திரண்டு வந்திருந்த சன்னியாசிகள்ää துறவியர்கள்ää மடாதிபதிகள்ää ஆன்மிகப் பெரியோர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஹிந்து சாஸ்திரங்கள் எந்த ஒரு இடத்திலும் தீண்டாமையை அங்கீகரிக்கவில்லை என்று ஒருமனதாகத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றினார்களாம். பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம். பிறவியில் உயர்வு தாழ்வு காண்பது பாவச் செயலாகும் என்று பிரகடனம் செய்யப்பட்டதாக” அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
எப்படியெல்லாம் சீன் போடுறாங்க பாருங்க. சன்னியாசிகள், துறவியர்கள், மடாதிபதிகள், ஆன்மிகப் பெரியோர்கள் எல்லாம் அறிவிச்ச உடறே செல்லாமப் போறதுக்கு அது என்ன ரூபா நோட்டா. பிரதமர் மோடி 1000 ரூபா, 500 ரூபா செல்லாதுன்னு அறிவிச்சது மாதிரி இந்த சன்னியாசிகள், துறவியர்கள், மடாதிபதிகள்ää ஆன்மிகப் பெரியோர்கள் எல்லாம் அறிவிச்சதனால ரூபா நோட்டு செல்லாமப் போன மாதிரி தீண்டாமை ஒரே ராத்திரியில செல்லாமப் போயிருச்சா?
தீண்டாமை இல்லேன்னு சன்னியாசிகள், துறவியர்கள், மடாதிபதிகள்ää ஆன்மிகப் பெரியோர்கள் யாரும் அம்பேத்கரது கோரிக்கைய ஏற்று தன்னுடைய மடத்தில் அடுத்த மடாதிபதியாக ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமிக்கிறோம்னு சொல்லல. தீண்டாமையை எந்த எந்த சாஸ்திரங்கள் அனுமதிக்கிறது என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அந்த சாஸ்திரங்களையெல்லாம் தீயிட்டுப் பொசுக்குகிறோம்னு எந்த அறிவிப்பும் செய்யல. அது இதுவரைக்கும் நடைமுறைக்கு வரல.
ஆனா ஊர ஏமாத்த நாங்களும் தீண்டாமைய ஒழிச்சிட்டோம்னு மார் தட்டிக்கிறதுல மட்டும் கொறச்சல் இல்ல. இன்னமும் தீண்டாமை தலைவிரிச்சு ஆடிக்கிட்டுத்தான் இருக்குது. அது மோடியோட மாநிலத்திலேயே தலித்துகளை கட்டி வச்சு அடிச்சு இந்துமத யோக்கியதையை நாறடிச்சுக்கிட்டுத்தான் இருக்குது.
தீண்டாமையைக் கடைப்பிடிப்பவனை கட்டிவைத்து அடிக்காதவரை அல்லது எங்க மதத்தில தீண்டாமை இல்லை என்று பொய் சொல்கிறவனைக் கட்டி வைத்து அடிக்காதவரை இந்த நாட்டில் தீண்டாமை ஒழியாது. இவண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக