வியாழன், 15 மார்ச், 2018

பெரியார் தமிழை சனியன் என்றாரா?

பெரியார் தமிழை சனியன் என்றாரா?

தன் வாழ் நாள் முழுவதும் தமிழன் தன்மானம் பெறுவதற்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்ää தமிழை சனியன் என்று சொன்னார் என்று எச்சராஜா போன்ற பார்ப்பனர்கள் இப்போது கூவி வருகிறார்கள். இப்படிப்பட்ட பார்ப்பனர்கள் தமிழுக்கும் தமிழனுக்கும் என்ன என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்?

சமஸ்கிருதம்தான் தேவபாஷை தமிழ் நீசபாஷை என்பவர்கள். சமஸ்கிருதம்தான் முதலில் தோன்றியது. அதிலிருந்துதான் தமிழ் தோன்றியது என்று கதை விட்டவர்கள்.  தமிழில் பேசினால் தீட்டாகிவிடும் என்கிற சங்கராச்சாரியை வழிபடுபவர்கள். தமிழைக் கோயிலில் அர்ச்சனை மொழியாக்க வேண்டும் என்று பெரியார் கூறியபோது அந்தத் தமிழ் கடவுளுக்குப் புரியாது என்றார்கள். சிதம்பரத்தில் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் தேவாரம் திருவாசகம் பாடிய போது அவரைப் பாடவிடாமல் அவரது கையை உடைத்து அநியாயம் செய்தவர்கள்.

 தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி வருமா என்று தினமலரில் எழுதியது பார்ப்பனக் கூட்டம். சமஸ்கிருதத்தை தேசிய மொழி ஆக்க வேண்டும் என்பதற்காகத் துடியாய்த் துடிப்பவர்கள் பார்ப்பனர்கள். தமிழன் அர்ச்சகரானால் சாமி செத்துப் போகும் என்று இன்றும் வாதாடுபவர்கள். தமிழன் கோயில் கருவறைக்குள் நுழைந்தால் தீட்டு என்று சொல்பவர்கள். தமிழனை சூத்திரன் என்று இழிவுபடுத்தி சாஸ்திரம் எழுதி வைத்திருப்பவர்கள்.
அந்த சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதேää அவன் படித்தால் நாக்கை அறுää காதில் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றவர்கள். சூத்திரன் செல்வம் சேர்க்கக் கூடாது என்று நம் வளர்ச்சியைப் பறித்தவர்கள். தமிழன் மருத்துவம் படிக்கக் கூடாது. பார்ப்பான் மட்டுமே மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துக் கல்லூரியில் இடம் என்று சூழ்ச்சி செய்தவர்கள். தமிழன் அரசு உத்தியோகம் பெற தகுதி திறமை அற்றவன் என்று சொல்பவர்கள். இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்.

திருவையாறு இசைவிழாவில் தமிழ்ப் பண்டிதர் ஒருவர் சித்தி விநாயகனே என்று கடவுள் வாழ்த்தைத் தமிழில் பாடினார். உடனே அடுத்துப் பாட வந்த பார்ப்பனர் இந்த மேடை தமிழில் பாடியதால் தீட்டாகிவிட்டது என்று கூறி அந்தத் தீட்டினைப் போக்க காவிரி நீரையும் பஞ்சகவ்யத்தையும் தெளித்து தீட்டுப் போக்கி அதன் பிறகு சமஸ்கிருதப் பாடலைப் பாடினார். அதனால் அன்றைக்கு பெரியார் நடத்திய ~குடியரசு| பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்த கலைஞர் அவர்கள் ~தீட்டாயிடுத்து| என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினார். அதனால் கலைஞர் அவர்கள் பெரியாராலேயே பாராட்டப்பட்டார்.

அந்தப் பார்ப்பனர்கள் இன்னமும் திருந்தியபாடில்லை. அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினால் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத சங்கராச்சாரியை வணங்குபவர்கள்.    அய்அய்டியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தில் கணபதி வாழ்த்தைப் பாடுபவர்கள். அப்படிப்பட்ட பார்ப்பனர்கள்தான் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று திசை திருப்புகிறார்கள்.

நாம் பெற்ற கல்வி பெரியாரால் கிடைத்தது. நாம் பெற்ற பதவி பெரியாரால் கிடைத்தது. நாம் பெற்ற வசதியும் வாய்ப்பும் பெரியாரால் கிடைத்தது. அந்தப் பெரியார் தமிழுக்கு விரோதமானவரா? ஆங்கிலம் 26 எழுத்துக்களை மட்டுமே கொண்டது. ஆனாலும் உலக மக்கள் பலராலும் பேசப்படுகிறது. தமிழ் 247 எழுத்துக்கள் இருப்பதால் கற்றுக் கொள்வதற்கு கடினமாக இருக்கிறது என்று 54 எழுத்துக்களில் தமிழை சுருக்க வேண்டும் என்றவர். அவரது எழுத்துச் சீர்திருத்தத்தில் ஏழு எழுத்துக்களை மட்டும் எம்ஜிஆர் அரசு 1978ல் அங்கீகரித்ததால் இன்று நம் மாணவர்கள் எளிமையாகத் தமிழைப் படிக்கிறார்கள். தட்டச்சு செய்வதற்கும் கணிணியில் பயன்படுவதற்கும் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களே மிகவும் வசதியாக உள்ளது.

தமிழில் புலமைபெற்ற தமிழ் அறிஞர்களால் கூட செய்ய முடியாததை செய்து தமிழுக்குத் தொண்டு செய்த பெரியார் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரானவர்? தமிழை ஒழித்துக்கட்டுவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பார்ப்பனர்கள் தமிழர்க்கு ஆதரவானவர்களா? ஆரியப் பார்ப்பனர்களின் நயவஞ்சகத்தைப் புரிந்துகொள்வீர்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக