புதன், 4 ஜனவரி, 2017

உதார் விடுகிறது மகஇக.


ஈழப்பிரச்சினையில் 23-09-2008 அன்று தமிழ்நாட்டில் முதல்முதலாக சென்னையில் இரயில் மறியல் போராட்டம் நடத்தி இப்பிரச்சினையைத் துவக்கி வைத்ததே திராவிடர் கழகம்தான்.

அதற்கு முன்பு இந்தப் பிரச்சினையைப் பேசுவதற்கே மகஇக உட்பட யாருக்கும் தைரியமில்லை. ஈழம் என்றாலும் புலிகள் என்றாலும் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி தலையை நீட்டும். அந்த நிலையில் அனைத்துக் கட்சிகளுக்கும் தைரியத்தை ஊட்டிய இயக்கம் திராவிடர் கழகம்தான். அதற்குப்பிறகுதான் மற்ற இயக்கங்கள் தைரியமாய் இதில் தலையிட்டன.

அந்த இயக்கம் ஈழப் பிரச்சினையில் துரோகம் செய்து விட்டதாம். அள்ளி விடுகிறது மகஇக. இவர்கள் இயக்கம் முளை விடாத காலத்திலிருந்தே உறுதியான நிலைப்பாடு எடுத்து தனி ஈழத்தையும் விடுதலைப்புலிகளையும் ஆதரிக்கும் இயக்கம் திராவிடர் கழகம். அதை மறைத்து ஏதோ தாங்கள்தான் வீராதி வீரர் சூராதிசூரர் என்பதுபோல உதார் விடுகிறது மகஇக.
எங்கள் தலைவர் வுPரமணியை எதிர்த்துத் கேள்வி கேட்டதையே தவறு என்றா சொன்னோம். கேள்வி கேட்டிருந்தால் அதையும் முறைப்படி கேட்டிருந்தால் உடன் தக்க பதில் கிடைத்திருக்கும். ஒரு கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அதில் சிறப்புப் பேச்சாளர் பேசி முடித்த பிறகு உங்கள் கேள்விகளை எழுப்பலாம். அல்லது அவர் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு துண்டுச்சீட்டில் உங்கள் கேள்விகளை கூட்டத்தலைவர் மூலமாகக் கேட்கலாம். அப்பொழுது சரியான பதில் கிடைத்திருக்கும். இதுதான் கேள்வி கேட்கும் முறை. அதை விட்டுவிட்டு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே காட்டுமிராண்டியைப் போல் கத்திக்கொண்டு மேடையை நோக்கி ஓடுவதுதான் நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கும் பண்பாடா?

எந்த ஒரு கூட்டத்திலும் அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பார்கள். அங்கே ஒருவன் காலி;த்தனம் செய்தால் நடப்பதே வேறு. திராவிடர் கழகமாக இருந்ததால் உங்கள் ஆட்களை அப்படியெல்லாம் செய்யாமல் எங்கள் தலைவர் உங்கள் தொ(கு)ண்டரை காவல்துறையில் பிடித்துக் கொடுத்துக் காப்பாற்றி இருக்கிறார். இதையே வேறொரு கட்சிக் கூட்டத்தில் உங்கள் குண்டரை அனுப்பி இதேபோலச் செய்யச் சொல்லுங்களேன். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இந்த இலட்சணத்தில் நாடு பூராவும் போஸ்டர் வேறு. அந்தப் போஸ்டருக்கு முறைப்படி பதில் சொன்னதற்கு முறையாக விளக்கம் அளிக்காமல் ஜெயலலிதாவுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்ததைப்பற்றி எழுதியதற்கும் ஈழப்பிரச்சினைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அதனால்தானே உங்கள் வண்டவாளங்களை எழுத வேண்டி வந்தது?

தேர்தல் புறக்கணிப்பை நாடு பூராவும் பிரச்சாரம் செய்துகொண்டு இங்கே தேர்தலில் நின்றது ஏன் என்று கேட்டால் வெண்டைக்காய் விளக்கம்.

எங்கோ நடந்த பிரச்சினைக்கு யாரோ கொடுத்த போஸ்டரை இங்கே ஒட்டப்போய் நம்முடைய வண்டவாளங்களெல்லாம் தண்டவாளத்தில் ஏறுகிறது என்றவுடன் முதலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிப்போம் என்று கூறிவிட்டு எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் இப்பொழுது இதனைப் பேசாதே ஈழத்தைப் பற்றி மட்டும் பேசுவோம் என்பது கொள்கையற்ற கோமாளித்தனம்.
நீங்கள் கேள்வி எழுப்பியவுடன் பொதுவிவாதம் நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். தேர்தல் முடியட்டும் என்று சொன்னது நீங்கள். பொதுமேடையில் பேச காவல் துறையிடம் அனுமதி கேட்டதில் அவர்கள் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள். அதனால்தான் தனித்தனியாகக் கூட்டம் போடலாம் என்று சொன்னோம். உங்களுக்கும் உங்கள் அப்பனுக்கும் பதில் சொல்ல எங்களால் முடியும். உங்கள் இயக்கம் தோன்றாத காலத்திலிருந்து உடம்பெல்லாம் மூளை என்று வர்ணிக்கப்பட்ட பார்ப்பன இராஜாஜியிலிருந்து சீரங்கத்து அம்பிவரை நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்த வரலாறு உண்மை உணர்ந்தவர்களுக்குத் தெரியும். உனக்கு பதில் சொல்வது ஒன்றும் பெரிய விசயமல்ல.

நாங்கள் காவல்துறையையும் சட்டம் ஒழுங்கையும் மதிக்கக் கூடியவர்கள். பொது அமைதிக்குப் பங்கம் வரக்கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள். உங்களுக்குத்தான் அவை எதைப்பற்றியும் கவலையில்லையே! எவன் எக்கேடு கெட்டாலென்ன என்று செயல்பட்டு அய்ந்து தொழிலாளரையே வீட்டுக்கு அனுப்பிய கும்பலாயிற்றே!

உங்கள் செயலாளர் சொன்னபடி காவல்துறையிலும் நிர்வாகத்திடமும் முறைப்படி அனுமதி வாங்கிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். அப்பொழுது எல்லாவற்றையும் பேசுவோம்.

போனஸ் என்பது எங்கள் உழைப்பின் பலன். அதை வாங்குவது எங்கள் உரிமை. அந்த போனசை தீபாவளி போனஸ் என்றும் அதை வாங்காதே என்றும் ஆர்எஸ்எஸ் காரன் போல உளறுவதிலிருந்து நீங்கள் யார் என்பது தெரிகிறது. மேலும் தொடர்வோம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக