செவ்வாய், 27 மார்ச், 2018

நீங்கள் யாருக்கெல்லாம் படியளந்தீர்கள்?


படியளந்த சாதிகளுக்கு சில கேள்விகள்
நீங்கள் யாருக்கெல்லாம் படியளந்தீர்கள்?
உங்கள் முகத்திலுள்ள தேவையற்ற மயிர்களை அகற்றி அசிங்கமான உங்களை அழகாக மாற்றிய முடி திருத்துபவர்களுக்கு
ரெண்டுநாள் போட்டிருந்தா நாற்றமெடுக்கும் உங்கள் துணிமணிகளைத் துவைத்து உங்களை ஆள்பாதி ஆடை பாதி என்று மாற்றிய சலவைத் தொழிலாளர்களுக்கு
நீங்கள் கல்லிலும் முள்ளிலும் நடக்கும்போது கள் முள் குத்தாமலும் வெயிலில் நடக்கும்போது வெயில் சுடாமலும் இருக்க செருப்புத் தைத்துக் கொடுக்கும் செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு
நீங்களும் உங்கள் குடும்பமும் உல்லாசமாய் வாழ தங்கள் இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உங்களுக்கு உணவுப்பொருளை உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு
இப்படி உங்களுக்கு உழைத்துப் போட்ட மக்களுக்குப் படியளந்ததாகச் சொல்கிறீர்களே
அவர்கள் தங்கள் தொழிலைச் செய்யாமல் உங்களுக்கு உழைக்காமல் இருந்திருந்தால்
உங்கள் பிழைப்பு நாறிப் போயிருக்காதா?
நீங்கள் காரிலும் பங்களாவிலும் உல்லாசமாக வாழ முடியுமா?
நல்ல சோறு திங்க முடியுமா?
நல்ல துணிமணி உடுத்த முடியுமா?
காலில் செருப்புப் போட்டு நடக்க முடியுமா?
;
ஆனால் இன்னொரு குரூப்புக்கு நீங்கள் அன்று படியளந்தது மாத்திரமல்லாமல் இன்றைக்கும் அளந்துகொண்டிருக்கிறீர்களே
அந்த குரூப்புக்கு படியளந்ததாக என்றாவது சொல்லி இருக்கிறீர்களா?
உங்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் அதற்கு மேலும் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்ற பெயரால் புரோகிதம் செய்து உங்கள் மூளையைக் காலி செய்து உங்களை சூத்திரர்கள் வேசி மக்கள் என்று சொல்லி உங்கள் பெண்களை சூத்திரச்சிகள் தேவடியாள்கள் என்று இழிவுபடுத்தி இன்னமும் காசு பறித்து வருகிறார்களே
அவர்களுக்கு படியளந்ததாக என்றாவது சொல்லி இருக்கிறீர்களா?
அவர்கள் புரோகிதம் செய்யவில்லையெனில் உங்கள் வாழ்வில் ஏதாவது நட்டம் உண்டா?
உங்கள் பணத்தையும் பெற்றுக் கொண்டு உங்களையே இழிவுபடுத்தும் அவர்களிடம் வராத கோபம் உங்களுக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து உழைத்துப் போட்ட மக்களிடம் காட்டுகிறீர்களே அதுதான் உங்கள் வீரமா?
அந்த வீரத்தை பார்ப்பானிடம் காட்டிப் பாருங்கள்
அப்பொழுது தெரியும் உங்க சேதி
அப்ப சொல்லுவீங்க
பெரியார் சொன்னதுதாங்க சரி என்று
சிந்திப்பீர்
இன்னும் ஆண்டசாதி ஆண்ட சாதி என்று வீண் பெருமை பேசித் திரியாதீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக