திங்கள், 26 மார்ச், 2018



தமிழ்நாட்டில் இருக்கும் பெல் நிறுவனத்தில் தமிழனுக்கு வேலையில்லை என்பதை வேதனையுடன் நாம் குறிப்பிட்டாலும் அந்த வேதனையின் வலி கார்ப்பரேட்டில் உள்ளவருக்கும் புரிவதில்லை. திருச்சியில் உள்ளவருக்கும் தெரிவதில்லை. நூறுபேர் எடுத்தாலும் அதில் தமிழன் யாருமே இல்லையென்றாலும் அது தமிழனுக்கே உறைப்பதில்லை.

தமிழனுக்குத்தான் வேலையில்லை என்றாலும் தமிழுக்கு இங்கே என்ன மரியாதை என்றால் அதுவும் ~0| தான். பெயர்களை ஆங்கிலத்தில்
எழுதுகின்றார்கள்.

பெயருக்கு முன்னால் தமிழில் ~திரு| சேர்ப்பதைப்போல் ஆங்கிலத்தில் ‘Mr’ என்று சேர்ப்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் பெயரை எழுதி அதற்கு முன்னால் ‘Shri’ என்று போடுகிறார்கள். அது வடமொழி. ஆங்கிலத்துக்கு முன்னால் வடமொழி எப்படி வந்தது? ஏன் அந்த  ‘Shri’ என்று போட வேண்டும்? ‘Shri’ என்று போடுவதற்குப் பதிலாக ‘Thiru’ என்று போடலாமே! ஏன் அதனைப் போடுவதில்லை? எல்லாம் வடநாட்டுமோகம்.
அத்துடன் நமது ஆலைக்கு வரும் வழியில் வரவேற்பு வளைவுää கணேசா அருகில் உள்ளது. அந்த வளைவிலும் இரண்டாம் விரிவாக்க வாயிலில் வைக்கப்பட்டுள்ள நுழைவாயிலிலும் Bharat Heavy Electricals  என்று ஆங்கிலத்தில் இருக்கிறது. அதனைத் தமிழில் மொழிபெயர்ப்பதாக பாவ்லா செய்து ~பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ்| என்று தமிழ் எழுத்தில் எழுதியிருக்கிறார்களே! இது தமிழா? இதைத் தமிழ் என்று எந்தத் தம்ப்ளர் மொழி பெயர்த்துச் சொன்னது? தமிழை இதைவிட வேறு யாரால் கொலை செய்ய முடியும்? இப்படி மொழி பெயர்க்கவில்லை என்று யார் அழுதது? இதைவிட இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மலையாளத்திலும் வைத்து விட்டுப் போகலாமே! கேட்டால் இங்கே அவர்கள்தான் அதிகம் வேலை செய்கிறார்கள். அதனால் அந்த மொழிகளில் வைத்திருக்கிறோம் என்று சொல்லி விடலாமே! வேறு எந்த நிறுவனத்திலாவது அந்த மாநில மொழியை இப்படிச் சிதைத்தால் சும்மா விடுவானா? தமிழன் இளித்தவாயன்ää தமிழ் இளைத்தமொழியா? முத்தமிழ் மன்றங்களும் முத்தமிழ் வித்தகர்களும் இருந்தும் இந்நிலை இருப்பதை எவர் கேட்டார்?
இந்த இலட்சணத்தில் இங்கே சில ஊழியர்களுக்கு குற்றப்பத்திரிகையும் நினைவுக்குறிப்பும் வழங்கியுள்ளது நிர்வாகம். அந்த ஊழியர்கள் அதனைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கச் சொன்னால் மொழிபெயர்த்துத் தரமுடியாது என்று கூறுவதோடு ஏதோ அந்த ஊழியர்களுக்கு ஆஙகிலமே அறவே தெரியாதது போலவும் அவர்கள் வேலைக்குச் சேரும்போது எழுதிக்கொடுத்த உறுதிமொழியில் ஆங்கிலம் தெரியும் என்று சொல்லியிருப்பதால் நீங்கள் பொய் சொல்கிறீர்கள். அல்லது முன்பு தவறான தகவலைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறி அந்த உறுதி மொழியின்படி அந்த ஊழியர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுபோல் மிரட்டுகின்ற பாணியில் கடிதம் கொடுத்துள்ளது.
இன்று நீதிமன்றங்களே குற்றப்பத்திரிகைகளை அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்த்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் இங்கே மிரட்டுகின்றார்கள். இவர்களுக்கு தமிழே தெரியாது. அவர்கள் மொழிபெயர்த்தால் எந்த இலட்சணத்தில் இருக்கும் என்பதற்கு நம்முடைய வரவேற்பு வளைவுகளில் உள்ள தமிழே சான்று. ~யூ ஹேவ் பீன் சார்ஜ்டு| என்று தமிழ் எழுத்துக்களில் எழுதித் தருவார்கள். இதுதான் தமிழ் என்பார்கள். எனவேää இவர்கள் மொழிபெயர்த்துக் கொடுப்பதைவிட கொடுக்காமல் இருப்பதே மேல்!
நாம் சொல்வது தவறு. நாங்கள் உண்மையில் தமிழை மதிக்கிறோம் என்று நிர்வாகம் கூறுமேயானால் உடனடியாக இந்த வளைவுகளிலும் நுழைவாயில்களிலும் தமிழ் என்ற பெயரால் கொலை செய்யப்பட்டிருக்கும் சொற்றொடர்;களை எடுத்து விட்டு உண்iமான தமிழில் நுழைவாயிலையும் வரவேற்பு வளைவையும் எழுதி வடிவமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்;. நிர்வாகம் தமிழை மதிக்குமா?
01-07-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக