திங்கள், 26 மார்ச், 2018



ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளாய் பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுதர்மம். வேதம் என்பதுதான் அக்காலக் கல்வி. வேதத்தை சூத்திரன் காதில் கேட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்@ அவன் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது. அவ்வாறு கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்து வெள்ளைக் காரன் வந்த பிறகும் அவன் காலை நக்கி பார்ப்பனர்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் தங்கள் இனத்துக்கே சொந்தமாக்கிக் கொண்டனர். மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியைப் புகுத்தி பார்ப்பனர் மட்டுமே மருத்துவம் படிக்க வழிவகை செய்து கொண்டனர்.
காங்கிரசில் இருந்த தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்தார்கள். காங்கிரஸ் கட்சியின் மாகாணத் தலைவர்ää செயலாளர் ஆகிய பதவிகளில் பெரியார் இருந்தாலும் காங்கிரஸ் மாநாடுகளில் அந்தத் தீர்மானங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் காங்கிரசை விட்டு வெளியேறினார் பெரியார்.
தமிழகத்தை ஆண்ட நீதிக்கட்சியும்ää நீதிக்கட்சியின் ஆதரவுடன் டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையும் வகுப்புரிமைத் தீர்மானத்தை அமுல்படுத்தினர். அதன்படி கல்வி வேலைவாய்ப்புக்களில் பார்ப்பனர்ää கிறிஸ்துவர்ää முஸ்லிம்கள்ää பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைத்தது.
சுதந்திரம் கிடைக்கும்வரை அதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. பிறவியின் காரணமாக சூத்திரர்களின் கல்வி வேலைவாய்ப்பை மறுத்த பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தான் பிறந்;த ஜாதியின் காரணமாக தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று  வழக்குப் போட்டார். அந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் யார் தெரியுமா? அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் சட்ட வரைவுக்குழுவில் உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஜனாதிபதியாக இருந்த ஒருவர் கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்குப் போட்டியிடுவதுபோல இருக்கிறதா? இல்லையா? அதுதான் பார்ப்பன இனநலன். தங்களது இனநலத்தைப் பாதுகாக்கப் பார்ப்பனர்கள் எவ்வளவு கீழ்நிலைக்கும் இறங்கிச் செல்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இவ்வழக்கில் அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞரும் பார்ப்பனர். நீதிபதி பார்ப்பனர். தீர்ப்பு எப்படி வரும்? கல்வியில் இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு வந்தது. உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததிலும் அதே தீர்ப்பு உறுதியானது.
உடனே ஆர்த்தெழுந்து போராடினார் தந்தை பெரியார். அன்றைக்கு பிரதமர் நேரு அவர்கள். சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு சட்டத்தைத் திருத்த முன்வந்தது. தமிழகத்தில் நடந்த போராட்டத்தின் காரணமாகத்தான் இந்த அரசியல் சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது என்பதை பிரதமர் நேரு அவர்கள் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கர் அவர்களாலேயே தந்தை பெரியாரின் போராட்டத்தால் முதல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
அவ்வாறு பெரியார் போராடி இருக்காவிட்டால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்விதான் கிடைத்திருக்குமா? வேலைவாய்ப்புத்தான் கிட்டியிருக்குமா? இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் யார் காரணம்? தந்தை பெரியார் அல்லவா? நாம் இன்று வாழ்வதே பெரியாரால் அல்லவா?
செப்டம்பர் 17 அவரது பிறந்தநாள். அவரால் வாழ்வுபெற்ற நாம் அவரது பிறந்தநாளை சீரோடும் சிறப்போடும் கொண்டாடுவோம். நன்றியுள்ள மனிதர்களாக வாழ்ந்திடுவோம். வாழ்கபெரியார்! வளர்க அவரது கௌ;கை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக