புதன், 11 ஜனவரி, 2017

ஜாதியை அழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்கிறார் விவேகானந்தர்


தொழிலாளிக்கு மிகை நேரப்பணி இல்லை. அய்ந்து ஆண்டு முடிந்து போச்சு. ஊதிய மாற்றம் இல்லை. பல்வேறு சலுகைகள் ரத்தாகிறது. எல்சிஎஸ் ஊழியர்களுக்கு இன்னும் புத்தாண்டுப் பரிசு வழங்கப்படவில்லை. ஆனால் பல இலட்சம் செலவில் விவேகானந்தரின் பாரதமே விழித்தெழு என்று நூல் நிறுவனத்தின் செலவில் வழங்கப்படுகிறது. அதன் நோக்கம் என்ன? விவேகானந்தரே இளைஞர்களைப்பார்த்துச் சொல்கிறார்:

“வேலை செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உள்ளது@ பலன்களை எதிர்பார்க்க அல்ல”“கடவுள் ஒருவர்தான் பலன்களைத் தருபவர். அதை அவரிடம் விட்டுவிட்டு எல்லா வேலைகளையும் செய். பலன்களைக் கணக்கிடுவதில் நீ என்ன பெறப்போகிறாய்? அந்த வழியைப் பின்பற்றாதே. எப்போதும் வேலை செய்துகொண்டே இரு” “ கீதை சொல்வதுபோல் நம்முடையதெல்லாம் பலன்களை எதிர்பார்க்காமல் வேலை செய்வதுதான்” என்று சொல்கிறார்.

இப்பொழுது புரிகிறதா நிர்வாகம் ஏன் இந்தப் புத்தகத்தை வெளியிட்டது என்று?

யாரும் எதையும் கேட்கக்கூடாது. அதனால் நிர்வாகத்திடம் எதுவும் கேட்கப்படாது. பகவானிடமும் கேட்கப்படாது. பகவானாப் பார்த்து என்ன கொடுக்கிறாரோ அதை வாங்கிக் கொண்டு வேலை செய் என்று நிர்வாகம் கூறுகிறது. பகவான் கொடுக்கப் போறது இல்லை. அதனால் யார் கொடுக்கிற இடத்தில் இருக்கிறாரோ அவர்தான் பகவான். இங்கே யார் பகவான்? நுனு பகவான் புஆ ஃ ர்சு பகவான். அதனால்தான் சங்கங்களும் கடவுளிடம் இறைஞ்சுவதுபோல்;  இவர்களிடமும் இறைஞ்சுகிறார்களோ! அல்லது இறைஞ்ச வேண்டும் என்ற நிர்வாகம் எதிர்பார்க்கிறதோ!! அவர்களாகப் பார்த்து என்ன கொடுக்கிறார்களோ அதனைப் பெற்றுக் கொண்டு மனமுவந்து வேலை செய்ய வேண்டும் என்கிறதா நிர்வாகம்?

தனக்கு வசதியானதை மட்டும் எடுத்துக்கொள்ளும் நிர்வாகம் சிலவற்றை மீறுகிறதே! ஏன்? தீண்டாமையை விவேகானந்தர் கண்டிக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்து எங்களைத் தொடாதீர்கள்! தொடாதீர்கள்! என்று கூவிக் கொண்டிருக்கிறோம்! அதனால் அவர்கள் கிறிஸ்தவர்களாகி விட்டார்கள். முகமதியர் வருகை அவர்களுக்கு கதிமோட்சமாக அமைந்தது என்று கூறி கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்தான் மதம் மாற்றுகிறார்கள் என்று கூறும் ஆர்எஸ்எஸ் கும்பலின் தலையில் குட்டு வைக்கும் விவேகானந்தர் அந்தத் தீண்டாமை ஒழிய சொல்லும் வழிதான் கேலிக்கூத்தானது. எல்லோரும் தீண்டத்தகாதவர்போல் ஒருநாள் வாழ்ந்து பார்க்க வேண்டுமாம். தீண்டாமை ஒழிந்துவிடுமாம்.
தீண்டாமை ஒழிய ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னவர்கள்; அம்பேத்கரும் பெரியாரும். ஆனால் ஜாதியை அழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்கிறார் விவேகானந்தர். ஜாதி இருக்கும்வரை தீண்டாமையும் இருக்கத்தானே செய்யும்? உண்மையிலேயே தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று கருதுபவர்கள் ஜாதியை ஒழிக்க விரும்புவார்கள். தீண்டத்தகாதவர்களை ஏய்க்க நினைப்பவர்கள் தீண்டாமையை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு ஜாதியைப் பாதுகாக்க முயல்வார்கள். அந்த ரகத்தில் விவேகானந்தர் கூறுவது முரண்பாடானது.

விவேகானந்தர் உண்மையில்  தீண்டாமையை ஒழிக்கச் சொன்னார் என்று கூறுவார்களே யானால் அதனை ஏற்று நிர்வாகம் அதனை ஒழித்து விட்டதா? அந்தக் காலத்தில் தீண்டத்தகாதவன் அசுத்தமான வேலை செய்கிறான். குளிக்காமல் இருக்கிறான். நல்ல துணி உடுத்தாமல் அழகற்று இருக்கிறான் என்று கூறி தீண்டாமையை நியாயப்படுத்தினார்கள். ஆனால் பெல் நிர்வாகம் நன்கு படித்து நாகரிகமாக உடையுடுத்தி நல்ல திறமையுடன் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துவரும் தாழ்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுதி இல்லை திறமை இல்லை என்று கூறி வெளிநாட்டுக்கு அனுப்புவதில் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறதே! இது நவீன தீண்டாமை இல்லையா? இந்த நிர்வாகத்துக்கு விவேகானந்தர் புத்தகத்தை வெளியிட அருகதை இருக்கிறதா? எல்லாம் இரட்டை வேடம். ஆர்எஸ்எஸ் பாசம். உயர்ஜாதி வெறி!! அதனை முறியடிக்க அணிதிரள்வீர்!!    

       தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக