சனி, 4 பிப்ரவரி, 2017

மனு(அ)தர்மம்

பெண்களை இழிவுபடுத்தும் மனு(அ)தர்மம்

இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்போது விவேகிகள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள்


இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச்செல்வதுடன் ஆசைக்கும் கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்

தாய் மகள் சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றலவாய்ந்தவை அறிவாளியையும் வெற்றிகொள்ளும்

பெண்கள் அழகைப்பற்றிக் கவலைப்படுவதில்லை வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால் போதும் அழகாக இருப்பினும் அசிங்கமாக இருப்பினும்  உடலுறவு கொள்ளத் தயங்கார்

ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால் சலனபுத்தியால் இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகி விடுவார்கள்

படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்

படைப்பிலேயே மனு பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம் தாகம் ஆபரண ஆசை கேடான ஆசைகள் கோபம் நேர்மையின்மை வஞ்சகம் தீயநடத்தை ஆகியவை

மனு வகுத்துள் சட்டங்கள் இக்கருத்துக்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. எச்சூழ்நிலையிலும் பெண்கள் சுதந்திரமாக இருத்தல் கூடாது என்பது மனுவின் கருத்து

என அண்ணல் அம்பேத்கர் எழுதிய அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் தொகுதி 7ல் கூறப்பட்டுள்ளது

அண்ணல் அவர்கள் 1927ம் ஆண்டிலேயே மனுதர்மத்தை தீவைத்துப் பொசுக்கினார்கள்
பெரியாரும் பெரியார் தொண்டர்களும் மனுதர்மத்தின் அயோக்கியத்தனங்களை தோலுறித்து வந்துள்ளனர்

தற்போது திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் வரும் மார்ச் 10ந்தேதி பெண்களை இவ்வாறு இழிவுபடுத்தும் மனுதர்மத்திற்குத் தீவைத்துக் கொளுத்த இருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக