திங்கள், 26 மார்ச், 2018

பூனா ஒப்பந்தம்



முதல் வட்ட மேசை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கருடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரெட்டமலை சீனிவாசனும் கலந்துகொண்டார். பிரிட்டிஷ் மன்னரும்ää பிரதமரும் அவர்கள் இருவருக்கும் கைகுலுக்குகிறார்கள். ஒரே மேசைமுன் அமர்ந்து தேனீர் அருந்துகிறார்கள். ஆனால் இங்கே ஒரு கல்வியறிவற்ற மூடன் அம்பேத்கரின் கல்வியறிவின் கால்தூசுகூடப்பெறாத ஒரு பார்ப்பான் அவருக்குத் தண்ணீர் தர மறுக்கிறான். அவரிடம் கோப்புகளைக் கையில் கொடுத்தால் தீட்டு என்பதற்காகத் தூக்கி வீசுகிறான். இதில் யாருக்கு யார் அன்னியன்?
அந்த வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் தனித் தொகுதி முறை வேண்டும். அவரவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் அம்பேத்கரும் சீனிவாசனும். இந்த வட்ட மேசை மாநாட்டைப் புறக்கணித்த காந்தி இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்கிறார். அங்கே கலந்துகொண்டு வெள்ளையனே வெளியேறு என்று முழங்கவில்லை. எங்களுக்கு சுதந்திரம் கொடு என்று கேட்கவில்லை. அம்பேத்கருடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறார். கிறிஸ்துவர்கள்ää முஸ்லிம்கள்ää சீக்கியர்களுக்கு அளித்த இட ஒதுக்கீட்டை எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொண்ட காந்தி தாழ்த்தப்பட்டவர்களுடைய இட ஒதுக்கீட்டை மாத்திரம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டால் அம்பேத்கரின் கோரிக்கையை ஆதரிப்பதாகத் தெரிவித்த காந்திää முஸ்லிம் தலைவர்களிடம் சென்று அம்பேத்கரின் கோரிக்கையை ஆதரிக்க வேண்டாம் என்கிறார். அதற்கு முஸ்லிம் தலைவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
பிரிட்டிஷ் பிரதமர் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இரட்டை வாக்குரிமையை அமுல்படுத்த உறுதியளித்தார். அதாவது தாழ்த்தப்பட்டவர்களுடைய பிரதிநிதிகளைத் தாழ்த்தப்பட்டவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். அதே தொகுதியில் பொது வேட்பாளருக்கும் தாழ்த்தப்பட்டோர் வாக்களிக்கவேண்டும் என்ற முறை அது. அதனால் தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான பிரதிநிதி தே;ரந்தெடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டது.
இதனை ஏற்றுக்கொள்ளாத காந்தி அந்த உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். காந்தி இறந்துவிட்டால் நாடே ரணகளமாகும். அம்பேத்கர் மிரட்டப்படுகிறார். அரக்கன்ää துரோகிää பிரிட்டிஷாரின் கைக்கூலி என்றெல்லாம் அம்பேத்கர் தூற்றப்படுகிறார்.  காந்தியின் ஒரு உயிருக்காக ஆறு கோடி மக்களின் வாழ்வுரிமையை விட்டுக்கொடுக்காதீர் என்று பெரியார் தமிழ்நாட்டிலிருந்து தந்தியடிக்கிறார். நிலைமை அதற்கேற்றாற்போல் இல்லை. அம்பேத்கர் காந்தியின் உயிரைக் காப்பாற்ற அவரது விருப்பத்திற்கு மாறாக பூனா ஒப்பந்தத்தில் காந்தியுடன் கையெழுத்திடுகிறார். அதனால் இரட்டை வாக்குரிமை பறிபோகிறது. இன்று தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான பிரதிநிதிகள் செல்ல முடியாது. உயர்ஜாதிக்காரர்களின் ஏவலாள்களும் அடிமைகளும் அரசியல் கட்சிகளின் ஏவலாட்களும்தான் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் செல்ல முடியும். அதனால்தான் பெரியார் அம்பேத்கரை ஆரியஸ்தாபனமான காங்கிரசுக்கு அடங்கிப்போனவர் என்று கூறுகிறார். அதனைப் பின்னாளில் அம்பேத்கரே உணர்ந்தார். பார்ப்பனரல்லாதார் சட்டமன்றத்துக்குச் செல்வதை கடுமையாக எதிர்த்தவர் திலகர். வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் எடுத்த முடிவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த எம்.சி.இராஜாää ஆர்எஸ்எஸ் தலைவரான மூஞ்சே வின் தூண்டுதலால் அதனை எதிர்க்கிறார். அம்பேத்கர் நடத்திய ~மூக்நாயக்| என்ற பத்திரிகைக்கான விளம்பரத்தை தனது பத்திரிகை தீட்டாகிவிடும் என்பதால்.  காசுகொடுத்தும் வெளியிட மறுத்துவிட்டது திலகர் நடத்திய ~கேசரி| என்ற பத்திரிகை. அந்தத் திலகர் வழிவந்த இ.முன்னணி பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் சிண்டுமுடிவது பார்ப்பனர்களுக்கே உரித்தான பிறவிப்புத்தி. இவர்களைப் புரிந்துகொள்வீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக