செவ்வாய், 27 டிசம்பர், 2016

BJP என்ற பெயரிலும் இந்து முன்னணி என்ற பெயரிலும் RSS என்ற பெயரிலும் துண்டறிக்கை ஒட்டுவது யார்

1) பிஎம்எஸ் தோற்றுப் போய் 14 ஆண்டுகளாக அலுவலகம் வழங்கியது ஏன்?
2) அலுவலகம் குறித்து பிஎம்எஸ் போட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லி இருந்தது?
3) பிஎம்எஸ் சுக்கு அலுவலகத்தை வழங்கலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததா?
4) அந்த அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் குருபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடப்பது நிர்வாகத்துக்குத் தெரியுமா? தெரியாதா?
5) பாரதமே உயிர்தெழு என்ற விவேகானந்தரின் நூலை நிர்வாகம் வழங்கியது ஏன்?
6) அதில் உள்ள கருத்துக்கள் நிர்வாகத்துக்கு உடன்பாடானதா?
7) ஜாதியை ஒழிக்க விரும்புவது வடிகட்டின முட்டாள்தனம் என்று அதில் இருக்கிறது. அதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறதா?
8) விதவைப் பெண்ணுக்கு மறுமணம் செய்யக் கூடாது என அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. அதனை நிர்வாகம் ஆதரிக்கிறதா?
9) அவரவரும் அவரவர் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று அதில் இருக்கிறது. அதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறதா?
10) செருப்புத் தைப்பவன் நாட்டை ஆள ஆசைப்படக் கூடாது என்று அந்தப் பது;தகத்தில் இருக்கிறதே அதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறதா?
11) சமஸ்கிருதம்தான் அறிவுமொழி என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறதா?
12) கிருஸ்தவர்களுக்கு எதிராகவும் இஸ்லாமியருக்கு எதிராகவும் அதில் கருத்துக்கள் உள்ளது என்பதாவது நிர்வாகத்துக்குத் தெரியுமா?
13) சுதேச மந்திரத்தை இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் சொல்லுவார்களா?
14) அந்தப் புத்தகம் வழங்கப்பட்ட நேரத்தில் அதனை நாங்கள் விமர்சனம் செய்தபோது அதற்கு எதிராக விவேகானந்தர் நல உரிமைச்ங்கம் பாரத தொழிலாளர் கழகம் என்ற பெயரில் துண்டறிக்கை வெளியிட்டது யார்?
15) நிர்வாகம் வழங்கிய புத்தகத்தை விமர்சனம் செய்தால் அதற்கு நிர்வாகம்தானே பதில் சொல்ல வேண்டும்? அதை விடுத்து இது மாதிரி துண்டறிக்கை வந்தால் அது நிர்வாகத்தின் ஆதரவுடன்தான் வந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?
16) VHP என்ற பெயரிலும் PATRIOT என்ற பெயரிலும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஆதரித்து ஒவ்வொரு ஆண்டும் துண்டறிக்கை ஒட்டப்பட்டதேää அது நிர்வாகத்துக்குத் தெரியுமா? அது மதக் கலவரத்தைத் தூண்டுவது ஆகாதா?
17) அதனை ஒட்டியது யார் என்று நிர்வாகத்துக்குத் தெரியுமா? அவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததா?
18) BJP என்ற பெயரிலும் இந்து முன்னணி என்ற பெயரிலும் RSS என்ற பெயரிலும் துண்டறிக்கை ஒட்டுவது யார்ää அதனால் மதக்கலவரம் ஜாதிக்கலவரம் தூண்டப்படுகிறது என்றாவது நிர்வாகத்துக்குத் தெரியுமா?
19) RSS  மூன்று முறை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு. அந்த அமைப்புக்கு குருபூஜை நடத்த பிஎம்எஸ் அலுவலகத்தைப் பயன்படுத்தியது சரியா?
20) திரு ரங்கராஜன் குமாரமங்கலம் தேர்தலில் நின்றபோதும் சுகுமாறன் நம்பியார் லலிதா குமாரமங்கலம் ஆகியோர் பாராளுமன்றத் தேர்தலில் நின்றபோதும் வாயிற்கூட்டம் நடத்த அனுமதி பெற்றுத் தந்த சங்கம் எது?
21) மதச்சார்பற்ற அரசின் பொதுத்துறையில் மதச்சார்பாக நிகழ்வுகள் நடக்கலாமா? எந்த ஒரு இயந்திரத்து நிறுவும்போதும் கட்டிடம் கட்டும்போதும் பார்ப்பன அர்ச்சகரை வைத்து பூஜை போட்டுத் துவக்குவது ஏன்?
22) சரஸ்வதி பூஜை ஆயுதபூஜைக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
23) 2003ம் ஆண்டு வழங்கப்பட்ட காலண்டர் முழுக்க இந்துமதக் கடவுளர் படங்களாக இருந்ததே அதனைப் பல தொழிலாளர்கள் வாங்கவே மறுத்தார்களே அந்த காலண்டரை நிர்வாகம் வழங்கியது ஏன்?
24) நிர்வாக இயக்குனரின் அறையில் அவ்வளவு பெரிய பிள்ளையார் சிலை அவசியமா?
25) மார்ச் முடிந்த உடன் ஏப்ரல் 1ந் தேதி ஏதாவது கோயிலில் இருந்து மணி செய்யவோ தேர் செய்யவோ முதல் ஆணையாகப் பெறுவதுதான் மதச்சார்பற்ற நிறுவனம் என்பதற்கு அடையாளமா?
26) இந்தக் கூட்டமே எதற்காகக் கூட்டப்பட்டது?
27) பிஎம்எஸ் சங்கத்திற்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக