திங்கள், 30 ஜனவரி, 2017

பாரத் மாதா கீ ஜெய்

குடியரசுதின நிகழ்ச்சியில் பாரத் மாதா கீ ஜெய் னு முழக்கம் போடுறாங்களே அது சரியா என்று ஒரு தோழரிடம் (காம்ரேடு) கேட்டேன்

அதில என்ன தவறு தோழர்?

பாரத அன்னையை வணங்குகிறேன்
என்பதுதானே அதன் பொருள்?

என்று சொன்னார்.

பாரத அன்னை என்று அவர்கள் எதைச் சொல்கிறார்கள்?

வங்கமொழியில் வெளியான ஆநந்தமடம் என்ற நாவலில் வரும் பாடல்தான் வந்தே மாதரம்

அந்த நாவலில்தான் பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கம் வரும்
ஆநந்தமடம் முழுக்க முழுக்க முஸ்லிம் எதிரப்புக் கொண்ட கதை

அந்த வந்தே மாதரத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் பாரதி

அவர் பாரத மாதா யார் என்று சொல்றார் பாருங்க

ஆலயந்தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்கு உனதே
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்து இதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ

என்று பாரதி மொழி பெயர்த்தான்

இதைத்தான் ஆர்எஸ்எஸ் காரர்கள் பாடுகிறார்கள் முழங்குகிறார்கள்

பாரதி காலத்துக்கு முந்தைய ஆர்எஸ்எஸ் காரர் என்று நாம் சொல்வதற்கு இதுபோல் பல காரணங்கள் உள்ளன

ஆனால் காம்ரேடுகளுக்கு இருக்கும் பாரதிபோதை அதையெல்லாம் சிந்திக்க விடுவதில்லை

இது குறித்து தோழர் அருணன் காலந்தோறும் பிராமணியம் என்ற நூலில் பின்வருமாறு எழுதுகிறார்

இப்படியொரு பாடலை தேசியகீதம் என்ற பெயரில் முஸ்லிம்களைப் பாடச் சொல்வது என்ன நியாயம்?
முஸ்லிம்கள் மட்டுமல்ல வேறு எந்த மதத்தவரும் இதை தேசிய கீதமாக இசைக்க மாட்டார்கள்
இது சுத்தமான பிராமணிய மதப்பாடல்
பிராமணர்களுக்கு பிராமணியமே தேசியமாக இருந்தது
ஆகவே பாரதமாதாவை இப்படிப் பிராமணிய மதக்கடவுளாகச் சித்தரித்துக் கொண்டார்கள்
அதை அவர்கள் பாடிக் கொள்ளலாம்
ஆனால் அரசாங்கப் பாடலாக்கி அனைவரையும் பாடச் சொல்வது என்ன நியாயம்?

என்று 2010 லேயே எழுதி இருக்கிறார்

ஆனாலும் காம்ரேடுகள் அதில் என்ன தவறு தோழர் என்று நம்மிடமே கேட்கிறார்கள் என்றால்

பாரதி தமிழில் மொழி பெயர்த்தான் என்பதற்காகவே இதை ஆதரிக்கிறார்களோ என்று தோன்றுகிறது

இவர்களுக்கு பாரத போதையைவிட பாரதிபோதை அதிகம் என்பதுதானே புலப்படுகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக