வெள்ளி, 2 டிசம்பர், 2016

தொழிலாளர்கள் தற்காலிக ஊழியராக இருப்பதற்கும் அவர்களுக்கு இவ்வளவு தொல்லைகள் வருவதற்கும் நீங்களும் உங்கள் கொள்கையும்தான் காரணம்.


நிர்வாகம் சட்டப்படி நடந்து பிஎம்எஸ்ஸின் அலுவலகத்துக்குப் பூட்டுப்போட்டது. அதற்கும் திராவிடர் தொழிலாளர் கழகத்துக்கும் எந்த சம்மந்தமுமில்லை. தி.க. காரன் பேச்சைக் கேட்டுத்தான் நிர்வாகம் பூட்டுப் போட்டது என்று புலம்புகிறது பிஎம்எஸ்;.

நீங்களோ இந்தியாவிலேயே பெரிய சங்கம் என்கிறீர்! அரசியலில் எங்களுக்குத் தொடர்பே இல்லையென்று கூறிக்கொண்டு மத்தியில் ஆட்சியிலிருந்தவர்களைப் பயன்படுத்தி பெல்லுக்கு ஆர்டரே வாங்கிக் கொடுத்ததாகவும் பீற்றிக் கொள்கிறீர்!

இன்றைக்கும் கார்ப்பரேட் அலுவலகமே எங்கள் பாக்கெட்டுக்குள் என்றும் சவடாலடிக்கிறீர்!

அப்படிப்பட்ட உங்கள் அலுவலகத்துக்கு எங்கள் பேச்சைக் கேட்டுத்தான் நிர்வாகம் பூட்டுப்போட்டது என்று கூறிக்கொள்ள வெட்கமாக இல்லையா?

 எப்படியோ தமிழக அரசியலில் உங்கள் சகோதரன் பிஜேபி விரட்டப்பட்டதற்கு தி.க தான் காரணமாக இருக்கிறது. அதுபோல் இங்கேயும் நீங்கள் விரட்டப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி!

தி.க. காரன் சும்மாவாச்சுக்கும் மனுதர்மம்ää வருணாசிரமம் என்று பேசுகிறான். இப்பொழுது எங்கே இருக்கிறது மனுதர்மம்? எங்கே இருக்கிறது வருணாசிரமம்? என்று கேள்வி கேட்டு அந்த வருணாசிரமத்தை ஆதரித்துப் பேசுகிறது பிஎம்எஸ். இப்பொழுது எஞ்சினியர் சூப்பர்வைசர்ஆர்டிசான் என்று ஏற்பாடு இருப்பதுபோல அன்றைக்கும் சமுதாயத்தை நடத்துவதற்கான ஒரு ஏற்பாடுதான் வருணாசிரமம் என்று அதற்கு வக்காலத்து வாங்குகிறார் பிஎம்எஸ் பேச்சாளர் வாயிற்கூட்டத்தில்.

அதையேதான் நாங்களும் சொல்கிறோம். அதற்குப் பெயர்தான் வருணாசிரமம். அந்த ஏற்பாட்டைச் செய்ததுதான் மனுதர்மம். இன்றைக்கும் அந்த மனுதர்மப்படிதான் நம்முடைய தொழிலாளர்களும் அடிமட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்த மனுதர்மத்தில் தொழிலாளர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அந்தச் சூத்திரர்களிடத்தில் கூலி கொடுத்தோää கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம்.

சூத்திரன் தனக்கு மேலுள்ள மூன்று வருணத்தானுக்கும் எந்த வித பிரதிபலனோ கூலியோ எதிர்பார்க்காமல் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு மனமுவந்து பணியாற்ற வேண்டும் என்றுதான் மனுதர்மம் சொல்கிறது. அந்த சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுதர்மம். சூத்திரன் சொத்து வைத்துக்கொள்ள உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

அந்த மனுதர்மத்தின்படிதான் இன்றைக்கு நமது நிறுவனத்தில் உடலுழைப்புத் தொழிலாளர்கள் எல்லோருக்கும் கீழ்நிலையில் வைக்கப்பட்டு அவர்களை முதலில் நிரந்தரமாக எடுக்கப் போவதாக அறிவித்துää பின்னர் ஒரு ஆண்டு தற்காலிகம் என்று சொல்லி அதிலும் திருப்தியடையாத டெல்லி எஜமானர்கள் மூன்று ஆண்டு தற்காலிகம் என்று எடுத்து அதற்குப்பிறகு அதனை ஒரு வருடம் என்று குறைத்து அதிலும் திருப்தி அடையாமல் இப்பொழுது எழுத்துத் தேர்வுää செய்முறைத்தேர்வு என்று அவர்களை வஞ்சித்து வருகிறார்கள். இது அனைத்துக்கும் காரணம் மனுதர்மம்தான். அந்த மனுதர்மப்படி செய்யப்பட்ட ஏற்பாடுதான் வருணாசிரமம். அந்த மனுதர்மத்தைத்தான் (12-08-2013) அன்று நடந்த வாயிற்கூட்டத்தில் ஆதரித்து உரையாற்றுகிறார் பிஎம்எஸ் பேச்சாளர்.

அவர்கள்தான் தற்காலிக ஊழியர்களின் பிரச்சினைக்கு என்ன காரணம்? என்ன காரணம்? என்று கேட்டு எதுவுமே தெரியாததுபோல் நடிக்கிறார்கள். தொழிலாளர்கள் தற்காலிக ஊழியராக இருப்பதற்கும் அவர்களுக்கு இவ்வளவு தொல்லைகள் வருவதற்கும் நீங்களும் உங்கள் கொள்கையும்தான் காரணம். உங்களைப்போலவே மனுதர்ம மனப்பான்மை உள்ள கார்ப்பரேட் அதிகாரிகள்தான் காரணம். எனவேää உங்களை அம்பலப்படுத்தும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை.

  இவண்        
பெல் பெரியார் தொழிலாளர் நல உரிமைச்சங்கம். (பதிவு எண் : 460)     இணைப்பு :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக