வியாழன், 2 பிப்ரவரி, 2017

அண்ணா நினைவுநாள் சிந்தனை

அண்ணா நினைவுநாள் சிந்தனை

ஆரியர் தங்களுடைய கருத்துக்களையும் கடவுள் கதைகளையும் கூறி வரும்போது அறிவுக்கு இவை பொருந்துமா? ஆராய்ச்சிக்கு ஈடுகொடுக்குமா?  என்பதைப்பற்றிக் கவலையே கொள்ளவில்லை.

ஆண்டை அடிமைக்குக் காரணம் கூறிக்கொண்டிருப்பானா?
குழந்தையை மிரட்டக் கிழவர்கள் அய்ந்து கண்ணனைப் பற்றியும் ஆறுகாலனைப் பற்றியும் கதை கூறும்போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு வாய்பொத்திக் கொண்டிருக்குமேயன்றி தாத்தா இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டா?
குழந்தைப்பருவம் மனித சமுதாயத்துக்கு இருந்தபோதுதான்  இடிதேவன்ää மின்னல்மாதா மழைமாகாளி தீக்கடவுள் என்று கதைகள் கட்டிவிடப்பட்டன.
உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள் அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின.
ஆனால் இங்கு மட்டும் ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்றும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன் அதே கருத்துக்களை மக்களிடம் பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக்கொண்டுள்ளனர்.
அதனாலேயே அறிவுசூனியமே ஞானமென்றும் இருப்பதை இல்லையென்று கூறுவதே வேதாந்தமென்றும் இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கமென்றும் போதிக்கப்பட்டு விட்டது

அபின் விற்று வாழுபவன் போதை கூடாது என்று பிரசங்கம் புரிவானா?

(ஆரியமாயை யில் அறிஞர் அண்ணா பக்கம் 11)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக