வியாழன், 5 ஜனவரி, 2017

பிஎம்எஸ் ஸையும் அதன் கொள்கைகளையும் பெல் லில் மகஇக எதிர்தத்தில்லையே! ஏன்?

திரைப்படத்தில் விவேக்ää வடிவேலு ஆகியோர் நடிக்கும் நகைச்சுவைக் காட்சியில்; உதைபடுவதையே நகைச்சுவையாக வைத்திருப்பார்கள். எதுக்கு அடிக்கிறான்? ஏன் அடிக்கிறான்னே தெரியாது: ஆனா அடிக்கிறாய்ங்க! அடிச்சுட்டுப் போங்கடா என்பார் வடிவேலு. அடிக்கும்போது ரொம்ப நல்லவரூ ன்னு சொல்லிக்கிட்டே அடிச்சதனால எல்லா அடியையும் தாங்கிக்கிட்டேன் என்பார்.

அதுமாதிரி எங்கே போனாலும் அடி வாங்குவதே மகஇக வுக்குப பழகிப்Nபுhச்சு போல இருக்கு. சீரங்கத்துல கருவறை நுழைவுப் போராட்டம் எனறு நடத்தினபோது கோயில் கதவைச்சாத்திக்கொண்டு பார்ப்பனர்கள் விறகுக் கட்டையாலும்ää பாரப்பனப் பெணகள் விளக்கு மாற்றாலும் அடித்தார்கள். அப்பொழுது இ;ந்த மாதிரி புலம்பவில்லை. அடிக்கும்போது ரொம்ப நல்லவரூ ன்னு சொல்லி அடிச்சாங்களோ என்னவோ! திக கிழடுகள் அப்படிச் சொல்லாமல் அடித்ததால் ரொம்ப வலிக்கிறதுபோல. அத்தோட பெண் போலீச விட்டு வேற அதுவும் நகை போடாமல் அடிக்க விடுவாங்க போல இருக்குது என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

அடி வாங்குறதே பொழப்பாப் போச்சு. எப்பத் திருபு;பி அடிக்கப் போறீங்க? யாரை அடிக்கப் போறீங்க? ஆயதப்புரட்சி என்றீர்கள்! எப்பொழுது ஆயுதம் தூக்கப் போகிறீர்கள்.;
;
பைத்தியக்காரன் பாண்டிச்சேரி சரக்கப் போட்டாக்கூட இப்படி உளற மாட்டான். முதலில் சவாலைச் சந்திப்போம் என்றார்கள். தேர்தலைப் புறக்கணிப்பதாக வெளியில் பிரச்சாரம் செய்துகொண்டு இங்கு தேர்தலில் ஏன் நின்றீர்கள் என்றவுடன் வெண்டைக்காய் விளக்கம். அதிலும் திமுக வுக்கு ஏன் ஓட்டுப் போட்டீர்கள் என்ற கேள்வியைக் கண்டுகொள்ளவே இல்லை. இவர்கள்தான் எல்லாக் கேள்விக்கும் பதிலளிப்போம் என்றார்கள்
.
நம்முடைய கேள்விகள் இவர்கள் உயிர்நாடியையே அசைக்கிறது என்றவுடன் ஈழத்தைப் பற்றி மட்டும் பேசு என்றார்கள். கூட்டத்துக்கு வடக்கு வாயிலில் ஏற்பாடு செய் என்றார்கள். வடக்கு வாயில் என்றால் நிர்வாகத்திடமும் அனுமதி வாங்க வேண்டும். காவல் துறையிடமும் அனுமதி வாங்க வேண்டும். எங்களால் முடியாது. நீங்கள் அனுமதி வாங்கி ஏற்பாடு செய்தால் அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசத் தயார் என்றோம்.

முன்பு வாக்குறுதி நேரில் கொடுத்தது போல காவல்துறையிலும் நிர்வாகத்திலும் அனுமதி வாங்கி ஏற்பாடு செய்ய வேண்டியதுதானே அறிவு நாணயம்?

அதைச் செய்யாமல் எப்பொழுதோ யாரோ புதிய ஜனநாயகத்தில் வாந்தி எடுத்ததை இங்கு வந்து ஒட்ட வேண்டிய அவசியம் என்ன? சொந்தமாக திக காரனுக்கு பதில் தயாரிக்க வக்கில்லையா? இந்துத்வாவுக்கு இளைய பங்காளியாம்! எவ்வளவு எகத்தாளம்.

மற்ற மாநிலங்களில் எல்லாம் காலூன்றியுள்ள நீங்கள் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லையே ஏன்? என்று கேட்டதற்கு பெரியார் இயக்கமும் அவர் ஊட்டியுள்ள உணர்வும்தான் காரணம் என்று பிஜேபி இல.கணேசனே பேட்டி கொடுத்தார்.

அந்த உணர்வை மங்காமல் பாதுகாத்து வருகின்ற திராவிடர் கழகம் எடுத்த தேர்தல் வியூகம்ää தமிழகத்தில் யார் பிஜேபி யோடு கூட்டணி அமைத்தாலும் காணாமல் போவார்கள் என்பதை நிரூபித்துள்ளோம். இதுதான் இளைய பங்காளிக்கு இலக்கணமோ?

பெல் நிறுவனத்தில்கூட யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள். பிஎம்எஸ் ஸ_க்கு மட்டு;ம் ஓட்டுப் போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்ததுகூட பங்காளி என்பதாலா?

மே தினம் தொழிலாளர் தினம் அல்ல விஸ்வகர்மா ஜெயந்திதான் தொழிலாளர் தினம் என்று கூறும் பிஎம்எஸ் ஸ_க்கு பதிலடி கொடுத்து அறிக்கைகளும் கூட்டங்களும் நடத்தி அதை முறியடித்தோமே அதுகூட பங்காளி என்பதாலா?

விஸ்வகர்மா ஜெயந்திக்கு எதிராக மே தினத்தை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களை வைத்துக் கூட்டம் நடத்தினோமே! அதில் அனைத்துச் சங்கங்களும் கலந்துகொண்டு ஆர்எஸ்எஸ் ஸின் அபாயத்தை வெளிக் கொண்டுவந்தார்களே! அதுவும் பங்காளி என்பதாலா?

அதில் மகஇக மட்டும் கலந்து கொள்ளவில்லையேää அது எதனால்? பிஎம்எஸ் ஸையும் அதன் கொள்கைகளையும் பெல் லில் மகஇக எதிர்தத்தில்லையே! ஏன்? ஒருவேளை திககாரன் ஆர்எஸ்iயும் அதன் அமைப்புக்களையும் தமிழகத்தில் காலூன்ற விடாமல் செய்வதனால் ஏற்படுகின்ற  கோபம்தான் மகஇக வை இப்படி சிந்திக்க வைக்கிறதோ என்னவோ?

பந்து இப்பொழுது உங்கள் பக்கம். கூட்டத்துக்கு அறிவு நாணயத்துடன் ஏற்பாடு செய்யுங்கள். அங்கே எல்லாவற்றையும் பேசுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக