திங்கள், 26 மார்ச், 2018

முதல் அரசியல் சட்டத் திருத்தம்


காலுக்குச் செருப்பும் தோளுக்குத் துண்டும் போடுவதற்கு உரிமைபெற்றுத் தந்தவர் தலைவர் தந்தை பெரியார். உலகிலுள்ள மற்ற சமுதாய மக்களைப் போல தமிழ்ச் சமுதாயத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றும் பணிக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்கள். இன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள்; தங்களுடைய உயர்வுக்குத் தந்தை பெரியாரின் உழைப்பே காரணம் என நன்றி உணர்ச்சியுடன் நினைவுகூர்கிறார்கள். ஆனால் நம் நிறுவனத்தில் உள்ள சிலர் தந்தை பெரியாரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்ற பிரச்சாரத்தைத் திட்டமிட்டு நடத்தி இளைஞர்களைக் குழப்பி வருகிறார்கள். இந்த சமுதாயத்தின் வளர்ச்சியையும் வாழ்வையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தடுத்து வைத்திருந்த இன எதிரிகளும் துரோகிகளும் செய்துவரும் பித்தலாட்டமான பிரச்சாரங்களுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்களையும் பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள்.
அண்ணல் அம்பேத்கரை திராவிடர் கழகத்தவர்களும் பெரியார் தொண்டர்களும் யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதிலே எங்களுக்கு எந்த விதமான அய்யப்பாடும் கிடையாது. ஆனால் தாழ்த்தப்பட்ட அமைப்புக்களில் உள்ள சிலருக்கு பெரியார் என்றால் வேப்பங்காயாகக் கசக்கிறது. பெரியார் பாடுபட்டதால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பயன் கிடைத்தது என்பதை ஒத்துக்கொண்டால் இளைஞர்கள் பெரியார் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். தாங்கள் தனிக் கம்பெனி நடத்தி பிழைப்பு நடத்த முடியாது என்று கருதக் கூடிய சிலர் அந்த அமைப்புக்களில் முன்னணியில் இருப்பதால் பெரியாருக்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். அவர்கள் அம்பேத்கரையும் முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டதில்லை. அவர் கொள்கையை ஏற்றுக் கொண்டு அதன்படி நடப்பதுமில்லை. அதனால்தான் அவர்கள் பெரியாருக்கு எதிராகப் பேசி வருகிறார்கள்.
அண்ணல் அம்பேத்கர் சட்டத்தின்மூலம் இட ஒதுக்கீட்டுச்  சலுகைகயைப் பெற்றுத் தந்தார்கள் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. ஆனால் சென்னை மாகாணத்தில் அந்த இட ஒதுக்கீடு 1928 முதல் கம்யூனல் ஜி.ஓ. என்ற பெயரில் நடைமுறையில் இருந்து வந்தது. அந்த கம்யூனல் ஜி.ஓ மூலம் அனைத்து அரசுப் பணிகளிலும் தாழ்த்தப்பட்டோர்ää பிற்படுத்தப்பட்டோர்ää முன்னேறிய ஜாதியினர்ää பார்ப்பனர் உட்பட அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. சுதந்திரம் அடையும்வரை அதில் யாரும் கைவைக்க முடியவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகும்கூட ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்றவர்கள் அந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருந்தார்கள். சுதந்திரம் அடைந்து குடியரசு நாடாக அறிவித்த உடன் அண்ணல் அம்பேத்கருடன் அரசியல் சட்ட வரைவுக்குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி என்ற கில்லாடிப் பார்ப்பானால் சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் செல்லாது என்று தீர்ப்பு வாங்கப்பட்டது.
அப்பொழுது தமிழகத்தில் தந்தை பெரியாரும் அவர்தம் இயக்கத்தினரும் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் அன்று பிரதமராக இருந்த நேருவும் சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அரசியல் சட்டத்தை முதல் முதலாகத் திருத்தி இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்தார்கள்.
அவ்வாறு அந்த அரசியல் சட்டத் திருத்தம் வரவில்லையென்றால் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல தாழ்;த்தப்பட்டவர்களுக்கும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படி இந்திய அரசியல் சட்டத்தை முதல்முதல் திருத்தி இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த பெரியாரால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது நன்றி உணர்ச்சியற்ற தன்மையாகும். இவ்வாறு நன்றி உணர்ச்சியற்ற சிலர் இளைஞர்களுக்கும் அந்த நன்றி உணரச்சி வரக்கூடாது என்று கருதக் கூடியவர்கள் இதுபோன்ற பரப்புரைகளைச் செய்து வருகிறார்கள். தயவு செய்து அவர்களுக்கு உண்மையான வரலாற்றைச் சொல்லாவிட்டாலும் தவறான வரலாற்றைப் பதிவு செய்து வரலாற்றில் கரும்புள்ளி ஆகாதீர்கள் என்று கேட்டுக்கௌ;கிறோம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக