ஞாயிறு, 18 டிசம்பர், 2016

இராமராஜ்யம் வந்தால் என்ன மாற்றம் வந்துவிடும்?


RSS, BJP, BMS கும்பலின் இலட்சியம் இராமராஜ்யம் அமைப்பதுதான். அப்படி இராமராஜ்யம் வந்தால் என்ன மாற்றம் வந்துவிடும்? இதுவரை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்றுள்ள  முன்னேற்றங்கள் எல்லாம் தடுக்கப்படும். சூத்திரன் கல்வி கற்க உரிமை இருக்காது. செல்வம் சேர்க்க உரிமை இருக்காது. கடவுளை நோக்கி வணங்குவதற்கும் உரிமை இருக்காது.

இராமனின் இராஜ்யத்தில் சம்புகன் என்ற சூத்திரன் கடவுளை நோக்கி தவம் இருக்கிறான். அதனால் ஒரு பார்ப்பனச் சிறுவன் இறந்துவிட்டான் என இராமனிடம் முறையிட சூத்திரன் தவம் இருப்பதற்கும் பார்ப்பனச் சிறுவன்; சாவிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று யோசிக்காமல் இராமனே காட்டிற்குச் சென்று தவமிருக்கும் சம்புகனின் தலையை வெட்டிக் கென்று விடுகிறான். உடனே இறந்துபோன பார்ப்பனச் சிறுவன் பிழைத்து விடுகிறான் என்று வால்மீகி இராமாயணம் சொல்கிறது.

(ஆதாரம் : அண்ணல் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 8)

அப்படியானால் பார்ப்பனரல்லாதார் யாரைக் கடவுளாக வணங்க வேண்டும்? பசுக்களையும் பார்ப்பனர்களையும்தான் வணங்க வேண்டும். துளசிதாஸ் இராமாயணத்தில் பாலகாண்டத்தில் இராமனே சொல்வதுபோல் ஒரு வசனம் உள்ளது

“இந்த உலகத்தில் மதிப்பிற்குரியதாகச் செய்யக்கூடிய நல்ல செயல் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. நான் சொல்கிற இந்தச் சங்கதியை எதனோடும் ஒப்பிட முடியாது. அது பார்ப்பனர்களின் காலடியைத் தொழுவதுதான். முதலில் பிராமணர்களின் காலடியைத் தொழ வேண்டும். அடுத்து ரிஷிகள், மூன்றாவது முனிவர்கள். அப்பொழுதுதான் கடவுளுக்கு மகிழ்ச்சி வரும்”

என்று இராமனே சொல்வதாக வசனம் இடம் பெறுகிறது.

அது என்ன பிராமணர்கள், ரிஷிகள்மு, னிவர்கள்? பூ, புஷ்பம், மலர் இந்த மாதிரிதான். மொத்தத்தில் பார்ப்பானை வணங்க வேண்டும்.
இராமனுக்கு யாரைப் பிடிக்கும்? யாரைப் பிடிக்காது? அதையும் துளசிதாஸ் இராமாயணம் பாலகாண்டம் சொல்கிறது

“யார் பிராமணர்களின் காலடிகளைத் தொழுகிறார்களோ அவர்களை எனக்குப் பிடிக்கும். யார் பிராமணர்களை வெறுக்கிறார்களோ அவர்களை எனக்குப் பிடிக்காது” என்று இராமன் சொல்கிறான்.

ஆக இராமராஜ்யம் அமைக்க வேண்டும் என்று சங்பரிவார்க் கும்பல் ஏன் பாடுபடுகிறது என்பது இப்பொழுது புரிகிறதா?
இதில் பார்ப்பனர்கள் அதற்காகப் பாடுபடுவதில் பொருள் இருக்கிறது.

பார்ப்பனரல்லாதாரும் இதற்காக உழைப்பது எதற்காக?
பார்ப்பானுக்கு பார்ப்பனரல்லாத அனைவரையும் அடிமையாக்குவதே!
பிராமணா மமதேவதாஹா என்பதன் பொருள் இதுதான். இதைச் சொன்னால் ஒரு பார்ப்பனரல்லாதார் மனம் புண்படுகிறது என்றால் அவரது மனப்பான்மை எப்படிப்பட்டதாக இருக்கும்? RSS, BJP, BMS  ல் சேர்ந்து உழைக்கும் தொழிலாளர்களே!  சிந்திப்பீர்!


1 கருத்து: