வியாழன், 5 ஜனவரி, 2017

இதுதான் இவர்கள் கூறும் புதிய ஜனநாயகமோ?

ஈழவிடுதலைப் போரில் விடுதலைப் புலிகளை ஒதுக்கிவிட்டு; ஈழத்தமிர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்று கேட்பது தெருப் பொறுக்கித்தனமா?

1921ல் பிறந்த விஸ்வநாதன் 1924ல் பெரியாருடன் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதாகச் சொன்னீர்;களே! மூன்று வயதில் பெரியாரின் தோள்மீது அமர்ந்து விஸ்வநாதன் போராடினாரா என்று கேட்பது தெருப் பொறுக்கித்தனமா?

எங்கள் தலைவரை ஒருமையில் பேசாதே! பெரியார் தொண்டர்களை கிழடுகள்ää எடுபிடிகள்ää சீரழிந்து கிடக்கிறார்கள் என்று அநாகரிகமாக எழுதாதே என்று கேட்பது தெருப்பொறுக்கித்தனமா? அப்படித்தான் எழுதுவோம் என்பது தெருப்பொறுக்கித்தனமா?

இந்து பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறும் தாங்கள் பெல் லில் எந்தப் பாசிசத்தை எதிர்த்தீர்கள் என்று கேட்பது தெருப்பொறுக்கித்தனமா? -

தீபாவளி போனசுக்காகப் போராடுவதுதான் மார்க்சிய - லெனினியமா என்று கேட்பது தெருப்பொறுக்கித்தனமா?

இந்து மதவெறி ஆர்எஸ்எஸ் ஸின் தொழிற்சங்கமான பிஎம்எஸ்ää கம்யூனிசம் உயர்த்திப்பிடிக்கும் மே தினத்தை தொழிலாளர் தினம் அல்ல என்று சொல்வதை எதிர்க்காதது மார்க்சியமா என்று கேட்பது தெருப் பொறுக்கித்தனமா?

பெரியாரை விடுவிப்பதாகக் கூறும் தாங்கள் அந்தப் பெரியார் பிறந்தநாளை விஸ்வகர்மா ஜெயந்தி என்று கொண்டாடும் பிஎம்எஸ் ஸை எதிர்க்காதது ஏன் என்று கேட்பது தெருப்n;பாறுக்கித்தனமா?

தேர்தல் பாதை திருடர் பாதை என்று கூறிவரும் தாங்கள் அந்தத் திருடர்பாதையை பெல்லில் மட்டும் தேர்ந்தெடுத்து தேர்தலில் நின்றதுதான் புரட்சியா என்று கேட்பது தெருப்பொறுக்கித்தனமா?

திமுக காரன்தான் எங்கள் தோழர்களை வீட்டுக்கு அனுப்பக் காரணமாக இருந்தார்கள் என்று கூறிவி;ட்டு அவர்கள் தயவில் வேலைக்கு திரும்பச் சேர்ந்ததும் தொமுச வுக்கு ஓட்டுப் போட்;டதும் ஏன் என்று கேட்பது தெருப்பொறுக்கித்தனமா?

  திருடிவிட்டு ஓடுகின்ற திருடனை யாராவது விரட்டினால் இவனே திருடன் திருடன் என்று கூவிக் கொண்டு ஓடுவதுபோல் தெருப்பொறுக்கித்தனமாகப் பேசிக்கொண்டு அடுத்தவனைத் தெருப்பொறுக்கி என்கிறார்கள் என்பதைத் தொழிலாளர்கள் புரிந்துகொள்வார்கள்.

நோகாமல் நுங்கு தின்ன நினைப்பது யார்?
இரண்டு அமைப்புகள் ஒரே நாளில் ஒரே மேடையில் பேசுவதை காவல்துறை அனுமதிக்கவில்லை. அதனால் முதல்நாள் கூட்டம் போட்டு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள் என்றதற்கு மகஇக செயலாளர் உங்களால் அனுமதி வாங்க முடியவில்லை என்றால் நாங்கள் அனுமதி வாங்குகிறோம் என்று சொன்னது அப்பட்டமான உண்மை. இப்பொழுது அதனை மறுப்பவர்கள் கோழைகளா?

முதல்நாள் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அடுத்தநாள் அதே மேடையில் பதிலளிக்கிறோம் என்பவர்கள் கோழைகளா?

திக காரன் ஏற்பாடு செய்கின்ற கூட்டத்தில் இவர்கள் பேசுவார்களாம். அதுமட்டும் இவர்களுக்கு நோகாதாம். இவர்களை ஏற்பாடு செய்யச் சொன்னால் அதற்கு நோகுமாம். இந்த லட்சணத்தில் சன் டிவி யிலும் கலைஞர் டிவி யிலும் இவர்களுக்கு விளம்பரம் தேடித்தர வேண்டுமாம்.

யார் நோகாமல் நுங்கு தின்னப்பார்க்கிறார்கள் என்பதைத் தொழிலாளர்களே! புரிந்து கொள்வீர்!

இவர்கள்தான் மக்கள் தொலைக்காட்சியில் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார்கள். இப்பொழுது அதனை மறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மற்றவர்களை இவர்கள் போலிகள்ää கையாலாகாதவர்கள் என்பார்களாம். மற்றவர்களால் முடியாததை நீங்கள் செய்து காட்டுங்களேன் என்றால் காத தூரம் ஓடுவார்களாம். இதுதான் இவர்கள் கூறும் புதிய ஜனநாயகமோ?

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். ஆத்திரம் இவர்கள் அறிவை மட்டுமல்ல@ நாகரிகத்தையும் பண்பாட்டையும் மறைக்கிறது. தெருப்பொறுக்கி என்று தரம் தாழ்ந்து கீழ்த்தரமாகப் பேசும் இவர்களிடம் இனிமேல் பேசுவது அநாகரிகம். இவர்கள் தரத்துக்குத் தாழ நமக்கு விருப்பமில்லை. தோழர்களே! இவர்களைப் புரிந்துகொள்வீர்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக