புதன், 4 ஜனவரி, 2017

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறது மகஇக.



அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியது. அதன் அவசியத்தை இங்கு விளக்கி திதொக சார்பாக அறிக்கை வெளியிட்டோம்.  இதுபோன்ற துண்டறிக்கைகள் வரும்போதெல்லாம் இங்கே பிஜேபிää இந்து முன்னணி கும்பல் ஏதாவதொரு புனைபெயரில் பெரியாரையும் பெரியார் இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி அவதூறு செய்திகளை எழுதுவார்கள். இம்முறை அதுபோல் எதுவும் வரவில்லை. ஆனால் மகஇக என்ற பெயரில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்குவதற்கு திக எதுவுமே செய்யாதது போலவும் இவர்கள்தான் ஒட்டுமொத்த குத்தகைதாரர் போலவும் துண்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

இது பார்ப்பனீயத்தின் ஒரு வெளிப்பாடுதான். பார்ப்பன ஆதிக்கத்தையும் வேதமத ஆபாசங்களையும் அம்பலப்படுத்துபவர்களை பார்ப்பனர்கள் எதிர்த்து அழிப்பார்கள். அதுவும் முடியவில்லையென்றால் துரோகிகளைப் பிடித்து ஒழிப்பார்கள். அதுவும் இயலாமல் போனால் அரவணைத்துக் கொல்லுவார்கள்.

இவர்களை எதிர்த்த சமணர்கள் எட்டாயிரம் பேரை திருஞானசம்பந்தன் காலத்தில் கழுவில் ஏற்றிக் கொன்றார்கள். மவுரியப் பேரரசை சமுத்திரகுப்தனின் வாரிசான சந்திரகுப்தனைப் பயன்படுத்தி சாணக்கியன் ஒழித்துக் கட்டினான். அசோகன் காலத்தில் தழைத்தோங்கிய பவுத்தப் பேரரசை அசோகனின் பேரன்  காலத்தில் அவனது தளபதியாக இருந்த புஷ்யமி;த்திர சுங்கன் என்பவன் ஒழித்துவிட்டு பவுத்தர்களை உயிரோடோ பிணமாகவோ பிடித்து ஒப்படைப்பவர்களுக்கு நூறு பொற்காசுகள் பரிசு என்று அறிவித்து பவுத்தர்களை ஒழித்தான்.

இது எப்படி நடந்ததென்றால் மக்களிடம் செல்வாக்குப் பெற்று வளர்ந்த பவுத்த மார்க்கத்தை எதிர்த்து அழிக்க முடியாது என்பதால் நாங்களும் பவுத்த மதத்தில் சேருகிறோம் என்று பார்ப்பனர்கள் அதிலே நுழைந்து அரவணைத்து அதனை ஒழித்தார்கள். இந்தியாவில் தோன்றிய பவுத்த மார்க்கம் இன்று இந்தியாவில் இல்லாமல் ஒழிக்கப்பட்டு விட்டாலும் உலகின் பல்வேறு நாடுகளில் செழித்தோங்கி இருக்கிறது.

அவ்வாறு பார்ப்பனர்களை இயக்கத்தில் அனுமதித்தால் தமது இயக்கத்தை ஒழித்து விடுவார்கள் என்பதால்தான் பெரியார் திராவிடர் கழகத்தில் ஒரு பார்ப்பனரையும் உறுப்பினராகச் சேர அனுமதித்ததில்லை.

பிஜேபி, ஆர்எஸ்எஸ்ä,விஹெச்பி, இந்து முன்னணி, பிஎம்எஸ் போன்ற இயக்கங்கள் நேரடியாக மோதி ஜெயிக்க முடியவில்லை. அதற்கு மாறாக நாங்களும் பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள்தான். நாங்கள்தான் வேகமாகச் செய்வோம் என்று கூறி திராவிடர் கழகம் அந்த அளவுக்கு வேகமாகச் செயல்படவில்லை என்று திரிபுவாதம் செய்து அரைகுறையாக இருக்கிற இளைஞர்களை குழப்பிவிட்டு அந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறது மகஇக. அவர்கள் சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் விசமத்தனமானவை.

துக்ளக்கிலும் தினமணியிலும் தினமலரிலும் பார்ப்பனர்கள் என்ன வார்த்தையைப் பயன்படுத்துகிறார்களோ அதே வார்;த்தையைப் பயன்படுத்தித்தான் அவர்களின் பிரச்சாரம் இருக்கிறது.
இவர்கள் பெரியார் கொள்கையை முழுவதும் ஏற்றுக் கொண்டவர்கள் கிடையாது. மாறாக ஆரம்பக் காலத்தில் பெரியாரின் கொள்கைகளை விம்ர்சனம் செய்தும் இன்று ஆர்எஸ்எஸ் கும்பல் என்ன பாணியில் விமர்சனம் செய்கிறார்களோ அதே பாணியில் விமர்சனம் செய்தவர்கள்தான்.

பெரியார் கொள்கையின்மீது இவர்கள் காட்டுகின்ற கரிசனம் என்பது அரவணைத்து அழிக்கும் ஆரியத்தின் தந்திரமே! எனவேää தொழிலாளர்த் தோழர்கள் அவர்களின் வாய்ஜாலத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இத்துடன் அவர்களின் விசமத்தனத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மேலும் அவர்களை அம்பலப்படுத்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக