திங்கள், 12 மார்ச், 2018

திராவிடர் தொழிலாளர் கழகத்தில் சேர வேண்டும் - ஏன்?






ஏனெனில், அது ஒன்றுதான்

சாதியை ஒழித்து சமதர்மம் படைக்க வந்த இயக்கம்!
தீண்டாமை ஒழித்து திருப்பம் உண்டாக்கும் இயக்கம்!
மதங்களை மாய்த்து, மனிதநேயம் காக்க வந்த இயக்கம்!
மனுதர்மத்தை ஒழித்து மனித தர்மம் வளர்க்க வந்த இயக்கம்!
மானத்தையும் அறிவையும் ஊட்டும் இயக்கம்.
மூடநம்பிக்கையை ஒழித்து அறிவியல் மனப்பான்மையை ஊட்ட வந்த இயக்கம்!
பகுத்தறிவை வளர்த்து பாரில் பொதுவுடைமை பூக்கச் செய்யும் இயக்கம்!
பெண்ணடிமை ஒழித்து பேதைமை நீக்கச் செய்யும் இயக்கம்!
தன்மான உணர்வூட்டி தமிழரைத் தலை நிமிரச் செய்யும் இயக்கம்!
கல்வி – வேலைவாயப்;;பில் தமிழர் முன்னுரிமைபெறப் பாடுபடும் இயக்கம்!
தமிழ்ää தமிழர்ää தமிழ் நாட்டு நலனைக் காக்க சர்வபரித்தியாகங்களும் செய்யத் தயங்காத இயக்கம்!
இடஒதுக்கீட்டைப் பாதுகாத்து நம்மினத்தை எவருக்கும் நிகரின்றி உயர்த்தும் இயக்கம்!
தந்தை பெரியாரையும் தன்மானத் தலைவர் அம்பேத்கரையும் கொள்கை வழிகாட்டியாய்க் கொண்ட இயக்கம்!
கண்ணிருந்தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் இருக்கும் மக்களுக்கு வக்காலத்து வாங்கும் இயக்கம்!
பார்ப்பான்- பறையன், மேல்ஜாதி- கீழ்ஜாதி, ஆண்டான்- அடிமை, உயர்ந்தவன்- தாழ்ந்தவன், ஏழை - பணக்காரன், தொழிலாளி- முதலாளி, ஆண்- பெண் என்கின்ற பேதங்களை ஒழித்து அனைவரும் சமம் என்கின்ற சமதர்ம சமுதாயம் படைக்கப் பாடுபடும் இயக்கம்.
மற்ற சங்கங்கள் செய்யத் தவறுகின்ற, செய்வதற்குக் கூசுகின்ற, செய்வதற்கு சங்கடப்படுகின்ற, செய்வதற்குத் தயங்குகின்ற செயல்களைத் தயங்காமல், கூசாமல், அஞ்சாமல், ஒதுங்காமல் துணிவாகச் செய்கின்ற இயக்கம்!
அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுகின்ற இயக்கம்!
எந்தப் பலனையும் எதிர்பாராமல் பாதிக்கின்ற மக்களுக்குக் குரல் கொடுக்கும் இயக்கம்
உதாரணத்திற்காக ஒன்று : ஒப்பந்த ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்யப் பாடுபடும் இயக்கம்.
சாதியை வளர்க்க சங்கங்கள், மதத்தை வளர்க்க சங்கங்கள், அரசியலில் பதவிபெற சங்கங்கள், ஆளும்கட்சி எதிர்க்கட்சி சங்கங்கள், அனைத்துலக சங்கங்கள், அகில இந்திய சங்கங்கள் என்று பல இருந்தாலும், ஆசை வார்த்தைகாட்டியும், பயமுறுத்திப் பணியவைத்தும் உறுப்பினராய் மற்றவர்கள் உங்களைச் சேர்த்தாலும் தந்தை பெரியார்- அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய இலட்சியங்களில் உறுதியாக இருக்கும் திராவிடர் தொழிலாளர் கழகத்தில் தாமாக முன்வந்து சேரும் புதிய தொழிலாளர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

கடவுளையும் மதத்தையும் ஒழிப்பது எங்கள் வேலையல்ல. தீண்டாமையையும் ஜாதியையும் ஒழித்து சமதர்மம் படைப்பதே எங்கள் இலட்சியம். அதற்குத் தடையாக இருப்பவற்றை ஒழிப்பதே எங்கள் நோக்கம்.


இவண்
பெல் பெரியார் தொழிலாளர் நல உரிமைச் சங்கம் (பதிவு எண் : 460)
இணைப்பு: திராவிடர் தொழிலாளர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக