சனி, 4 பிப்ரவரி, 2017

மதுரை, பிப்.4- அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான  வரும் மார்ச் 10 ஆம் தேதியன்று திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டமும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி, செயல்பட வைக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள், ஆன்மிகப் பெருமக்கள்,  சட்ட வல்லுநர்கள் பங்கேற்கும் மாபெரும் இன இழிவு ஒழிக்கும் மாநாடு வரும் ஏப்ரலில் - தலைநகரமாம் சென்னையில் நடைபெறும் என்பது உள்பட பல முக்கிய அனல்பறக்கும் தீர்மானங்கள் மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
4.2.2017 அன்று மதுரையில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


தீர்மானம் 14:
பெல் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துக!
திருச்சி திருவெறும்பூரில் ‘பெல்' நிறுவனத்தில் ஒப்பந் தத் தொழிலாளர்கள் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரு கிறார்கள். அவர்களில் பட்டதாரிகளும் உண்டு. அத்தகு ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1075. இவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற இந்த கோரிக்கைக்காக திராவிடர் கழகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே போராடி வருகிறது.
அரித்துவார், அய்தராபாத் ஆகிய இடங்களில் இதே ‘பெல்' நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந் தரப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், திருவெறும்பூர் ‘பெல்' நிறுவனத்தில் மட்டும் விடாப்பிடியாக தொழிலாளர் விரோதப் போக்கில் நிருவாகம் ஈடுபட்டு வருகிறது.
‘நவரத்தினா' என்று அழைக்கப்படும் ஒன்பது நிறு வனங்களில் ‘பெல்' நிறுவனமும் ஒன்று.  இலாபம் கொழிக்கும் நிறுவனமாக இது ஒளி விடுவதற்கு முக்கிய காரணமே இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் கடும் உழைப்புதான்! எல்லாத் துறைகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். ஆனாலும், தொழிலாளர் விரோதப் போக்குடன் இந்த நிருவாகம் நடந்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
இதுகுறித்து திராவிடர் கழக அமைப்பான பெல் வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் பல காலமாக வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், மத்திய தொழிலாளர் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகியவை தொழிலாளர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தும், அதனைப் பொருட்படுத்தாமல், சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து எதையாவது சொல்லி நிறுவனத்தின் செல வில் தொடர்ந்து நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து கொண்டே வருகிறது. தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி, மத்திய அரசுடன் தொடர்புகொண்டு, திருவெறும்பூர் பெல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை நலன் கோரும் விடயத்தில் அக்கறை செலுத்துமாறு இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. அவர்களின் நீண்டகால உழைப்புக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருமாறும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. பலரும் ஓய்வு பெறும் வயதினை எட்டிக்கொண்டுள்ளனர் என்ற உண்மையையும் இப்பொதுக்குழு நினைவூட்டுகிறது.


Read more: http://viduthalai.in/headline/137479--10--------.html#ixzz4Xi8VWnBC

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக