வெள்ளி, 16 மார்ச், 2018

நாம் ஹிந்துக்கள் அல்ல

ஹிந்துமதம் என்பதும் ஹிந்து மத சம்மந்தமான சாஸ்திரங்கள் கடவுள்கள் கடவுள் கதைகள் நடத்தைகள் முதலியவை எல்லாம் தமிழனுக்கோ தமிழ் நாட்டுக்கோ சம்மந்தப்பட்டவையல்ல சிறிதளவும் சம்மந்தப்பட்டதல்ல அவை யாவும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்டவையும் அல்ல. அவற்றுள் எவையும் எதுவும் தமிழ் மொழியில் தமிழ் நாட்டில் செய்யப்பட்டவையும் அல்ல.

ஹிந்துமதம் நம் மதமாயிருந்தால் அதில் நாம் நம்மை ஈனஜாதி இழிபிறவி நாலாம் ஜாதி சூத்திரன் பார்ப்பானின் அடிமை பார்ப்பானின் தாசி மக்கள் நம்’ பெண்கள் பார்ப்பானுக்கு தாசிகளாக இருக்கத் தக்கவர்கள் என்று எழுதி வைத்துக் கொண்டிருக்க முடியுமா?

ஆகவே அன்பர்களே! நாம் ஹிந்துக்கள் அல்ல ஹிந்துமத வேத சாஸ்திர தருமங்கள் நமக்குச் சம்மந்தப்பட்டவை அல்ல. ஹிந்துமதக் கடவுள்கள் அக் கடவுள்களின் நடப்புக்கள் அவற்றின் கதைகளான புராண இதிகாசக் கூற்றுக்கள் நமக்கு எவ்விதத்திலும் சம்மந்தப் பட்டவை அல்ல என்பதைச் சிந்தித்துத் தெளியுங்கள்

தந்தை பெரியார்

விடுதலை 06.07.1971

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக