திங்கள், 26 மார்ச், 2018



நம்முடைய நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. விவசாய நிலங்கள் அனைத்தும் ஒரு சிலருக்குச் சொந்தமாயிருக்க பெரும்பான்மை மக்கள் விவசாயக் கூலிகளாக நில உடைமையாளர்களிடம் அடிமைகளாக இருப்பார்கள். அவர்களுக்கு கூலி என்பது அந்த பண்ணையாராகப் பார்த்துக் கொடுப்பதுதான். அங்கே எந்த சங்கமும் வைத்துக் கொள்ள முடியாது. அந்த விவசாயக் கூலிக்கு ஆடி மாதத்திலிருந்து தை மாதம் வரை வயலில் வேலை கிடைக்கும். அப்பொழுதுதான் அவன் சம்பாதிக்க முடியும். சம்பாதித்ததை மீதமுள்ள ஆறு மாதத்திற்கும் சேர்த்து வைத்துக்; கொள்ள வேண்டும்.
அப்படி சேமித்து வைக்கும் உணவுப்பொருள் அடுத்த நடவுகாலத்திற்குள் தீர்ந்துவிட வேண்டும். அப்படித் தீராமல் அவனுடைய தேவைக்கு அதிகமாக இருந்தால் சரியான நேரத்தில் வேலைக்கு வரமாட்டான் என்று சிந்தித்த ஆதிக்க வர்க்கம் திருவிழாää தேர்ää பண்டிகை என்று உருவாக்கி அந்தத் திருவிழாவில் கிடாவெட்டுää பொங்கல்ää குடிää கூத்துää கேளிக்கை என்று பலவற்றை ஏற்படுத்தி அடுத்த ஊரிலிருந்து தன்னுடைய மாமன் மச்சான் சொந்த பந்தங்களையெல்லாம் அழைத்து செலவுசெய்து சேமித்த உணவு தானியம் அனைத்தையும் காலி செய்து விட வேண்டும். அப்பொழுதுதான் கூலிக்காரன் வேலைக்கு வருவான். இல்லையென்றால் அவனுக்குத் திமிர் ஏறிவிடும் என்று நினைத்த மேல்ஜாதி மேல்வர்க்கத்தின் சிந்தனையில் உதித்ததுதான் இந்தப் பண்டிகைகள். அதனால்தான் கிராமக்கோயில் திருவிழாக்களெல்லாம் தை முடிந்து மாசி மாதத்தில் தொடங்கி ஆடிவரை நடக்கும்.
அதுபோலத் தீபாவளி என்பது நடவு தொடங்கி களையெடுப்பு நடைபெறும் காலத்தில் வருவதால் அவன் அந்தச் செலவுக்குப் பணம் போதவில்லையென்று தன்னுடைய பண்ணையாரிடமே கடன்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; வாங்கி அத் தீபாவளியைக் கொண்டாடி அந்தக் கடனை அடைக்க அவனிடமே நிரந்தரமாக வேலை செய்ய வேண்டும். இந்தப் பண்டிகைகளால் பார்ப்பனருக்கும் வியாபாரிகளுக்கும்தான் நல்ல வேட்டையே தவிர உழைக்கும் மக்களுக்கு மிஞ்சுவது மானக்கேடும் அறிவுக்கேடும் செலவும்தான்.
ஆனால் நம் நிறுவனத்தில் நமக்கு வழங்கப்படும் போனஸ் என்பது நம்முடைய உழைப்பின் பயன். நாம் ஈட்டிக் கொடுத்த இலாபத்தில் பங்கு. நம்முடைய ஊதியத்தின் கொடுபடாத ஒரு பகுதி. அந்த போனசை முதலாளிமார்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக குறைந்தது அக்டோபர் 30க்குள் கொடுத்துவிட வேண்டும் என்று சட்டம் இயற்றி அந்த போனசுக்கான காலக் கெடுவை சட்டப்பூர்வமாக்கினார்கள். அதுவும் முதலாளிமார்கள் மார்ச் மாதம் உற்பத்தி முடிந்தாலும் இலாப - நட்டக் கணக்கைப் பார்க்க சிறிது காலம் பிடிக்கும் எனபதால் இந்தக் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த நவீன கணிணி யுகத்தில் மார்ச் 31 முடிந்த உடன் ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் உற்பத்தி எவ்வளவு? இலாபம் நட்டம் என்ன? என்பதெல்லாம் ஒரு நொடிக்குள் தெரிந்துவிடக் கூடிய இக்காலக்கட்டத்தில் அக்டோபர் வரை நீட்டிப்பது ஏமாற்று வேலை. எனவேää நம்முடைய உழைப்பின் பலன் பயனுள்ள வகையில் நம்முடைய பிள்ளைகளின் கல்விச் செலவுக்குப் பயன்படும் வகையில் மே - ஜூன் மாதத்திற்குள் வழங்கு என்று கேட்க வேண்டிய  சங்கங்கள் தீபாவளி நெருங்கிவிட்டது போனஸ் கொடு என்று கேட்பது கேலிக் கூத்தானது. தீபாவளிக்கும் போனசுக்கும் என்ன சம்மந்தம்? இந்த போனஸ் என்ன இந்துக்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படுகிறதா? தொழிலாளர் எல்லோருமே தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா?;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
அதைவிட எது நடந்;ததோ அது நன்றாகவே நடந்தது என்று சொல்லும் ஒரு சங்கம் தீபாவளி நெருங்கிவிட்டது யூனிபார்ம் கொடு என்கிறது. இந்த யூனிபார்மைத்தான் தீபாவளிக்குப்; போடுவாங்களா? போனஸ் லேட்டாவதால் தீபாவளியைத் தள்ளிப் போடும் போராட்டம் நடத்தப் போகிறார்களாம். இந்தப் போராட்டத்தை நாங்களும் வரவேற்கிறோம். அதைவிட தீபாளியைத் தடைசெய் என்று போராடினால் அதிலே நாங்களும் கலந்துகொள்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். செய்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக