வியாழன், 8 மார்ச், 2018

விவேகானந்தர் - 6



ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் போலீஸில் மாட்டிக் கொள்வார். அதிலிருந்து தப்பிக்க எனக்கு ஐஜி யைத் தெரியும் என்றவுடன் போலீஸ் சல்யூட் அடித்து அவரை விட்டுவிடுவார்கள். அது மாதிரி பிஎம்எஸ் சங்கம் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடியபோது ஏன் செப்டம்பர் 17ல் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டபோது அதற்குத் தத்துவ ரீதியாகப் பதில் சொல்ல வக்கில்லாமல் ~நாங்கள் மட்டும் கொண்டாடவில்லை. மத்திய அரசு கொண்டாடுகிறது. கார்ப்பரேட்டில் கொண்டாடுகிறார்கள் என்று பதில் சொன்னது. அதேபோல் விவேகானந்தர் அமெரிக்கா போன விசயம் பற்றியும் அவரது பிறந்தநாளை ஆர்எஸ்எஸ் காரரை வைத்துக் கொண்டாடியதையும் மனுதர்மத்தை சட்டமாக ஆக்குவது உன்னுடைய செயல் திட்டத்தில் இருக்கிறதா இல்லையா? என்று கேட்டால் அதற்கு அறிவு நாணயத்தோடு பதில் சொல்ல வக்கில்லாமல் மத்திய அரசு கொண்டாடுகிறது. கார்ப்பரேட்டில் கொண்டாடுகிறார்கள் என்று பதில் சொல்கிறது.

திரைப்படத்தில் விவேக் சொல்லும் பொய்யை நம்பி போலீஸ் அவரைத் தப்பிக்க விட்டதுபோல் உன்னை நாங்கள் விடப் போவதில்லை. நாங்கள் கேட்ட கேள்விக்கு ஒழுங்காகப் பதில் சொல்லி விட்டு நானும் ஒரு தொழிற்சங்கம்தான் என்று கூச்சல் போடு.
மத்திய அரசும் கார்ப்பரேட்டும் விஸ்வகர்மா ஜெயந்தியையும் விவேகானந்தர் ஜெயந்தியையும் கொண்டாடும் காரணம் என்ன? மத்திய அரசு மற்றும் கார்ப்பரேட் நிர்வாகத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும் இடத்தில் முழுவதும் பார்ப்பனர்களே இருக்கிறார்கள்.

 மத்திய அரசு மாநிலங்களவையில் 06-12-2012 அன்ற வெளியிட்ட அறிக்கையின்படி அரசுச் செயலாளர்கள் 102பேர். இவர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவரோ பிற்படுத்தப்பட்டவரோ கிடையாது. அதேபோல் கூடுதல் செயலாளர்கள் மொத்தம் 113 பேரில் போனால் போகிறதென்று 13 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கூட்டுச் செயலாளர்கள் 453 பேரில் 32 பேர் மட்டும் தாழ்த்தப்பட்டவர். பிற்படுத்தப்பட்டவர் யாரும் கிடையாது. இயக்குனர்கள் 677 பேரில் 57 பேர் தாழ்த்தப்பட்டவர். 30 பேர் பிற்படுத்தப்பட்டவர்.

அதிகார மய்யம் அனைத்தும் பார்ப்பன மயமயாகவே இருக்கிறது. பார்ப்பனர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் மனுதர்ம மனப்பான்மையிலேயே இருப்பார்கள். மீண்டும் இந்துராஜ்யம் இராமராஜ்யம் அமைத்து நிரந்தரமாகப் பார்ப்பன ஆதிக்கத்தைத் தக்க வைப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். அரசியலில் எந்தக் கட்சியிலிருந்தாலும் ஒரு சில இடதுசாரிகளைத்தவிர அனைத்துப் பார்ப்பனர்களும் உயர்ஜாதி மனப்பான்மை உள்ளவர்கள்தான். அவர்கள் அனைவரும் சேர்ந்து இந்துமதத்திற்கும் புராண இதிகாசக் குப்பைகளுக்கும் மரியாதை ஏற்படுத்த இயன்ற வழிகளில் எல்லாம் முயற்சிப்பார்கள். அதற்கு உதாரணம்தான் விஸ்வகர்மா ஜெயந்தியும் விவேகானந்தர் ஜெயந்தியும்.

எனவே விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடுவதும் விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடுவதும் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டப்படி தவறானதாகும். மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமானதாகும்.

அதனால் பெல் நிர்வாகம் விவேகானந்தர் ஜெயந்திக்காக சிறப்பு மலர் வெளியிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விவேகானந்தர் இந்துமதப் பிரச்சாரகர்தான். அவருக்கு மலர் வெளியிடும் பெல் நிர்வாகம் அன்னை தெரசாவுக்கோ ஜி.யூ.போப்புக்கோ காயிதே மில்லத்துக்கோ மலர் வெளியிடுமா? எனவே விவேகானந்தருக்கு மலர் வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என பெல் நிர்வாகத்தை எச்சரிக்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக