வெள்ளி, 23 மார்ச், 2018

அனுமன் பிறப்பு





டிசம்பர் 21 அனுமான் பிறந்தநாளாம். தமிழ்நாட்டில் அனுமான் பிறப்பைக் கொண்டாடுவோர் அனுமான் எப்படிப் பிறந்தான் என்பதையும் தெரிந்துகொண்டு கொண்டாடலாமே! கிஷ்கிந்தா காண்டம் 4.66

     வாயு பகவானின் காமலீலையால் பிறந்தவனே அனுமான். அனுமனின் தாய் அஞ்சனா தேவருலக அப்சரசுகளில் மிகவும் அழகானவளாம். மூவுலகிலும் அவளுக்கு நிகரான அழகி இல்லையாம். 4.66 8ää9
ஒரு முனிவனின் சாபத்தால் குரங்கினத்தின் தலைவர் குஞ்சரன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாளாம். கேசரி என்ற குரங்கை கலியாணம் செய்துகொள்கிறாள். சாபமிட்ட முனிவன் சாபச்சலுகையாக அவள் விரும்பும்போது எல்லாம் அவளது மூல உருவத்தை அடையலாம் என்று சலுகை அளித்திருந்தானாம். சாபச் சலுகையைப் பயன்படுத்தி ஒரு நான் தனது சொந்த உருவத்துடன் அழகான உடையுடன் எழிலுற வனப்பகுதியில் உலா வருகிறாள். அவள் அழகில் மயங்கிய வாயு பகவான் அவளுடைய ஆடைகளைக் காற்றில் மேலெழும்படிச் செய்து அவளுடைய அழகில் அவளுடைய உருண்டு திரண்ட தொடைகள்ää திரண்ட மார்பகங்கள்ää முகம் ஆகியவற்றில் மெய் மறக்கிறான். கொடியிடையையும் திரண்ட புட்டத்தையும் சுற்றியுள்ள கச்சத்தையும் ஆடை மேலேறியதால் கண்ட அழகிய கை கால்களையும் கண்ட வாயு பகவான் சொக்கிப் போகிறான் 4.66.14
காமவெறியால் உந்தப்பட்ட வாயு அப்படியே அஞ்சனாவைக் கட்டித் தழுவுகிறான். 4.66.15
வாயுவின் உருவம் தெரியாததால் அஞ்சனா ஒரு ஆண் -ஒரு பெண் என்ற கொள்கையுடைய என்னுடைய உறுதியைக் குலைப்பவன் யாவன்? என வினவினாள். அதைக் கேட்ட வாயு கவலைப்படாதே நான் வாயு பகவான் உன்னை நான் பெரிதும் மதிப்பவன் ஆதலால் நீ அஞ்சாதே! என்னுடைய இந்தக் கூடலால் அறிவுத்திறனும் உடல் வலிமையும் கொண்ட மகனைப் பெறுவாய் எனக் கூறுகிறான். அஞ்சனாவும் இதனால் மனம் மகிழ்ந்து மனம் ஒப்புகிறாள். வாயு தன் வேலையை முடித்துச் செல்லுகிறான். வாயுவின் கூடலால் பிறந்த அனுமனை அவள் ஒரு குகையில் வைத்து வளர்த்து வருகிறாள். செய்தி அறிந்து கேசரி அனுமனை மகனாக ஏற்றுக் கொண்டானாம். நடந்ததற்குத் தன் மனைவி பொறுப்பு அல்ல என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டானாம்.
தன் பிறப்பைப் பற்றிக் கேட்ட அனுமனுக்கு ஜாம்பவான் என்னும் மற்றொரு குரங்கு கூறிய நிகழ்வுதான் இவை 4.66.17.18.19.20
மேலே கூறப்பட்டவை வால்மீகி இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 66வது அத்தியாயத்தில் உள்ளவை. வாயு பகவான் காமவெறியால் அழகான பெண்களையெல்லாம் அஞ்சனையிடம் நடந்ததுபோல் நடந்தால் என்ன ஆகும். அழகான பெண்கள் வெளியில் நடமாட முடியுமா? அவர்கள் அழகிய உடையுடுத்தி காற்றடிக்கும் போது வெளியில் வந்தால் வாயு பகவானிடமிருந்து தப்பிக்க முடியுமா?  பகவான் இராமனைப்பற்றி எழதப்பட்ட கடவுள் கதையிலேயே இந்த ஆபாசங்கள் மலிந்து கிடந்தால் மற்ற கதைகைளைப்பற்றிச் சொல்ல வேண்டுமா? இவையெல்லாம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்துமா?
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் பரப்புகிறவன் அயோக்கியன் வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கு இந்தக் கதையை விட வேறு உதாரணம் வேண்டுமா?
இந்தக் கதையை நம்பி இன்னமும் நாம் இந்த ஆபாசக் கடவுள்களை வணங்க வேண்டுமா?
அனுமனின் பிறப்பைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறோம். அவனுக்கு வானளாவச் சிலைகள் வைத்துக் கும்பிடுவோம். எங்களுக்கு எங்கள் கடவுள் கடவுளச்சிகள் பிறப்பைப்பற்றிக் கவலையில்லை. எங்கள் நம்பிக்கைதான் முக்கியம்.  எங்கள் வீட்டில் அக்கம் பக்கத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே கவலைப்படுவோம். எங்கள் கடவுள்கள் இப்படிச் செய்தால் அதனைக் கண்டுகொள்ள மாட்டோம். எங்களுக்கு பக்திதான் முக்கியம் என்று சொல்கிற பக்தர்களை என்ன செய்ய?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக