திங்கள், 30 ஜனவரி, 2017

கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன

அம்பேத்கரை திரிபுவாதம் செய்யும் பிஜேபி
வேதங்களை ஆதரித்தவர் அம்பேத்கராம்

இது உண்மையா?
வேதங்கள் குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறுவதைக் கேளுங்கள்

நியமம் அல்லது சடங்குகளின் கோர்வையாக ஆரியர்களின் மதம் இருந்தது. சிறந்த வாழ்ககை வாழ வேண்டும். ஒழுக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தாகம் எழவில்லை. ஆன்மிக உள்ளடக்கம் இல்லாத மதமாக ஆரிய மதம் ஆகிவிட்டது.

ரிக் வேதத்தில் இருக்கும் பாசுரங்கள் இதற்குச் சிறந்த ஆதாரமாகும்

இந்தப் பாசுரங்கள் ஆரியர் தம் கடவுளைப் போற்றிப் பாடியவை.
 எதைக் கேட்பதற்குப் பிரார்த்தனை செய்தனர்?

ஆசைகளிலிருந்து விடுவிக்கும்படி  வேண்டினார்களா?
தீமைகளிலிருந்து நீக்கும்படி வேண்டினார்களா?
பாவமன்னிப்பு கேட்டார்களா?
இந்திரனைப் போற்றிப் புகழ்வதாக அமைந்தவை இந்தப் பாசுரங்கள்.
ஆரியர்களின் எதிரியை அழித்ததற்காக – கிருஷ்ணன் என்னும் அசுரனின் கர்ப்பிணி மனைவியை அவன் கொன்றதற்காக
அசுரர்களின் நூற்றுக்கணக்கான கிராமங்களை நாசப்படுத்தியதற்காக
பாராட்டு தெரிவிக்கின்றன.

இலட்சக் கணக்கான தஸ்யூக்களை அழித்ததற்காக இந்திரனை அவை போற்றுகின்றன.
அனாரியர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொள்வதற்காகவும் அவர்களின் தானியங்களைப் பெறுவதற்காகவும்
அனாரியர்களுக்கு இந்திரன் அழிவை ஏற்படுத்துவான் என்று இந்திரனைப் புகழ்ந்தார்கள்.
கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன

நாணயமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை குறித்து ஆரியமதம் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது

என்கிறார் அண்ணல் அம்பேத்கர்
அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்  தொகுதி 7 பக்கம் 40

கொடூரமான எண்ணங்களின் கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதத்துப் பாசுரங்கள் உள்ளன

என்று மிகத் தெளிவாக அண்ணல் குறிப்பிட்டிருந்தும் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் அண்ணல் அம்பேத்கர் வேதங்களைப் பாராட்டினார் என்று பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்றால் ஆர்எஸ்எஸ் காரர்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர்கள் என்பது புரிகிறதா? இல்லையா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக