புதன், 18 ஜனவரி, 2017

விவேகாந்தருக்கு விழா எடுக்கும் பிஎம்எஸ்ஸே!

விவேகாந்தருக்கு விழா எடுக்கும் பிஎம்எஸ்ஸே!

1) கடந்த ஆண்டு பெல் நிர்வாகம் வழங்கிய பாரதமேää உயிர்தெழு! என்ற நூலில் ~கடமையைச் செய்@ பலனை எதிர் பாராதே!| என்று கூறியிருக்கிறார். அதற்கு உதாரணமாக தொழிலாளிக்குப் பாடுபடுவதே எங்கள் கடமை! பங்குபெறும் சங்கத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற பலன் எங்களுக்குத் தேவையில்லை என்று அறிவிப்பீர்களா?

2) விவேகானந்தர் ஜாதி போகக் கூடாது, ஜாதிகள் நல்லது. ஜாதியை அழிக்க விரும்புவது முட்டாள்தனம் என்கிறார். அதுதான் உங்கள் கொள்கையா?

3) விதவைத் திருமணம் கூடாது என்கிறார். ஒரு ஆண் மனைவி இறந்த உடன் மறுமணம் செய்துகொள்ளலாம். ஒரு பெண் மறுமணம் செய்துகொள்ளக் கூடாதா? இதுதான் உங்கள் தர்மமா?

4) ~ஸகஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜோத்| எவ்வளவு குறையுடைதாக இருந்தாலும் அவரவர் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும். குயவன் குயவனாகவும்ää மீனவன் மீனவனாகவும்ää விவசாயி விவசாயியாகவும்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறாரே? பரம்பரைத் தொழிலை விட்டு வேறு தொழில்களுக்குச் செல்லக் கூடாதா? விருப்பம் இருந்தாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு தொழில்களைச் செய்யக் கூடாதா? விருப்பமில்லாமல் குலத்தொழிலை மட்டுமே செய்துகொண்டிருந்தால் நாட்டில் தொழில் வளர்ச்சி எவ்வாறு உண்டாகும்?

5) செருப்புத் தைப்பதை சக்கிலியனுக்கு பெருமைக்குரியதாக சொல்லும் அவர் நாட்டை ஆள அவன் ஆசைப்படக் கூடாது என்கிறாரே! இதுதான் உங்கள் தருமமா? நாட்டை பிராமணர் மட்டும்தான் ஆள வேண்டுமா? மற்ற ஜாதிக்காரன் ஆள்வதற்கு ஆசைப்படக் கூடாதா?

6) பிராமணன் தனது குலத்தொழிலான மணியடிப்பதை விட்டுவிட்டு சத்திரியனின் வேலையான நாட்டை ஆளச்செல்லலாம். மற்ற ஜாதிக்காரர்கள் மட்டும் அவரவர் குலத்தொழிலைச் செய்ய வேண்டுமா?

7) பிராமணனின் பூணூலால் எந்தப் பலனும் இல்லை. அது கோவணம் கட்டத்தான் பயன்படும் என்று விவேகானந்தர் சொன்னாரே! இனியும் பூணூல் அணிவது அவசியமா?

8) உங்கள் தெங்கடிஜி தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டதாகக் கூறுகிறீர்களே! ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை எப்படி ஒழிக்க முடியும்? தீண்டாமைக்கு ஆதாரமே ஜாதிதானே!

9) ஒரு பாட்டா செருப்புக் கடையில் வேலைபார்ப்பவனையும் செருப்புத் தைக்கிற சக்கிலியனையும் யாராவது ஒரே மாதிரிக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்களா? ஜாதிக்கண் கொண்டுதானே பார்ப்பார்கள்? அப்படிப் பார்க்கும்போது தீண்டத்தகாதவனாகத்தானே ஒரு சக்கிலியனை சமூகம் பார்க்கும்? இது மாதிரி ஜாதியை வைத்துக் கொண்டு எப்படி தீண்டாமையை உங்களால் ஒழிக்க முடியும்?

10) எந்தத் தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உருவானால்தானே சமுதாயத்தில் ஜாதியப் பார்வை குறையும்?

11) பிஜேபிக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? தொடர்பு இல்லையென்றால் சென்ற தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்?

12) பிஜேபியும் நீங்களும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்தானே! இரண்டு அமைப்புக்களுக்கும் தொடர்பு இல்லை என்று மறைப்பது யாரை ஏமாற்ற?

13) மோடிஜி நல்லவர் வல்லவர் என்று ஓட்டுப் போட்டுவிட்டு இப்பொழுது அவர் சரியில்லை என்று சொல்லுவது யாரை ஏமாற்ற?
இதற்கெல்லாம் நேரடியாகப் பதில் சொல்.

சென்ற ஆண்டு போல குதர்க்கமாக விவேகானந்தர் நல உரிமைச்சங்கம் பாரத தொழிலாளர் கழகம் என்ற முகமூடி அணிந்துகொண்டு திருட்டுத்தனமான வந்து பித்தலாட்டம் செய்யாதே! நீங்கள் நேர்மையானவர்களாய் இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்! அதற்குத் திராணியின்றி எங்கள் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கையெழுத்து வேட்டையாடி தொழிலாளர்களால் ஓட ஒட விரட்டப்பட்டு மூலையில் போய் முடங்காதே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக