ஞாயிறு, 29 ஜனவரி, 2017

காந்தியை ஆர்எஸ்எஸ் சைச் சேர்ந்த கோட்ஷே சுட்டுக்கொன்ற நாள்

ஜனவரி 30 தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காந்தியை ஆர்எஸ்எஸ் சைச் சேர்ந்த கோட்ஷே சுட்டுக்கொன்ற நாள்

இந்த நாளை இப்பொழுது எப்படிக் கடைப்பிடிக்கிறார்கள் தெரியுமா?

காந்தி நினைவுநாள் என்று அல்ல. தியாகிகள் தினம் என்று கடைப்பிடிக்கிறார்கள்ஃ
ஏன் தியாகிகள் தினம் என்கிறான்?
ஒட்டுமொத்த தியாகிகளையும் நினைவுகூர்வதற்கு அந்த நாள்தான் கிடைத்ததா?

அன்றைய தினத்தை காந்தி நினைவுநாள் என்று கடைப்பிடிப்பதில் என்ன சிக்கல்?

காந்தி நினைவுநாள் என்று சொன்னால் அவர் எப்படி இறந்தார் என்ற கேள்வி வரும். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார் என்றால் அவரைச் சுட்டுக் கொன்றது யார் என்ற வினா எழும்
அவரைச் சுட்டுக்கொன்றவன் கோட்ஷே என்று சொன்னால் அவன் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற வினா வரும்

கோட்ஷே என்ற உடன் அவன் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற கேள்விக்கு அவன் ஆர்எஸ்எஸ் என்ற விடை வரும்

அந்த ஆர்எஸ்எஸ்சின் அரசியல் வடிவம் எது என்றால் பிஜேபி என்ற பதில் வரும்

பிஜேபியின் மோடி ஆர்எஸ்எஸ் சில் பயிற்சி பெற்றவர் என்ற தகவல் வரும்

இவர்களது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்

அதையெல்லாம் மூடி மறைக்கவே காந்தியார் நினைவுநாளைக்கூட காந்தி நினைவுதினம் என்று கடைப்பிடிக்காமல் தியாகிகள் தினம் என்று காந்தியையே இருட்டடிப்பு செய்கிறது காவிக்கும்பல்

வரலாற்றையே இருட்டடிப்பு செய்பவர்களுக்கு காந்தியை இருட்டடிப்பு செய்வது என்ன அவ்வளவு பெரிய விசயமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக