வியாழன், 5 ஜனவரி, 2017

ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசும்; வீராதி வீரர்களே! இதற்கும் பதில் சொல்லுங்க!

இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இறந்தாங்க. பேருந்து ஓடல. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாலுநாள் சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் இறந்தபோது அதே நிலை. சிறப்பு விடுப்பு கிடைத்தது. இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இறந்தார். அதற்கும் சிறப்பு விடுப்பு கிடைச்சது.


ஆனா இப்போ தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் இறந்துபோனார். முதல் நாள் தொழிலாளர்கள் வீடு திரும்பும்போதே அவரது இறப்புச் செய்தி கசிந்தது. அப்பவே போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. ஒருவித பீதி கிளப்பப்பட்டது.

அதனால் அதிகாரப்பூர்வமாக அவரது இறப்பு அறிவிக்கப்பட்ட பிறகு வேலைக்கு வருவதற்கு ஒருவித அச்சம் ஏற்பட்டதால் வெளியூரிலிருந்து வேலைக்கு வருபவர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. ஏற்கனவே இந்திராகாந்திää எம்ஜிஆர்ää ராஜீவ்காந்தி ஆகியோரது இறப்பிற்கு விடுமுறை கிடைத்தது என்ற முன்னுதாரணம் இருப்பதால் இதற்கும் விடுப்பு கிடைக்கும் என எல்லோரும் நம்பினாங்க. வெளியே வர பயந்துகொண்டு லீவு போட்டுட்டாங்க.

ஆனால் நாங்க கோரிக்கை வச்சோம். நிர்வாகம் முடியாது போன்னு சொல்லிருச்சு. நாங்களும் மூடிக்கிட்டு வந்துட்டோம் என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது? அப்போதுகூட நான்கு நாட்கள் லீவு கிடைத்தது. இப்போது ஒரே ஒருநாள்தான் தேவைப்பட்டது. அதைக்கூட வாங்கித் தர முடியவில்லையென்றால் இந்தப் பங்குகளை என்ன சொல்வது?

அப்போது இருந்தவங்க எல்லாம் கையாலாகாதவங்கதானே? அவங்களே லீவு வாங்கித் தந்திருக்கிறபோது அதை முன்னுதாரணமாக எடுத்துக்கிட்டு அதே போக்குவரத்துப் பிரச்சினையைக்காட்டி ஏன் இப்போது வாங்கித் தர முடியல? தேர்தலின்போது விட்ட வாய்ச் சவடால் என்னாச்சி? அர்ஜூனரு வில்லு. இராமரோட அம்பு. அனுமானோட தெம்பு எல்லாம் இருந்தும் இப்ப ஏன் வாங்கித் தரமுடியல?

பிஎஃப் வட்டிய மோடி அரசு குறைச்சப்ப நாங்க நடத்தின கிடுகிடு போராட்டத்துக்கு பயந்துக்கிட்டு வட்டிக் குறைப்ப வாபஸ் வாங்கிட்டாங்கன்னு பீலா உட்டீங்களே! இப்ப வட்டியையும் குறைச்சுட்டாங்க. இங்க கிடைச்ச லீவும் கிடைக்கலயே! அதுக்கு என்னா பதிலு? வீராதி வீரர்களே பதில் சொல்லுங்க! இல்ல இல்ல. நாங்க மோடியோட ஆளுங்க. அவரு அப்பப்ப வாய்ச்சவடால் அடிப்பாரு. அம்பது நாள் பொறுத்துக்கச் சொன்னாரு. அம்பது நாள் ஆன பிறகு வேற கதையச் சொல்றாரு. அது மாதிரிதான் நாங்களும். எங்களால வாய்ச்சவடால்தான் அடிக்க முடியும். காரியத்துல ஒன்னும் ஆகாதுன்னு ஒத்துக்கங்க. யாரும் கேக்கல.

திருமயம் தொழிலாளர்களின் பரிதாப நிலை

அதே மாதிரி திருமயத்தில இருந்து பல தொழிலாளர்கள் இங்கே வந்திருக்காங்க. இங்கே வந்து மத்த தொழிலாளிங்க மாதிரியே கடுமையா வேலையும் பாக்குறாங்க. மிகைநேரப்பணிக்குரிய உற்பத்தியையும் கொடுக்கிறாங்க. அப்படி இருந்தும் அவங்களுக்கு மிகைநேரப்பணி இல்லையே! அதுக்கு என்ன காரணம்?

ஒரே பந்தியில உட்கார்ந்திருப்பவர்களில் ஒருவருக்கு வடை பாயசத்துடன் சாப்பாடு. இன்னொருவருக்கு பிரியாணிää கறிää மீன் பரிமாறுறாங்க. ஆனா அதில ஒட்கார்ந்திருக்கிற சில பேருக்கு வெறும் ரசம் சோறுதான் கிடைக்குதுன்னா இது என்ன வகைக் கலாச்சாரம்? ஒரு கண்ணில் வெண்ணை. மறு கண்ணில் சுண்ணாம்பா? ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசும்; வீராதி வீரர்களே! இதற்கும் பதில் சொல்லுங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக